Friday, October 27, 2006

நான் என்ன சொல்ல வரேன்னா

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள
சொர்க்கம் இருக்கு

அட சின்ன சின்ன அன்பில்தானே
ஜீவன் இன்னும் இருக்கு


Going Home. Catch You All From The Livelier Chennai :)

Thursday, October 26, 2006

பாட்டு மச்சி பாட்டு

This is a superb song (Ettil Azhagu from Poo Parika Varugirom) from Vidyasagar, composed when he was not famous. I personally feel that VS gave best of songs when he was not so popular. Now he has lost his touch after becoming so famous.

கேட்டு ரசிக்க...


Powered by Castpost

படித்து ரசிக்க...

பல்லவி

எட்டில் அழகு பதினெட்டில் அழகு
எந்த பெண்ணும் இருபதில் ரெட்டை அழகு

பெண்ணின் அழகே உச்ச அழகு
பூமியில உள்ளதெல்லாம் மிச்ச அழகு

ஆடை அழகு பாதி அழகு
அந்த சொல்லை மாற்றியது பெண்ணின் அழகு

பெண்ணை கொண்டு கூடியது மண்ணின் அழகு

சரணம் 1

உதட்டை மூடி சிரிப்பதழகு
உதிரிப்பூக்கள் தொடுப்பதழகு

மணநாள் குறித்ததும் தேதி தாள்களை திருப்பி பார்ப்பது ஓர் அழகு

வானொலியோடு பாடும் அழகு
பாடிக்கொண்டே சமைப்பதழகு

தாமரை இலையில் நீர் அழகு
அட தாவணி பெண் போல் யார் அழகு


[எட்டில்...]

சரணம் 2

பின்னல் ஜடையை பிரிப்பதழகு
தன்னை தானே ரசிப்பதழகு

நல்ல ஆணின் அழகினை ரசிக்கும் பெண்களின் ஓர பார்வைகள் ஓர் அழகு

காதல் பெண்ணின் மிரட்டல் அழகு
ஹய்யோ ஹய்யோ அலட்டல் அழகு

ஒவ்வோர் பெண்ணும் ஒர் அழகு
அந்த ஒன்றுக்குள்ளே நூறழகு


[எட்டில்...]

P.S: பசங்களே இப்படியே ஜொள்ளிக்கிட்டே இருந்தோம்னு வச்சிக்கங்க
Year 2030: கடந்த ஐம்பதாண்டுகள் போலவே இந்த வருடமும் +2 தேர்வில் மாணவர்களைவிட மாணவிகள் அதிக சதவிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Thursday, October 19, 2006

தீபாவளி..தீபாவளி..தீபாவளி

எல்லாருக்கும் என்னோட தீபாவளி வாழ்த்துக்கள்.

உங்களுக்கு, உங்க வீட்ல உள்ளவங்களுக்கு, உங்க ஒன்னுவிட்ட சித்தப்பாவோட பெரியப்பா பையனோட ரெண்டாவது பொண்ணுக்கு, உங்க மாமாவோட ரெண்டாவது மச்சானோட மூனாவது பையனுக்கு எல்லாருக்கும் சொல்லிடுங்க.

நீங்க சைட் அடிக்கிற, உங்களை சைட் அடிக்கிற, சைட் அடிச்சி அடிவாங்கின, சைட் அடிச்சவங்களோட கல்யாணுத்துக்கே போய் அட்சதை போட்ட தியாக செம்மல்களுக்கும், பகோடா சாப்டுறவங்க, பல் இல்லாதவங்க எல்லாருக்கும் சொல்லிடுங்க.

வீட்ல இருக்கற சிண்டு, சிமிழுங்க எல்லாம் வந்து தீபாவளி வாழ்த்து வாங்கிக்கங்க.

அப்புறம் நாள மறுநாள் வந்து பரணி வாழ்த்து சொல்லலன்னு குறை பட்டுக்ககூடாது...ஆமாம்.

உள்ளூர்ள்ள இருக்கறவங்களே, யூஎஸ்-ல இருக்கறவங்களே, ஊருக்கு போறவங்களே, லீவ் கெடைக்காம போறவங்கள பார்த்து வயிறு எறியறவங்களே, எல்லாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

பாத்து பத்திரமா வேட்டு வையுங்க (அடுத்தவங்களுக்கு இல்ல). அந்த வேட்டோட உங்க கவலைகள் எல்லாம் வெடிச்சி சிதறிடனும்.

நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்துங்க. அப்படியே மிச்சம் மீதி ஸ்வீட் இருந்தா இந்த பக்கம் கொஞ்சம் அனுப்பி வையுங்க

ஆவலுடன் எதிர்பார்த்து,
பரணி

என்னன்னு சொல்லறது

After reading the Anbe Sivam sequence in this post of Veda, i wanted to watch the movie again. So downloaded and watched today. I loved madhan's dialog in kamal-madhavan scenes.

See this scene, when kamal and madhavan waiting to catch the coromondal express...

K: இந்த மழையில எதாச்சும் ஒரு class-ல போய் சேர்ந்தா போதாதா
M: அட போங்க சார் நீங்க வேற, பணம் குடுத்தாகூட வசதி கெடைக்காத ஒரு நாடு இது. Thats India for you.
K: பணம் குடுத்தா எது வேணா, எப்ப வேணா கெடைக்கும் நெனைக்கிறவங்க இருக்கற வரைக்கும் that will be India for you.
M: ஆமா, உடனே உலகத்திலயே எல்லாத்தவிட நல்ல நாடு soviet union-னு சொல்லுவீங்களே.
K: இல்ல நீங்க அப்படி சொல்ல முடியாது.
M: அப்படி ஒத்துக்கங்க நீங்க. நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலனாலும் soviet union ஒரு முழு நாடே இல்ல. ஒடஞ்சி சுக்கு நூறா போயிடிச்சி. இப்ப sovient union, sovient union-னே இல்லன்னா, communisum-e இல்லனு அர்த்தம் இல்ல அப்புறம் ஏன் அதை பத்தியே பேசிகிட்டு இருக்கீங்க
K: Mr. Romeo, இப்ப தாஜ்மகால் இடிஞ்சி போச்சின்னு வச்சிக்கங்க, நீங்க எல்லாம் love பண்றத நிறுத்திடுவீங்களா?
M: Ok. very clever, very clever. But Mr. Red ...Loveeee.... is a feeling
K: Communisum-um அப்படித்தான் ஒரு feeling. Karl Marx அதை பத்தி எழுதரதுக்கு முன்னாடியே பல பேருக்கு அந்த feeling வந்தாச்சி, ஆனா Karl Marx தான் அதை பத்தி எழுதினாரு. ஒரு தத்துவமா மாத்தினாரு. இதெல்லாம் பத்தி உங்ககிட்ட பேசக்கூடாது. முக்கியமா நீங்க அதபத்தி பேசக்கூடாது.
M: ஏன்?
K: ஏன்னா... train வந்துடிச்சி
M:ஓ. train வந்துடிச்சி...ஓ
(Madhavan walks some distance and comes back)
M: ம்ம்ம். நான் ஏன் கேக்ககூடாது?
K: சொன்னா தாங்குவீங்களா?
M: ofsourse go ahead and hit me
K: Because you are selfish coolie
M: Excuse me??
K: வெளிநாட்டு கம்பெனிகள் சம்பாரிக்கறதுக்கு tooth pastu, cool drinku, soapu இதெல்லாம் television-ல கூவி விக்கிறவர்தானே நீங்க
M: Mr.Sivam..that is my business...okie??
K: சரி business business-னு எல்லாத்தயும் வித்துடீங்கன்னா, இப்பவே அவன் மஞ்சள், பாஸ்மதில்லாம் தன்னுதுன்னு சொந்தம் கொண்டாடுறான். நீங்க பாட்டுக்கும் காசு குடுக்கறானேனு குனிஞ்சி குனிஞ்சி சலாம் போட்டுக்கிட்டு இருந்தீங்கன்னா, உங்களுக்கு இருக்கறது முதுகு தண்டா, rubber துண்டான்னு சந்தேகம் வருமுல்ல
M:listen, dont get personal okie. ஒன் மூஞ்சியும் மொகரகட்டயும் வச்சிகிட்டு... ஒன் கை கால் வேற வெலங்கல... ஒனக்கு பயங்கரமான திமிரு தான்யா
K: இது மட்டும் personal இல்லயா
M: அது....ya..ya....you started it
K: சரி start பண்ணிட்டேன், முடிக்கனும் இல்ல..ஒன்னு சொல்றேன் கேட்டுக்கறீங்களா....கோவப்படாம
M: சொல்லுங்க
K: Sparrows pyramid கட்டினாங்க இல்ல அப்ப கல்லு சுமந்த அடிமைகளுக்கு சமானம் நீங்கல்லாம். Multinational company காரன் தூக்கி போடுற எலும்புதுண்ட...
M: பொறிக்கி திங்கிற நாய்ன்றீங்களா?

