நீண்ட ஆயுளும், குறைவில்லாத ஆரோக்கியமும், நிறைந்த அன்பும், நடுங்க விடாத செல்வமும், குற்றம் சொல்லாத சுற்றமும், தேவையில் துனை நிற்கும் நட்பும், குன்றாத சந்தோஷமும் என்றும் கிடைக்க அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு :)
Disclaimer : I am not responsible if you find something interesting...
P.S: Dreamzz எழுத சொன்ன கவிதை(???) tag இது. போதும்டா சாமி. நம்மால முடியாது. சாதா tag எழுதவே பாதி முடியை பிச்சிக்க வேண்டி இருக்கு. இந்த மாதிரி கவிதை tag நாலு எழுதினா சோ தலை மாதிரி ஆயிடும் என் தலை,இப்பவே பாதி சோ மாதிரி தான் இருக்கு :(
ஆகவே நண்பர்களே, நல்லவர்களே எந்த problemஆ இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். இப்படி எக்கசெக்கமா மாட்டி விட்றாதீங்க.
அதனால நல்ல பையனா நான், குட்டி பொண்ணு ரம்யாவ மட்டும் மாட்டிவிட்டுட்டு escape :)
கொசுறு:
பேசுகிறேன்... பாட்டுல வர lines இது. எனக்கு ரொம்ப பிடிச்சது.
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
P.S: கவிதைக்கு (???) comment போடுற மாதிரி ஒரு கஷ்டமான வேலை இருக்குமான்னு தெரியல. கண்டிப்பா 'நல்லா இருக்கு'ன்னு தான் சொல்லனும். நல்லா இல்லனு சொல்லிட்டு இந்த இடத்தை விட்டு போயிட முடியுமா என்ன. auto, lorry ஏன் இப்பலாம் சொந்தமா flight செஞ்சி வீட்டுக்கு வரும். எல்லாருமே நல்லா இருக்குன்னு சொன்னா அதுல எதாச்சும் உள்குத்து, orkutu இருக்கான்னு தெரியாது.
நிஜமாக 'நல்லா இருந்து' எல்லாரும் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னதுக்கு அப்புறம் நாமலும் போய் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னா அந்த 'நல்லா இருக்கு'க்கு effect இருக்குமா (இது பற்றி குரு கிட்டக்கூட கேட்டேன்). நாம படிக்காமலயே 'நல்லா இருக்கு'ன்னு சொன்னதா நெனச்சிடுவாங்களோ.
எவ்ளோ கஷ்டமப்பா!
இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுலயும் நீங்க எல்லாம் பொறுமையா comment போட்டுட்டு போறீங்க பாருங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
ரொம்ப நன்றி ஹை !
Update: @இதுவரை_comment_போட்ட_பாச_மலர்களே....5வது weird சற்றே sentiயாக போனதால், அதற்கு பதிலாக வேறொரு wierd (நான் தான் சொன்னேல்ல...weirdக்கு பஞ்சமில்லைன்னு) போட்டிருக்கேன். அதையும் படிச்சிட்டு புதுசா comment போடுங்க. (மனசாட்சி: ஏண்டா, comment வாங்கறதுக்கு இதெல்லாம் ஒரு வழியா, உருப்படவே மாட்ட நீ...)
இன்னாடா இவன் காக்கா வலி வந்தவன் கணக்கா கூவிகினு இருக்கானேனு மெர்சலாயிட்டீங்களா, காக்கா வலி இல்ல நைனா, தீவாளி.
தீவாளி, தீவாளின்னு ஒரு தலவலி பட்துலதான் இந்த பில்டப்பு டயலாக்கு எல்லாம். heroக்குதான் இத்தா தாண்டி பில்டப்பும். ஆனா காசு குட்த்து பாக்க வந்த நம்மல பாத்து கூவுற மாரியே இர்க்குபா. அத்தும் அந்த நாலம் டயலாக்கு நம்க்குதான்.
போன எட்துல பொங்கலு, சே, தீவாளி குட்த்துடானுங்கோ.
இன்னாத்துக்கு இந்த பட்துக்கு தீவாளினு name வச்சானுங்கோ. டைரக்குடக்கரு பொற்கொடி post பாத்து conceptஅ கபால் பண்ணிட்டாரு போல...ஹி...ஹி
சீக்காளி மாரி இருக்ர பட்துல சோக்காளி கணக்கா இருக்ர ஒரே matter, நம்ம டாவுதான். இன்னா அழ்கு, இன்னா அழ்கு. ஆன்னு பாக்கசொல்ல ஈ ஒன்னு வாயாண்ட போயிடிச்சிபா...அக்..கும்
ஏழு வண்ணங்களின் நிறமா நீ
விண்மீண் தாவரத்தின் விதையா நீ
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ
என்ன நீ...என்ன நீ
பி.கு: கபிலன் நம்ம டாவுக்குன்னே ஷோக்கா எழுதிகின பாட்ல வர்ர lines இது நைனா. இன்னாமா எழுதறாங்கோ. எல்லாம் மொக ராசி.
ஏண்டா கசுமாலம், நீ ஜொள்றதுக்கு ஒரு போஸ்டா. நீ சரக்கு அடிக்க நாங்க ஊறுகாயான்னு கோச்சிகாம comment வாரி குட்த்துட்டு போங்க சாமிங்களா :)
Update: இந்த relay கவிதையை (???) நம் கட்சியின் கொ.ப.செயும், துணை முதல்வருமான வேதா அவர்கள் தொடர்ந்து எழுதுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன் (கரகோஷம்...)அமைதி, அமைதி. அடுத்து நம் கட்சியின் சிங்கங்கள் அனைவரும் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்..... ஹி...ஹி....
சரி first caller கிட்ட பேசுவோமா.
MM: ஹலோ, யார் பேசறீங்க?
(no sound)
AA: ஹல்ல்ல்லோ, யார் பேசறீங்க?
K(கணவன்): நீங்க சூப்பரா இருக்கீங்க மேடம். ரொம்ப நாளா try பண்றேன்.
AA: ஹ..ஹ..ஹ...அப்படியா, நான் ஏற்கனவே committed. உங்க பேர் என்ன?
K: என் பேர் அஜித் மேடம். உங்க voice சூப்பரா இருக்கு.
AA: ஹ..ஹ..ஹ...நான் பல் தேய்கறதே இல்ல. அதான்.
MM: சரி போட்டியை ஆரம்பிப்போமா?
(no sound)
AA: நிகல்ச்சிக்கு போலாமா அஜித்.
K: 'ஆழ்வார்' படத்துக்கு போலாம் மேடம்.
AA: ஹ..ஹ..ஹ...நீங்க ரொம்ப comedy-ஆ பேசறீங்க.
MM: உங்க மனைவி இருக்காங்களா, அஜித்.
K: இருக்கா இருக்கா. மேடம் நீங்களே பேசுங்க. இந்த ஆள் எதுக்கு நடுவுல மொக்க போடுறான்.
AA: உங்களுக்கு situation தெரியும்ல, ஆரம்பிங்க.
K: ஏண்டி, எங்க அம்மா ஊர்ல இருந்து வந்தா, அவங்க விரல வெட்டிடுவியா நீ.
M(மனைவி): யோவ். நான் எங்க வெட்டினேன். அவங்கதான் நெகம் வெட்டினாங்க. அதுல சும்மா ரவோண்டு கிழிச்சிடிச்சி.
K: அது எப்படிடி தானா வெட்டும். நீ எதாச்சும் பண்ணி இருப்பா.
M: ஆமாம். நான் பூரியும் மசாலாவும் பண்ணி இருக்கேன். வந்து கொட்டிக்க.
K: தாலி கட்டின புருஷன்கிட்டயே எதுத்து பேசறியா. (பொளேர்)
M: குடிகாரா. குடிகாரா, dailyகி உங்கூட இதே ரோதனையா போச்சி. உங்க ஆத்தா வெட்டிகிட்டதுக்கு நான் என்னய்யா பண்ணுவேன்.
K: என்னடி திரும்ப திரும்ப எதுத்து பேசற. வெளிய போடி. வீட்ட விட்டு வெளிய போடி....
MM: சரி நேயர்களே. இன்னொரு குடும்பத்துக்கு குண்டு வச்சாச்சி. அந்த சந்தோஷத்த கொண்டாட இதோ ஒரு super hit பாடல்.
(அம்மாடி ஆத்தாடி....)
p.s:
நான்: தாயே, இந்த மெகா சீரியல்ல இருந்தும், phone போட்டு பாட்டு dedicate பண்ணி மக்களை கொல்ற நிகழ்ச்சியில இருந்து காப்பாத்து தாயே.
கடவுள்: மகனே, நான் 'ராஜ ராஜேஸ்வரி'யிலயும், 'வேப்பிலைக்காரி'யிலயும் busy scheduleல இருக்கேன். 2010 வரைக்கும் no dates. வேனுன்னா இப்பதிக்கு உனக்கு புடிச்ச பாட்டு சொல்லு, dedicate பண்றேன். என்னால அவ்ளோ தான் முடியும். எல்லாம் என்னோட சக்திய மீறி போயிடிச்சி மகனே.
நான்: ?*&%*&^%()%$##%
கேட்டு ரசிக்க
Kaadhal Vaithu
படித்து ரசிக்க
[பல்லவி]
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகால் அய்யோ தொலைந்தேன்
[சரணம் 1]
தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்தபின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்
[சரணம் 2]
உன்னை கண்டநாள் ஒளிவட்டம்போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேசவைத்தாய்
கடிகாரம் வீசவைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில்கூட ரசிக்க வைத்தாய்