யாரோ செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி இருந்துச்சி

Tuesday, October 17, 2006

பாட்டு மச்சி பாட்டு

Found the downloadable version of this song (Vazhi Vidu from Paatu Paadavaa). Superb music by Illayaraja as usual and excellent singing by S.P.B.

Though i like illayaraja as a singer also, this is one song which he should have easily avoided singing and given to Yesudaas or some other singer. As SPB sings part of this song, illayaraja sounds little dull. IMO a small glitch of this song is illayaraja's singing, but who cares, he rocks in the tune and Vaali complements him in lyrics.

As usual for those who want to listen


Powered by Castpost

For those who like to read lyrics, here it goes

பல்லவி

வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்

விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்

எவன் அவன் வாசலை அடைப்பது
இடையினில் திரையினை விரிப்பது
எவன் அவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினை தடுப்பது

என் இதய கோயிலில்
கதவில்லை கதவில்லை

சரணம் 1

பனிமலர் விழிவழி பாவை சொல்வாள் கேட்காத சேதிகள்..ஓ
தினசரி அவள் வர ஏங்கும் எந்தன் நாள் காட்டும் தேதிகள்..ஓ

என் மீதுதான் அன்பையே பொய்மாரியாய் தூவுவாள்
என் நெஞ்சயே பூவென தன் கூந்தளில் சூடுவாள்

நாள்தோறும் ஆராதனை செய்கின்ற தேவியே
என் மூச்சிலே வாழ்கிறாள் என் ஜீவன் மேவியே

நாளும் சிங்கார தேரை நான் கூட...

[வழி விடு]

சரணம் 2

மனநிலை சரியில்லை பாவம் என்று பாசங்கள் காட்டுவாள்..ஓ
மருத்துவன் ஒருவனும் ஆற்றிடாத காயங்கள் ஆற்றுவாள்..ஓ

பூம்பாவையின் சேவைகள் பொன்னேட்டிலே ஏறுமே
பூலோகமே போற்றியே பூபாலமாய் பாடுமே

ஓர் நாள் அவள் வாராவிடில் என் பார்வை தூங்கிடாது
நான் வாழவே வான்நீங்கியே முன் தோன்றும் தேவமாது

ஆடை மேல் ஆடும் பூவை நான் காண...

[வழி விடு]

Monday, October 16, 2006

Pudhiya Thathuvam 10001

Never lie, steal, cheat or drink.

If you must lie, lie in the arms of one you love.
If you must steal, steal away from bad companies.
If you must cheat, cheat death.
If you must drink, drink in the moments that take your breath away.

Courtesy: 800BC-yila vaazhnda oru periya mahaan. Have a blasting week ahead. Diwali varudhula adhan :)

Saturday, October 14, 2006

Random Picks

Love your friends not their sisters.
Love your sisters not their friends.

********************************

A man got 2 wishes from GOD.
He asked for the Best wine and Best Woman.
Next moment, he had the Best Wine and Mother Teresa next to him.

Moral : BE SPECIFIC

*******************************

If you do NOT have a Girl Friend - You are missing SOME thing in your life.
If you HAVE a Girl Friend - You are missing EVERY thing in your life.

********************************

P.S: Picked from a fwd from a friend. Have a great weekend guys :-)

Thursday, October 12, 2006

கேட்டதில் பிடித்தது

இரும்பில் செய்த ஆயுதம் எல்லாம்
என்மேல் விழுந்து உடைந்ததே

கரும்பில் செய்த ஆயுதம் ஒன்று
என் உயிரை அறுத்ததே

மனது என்ற ஆயுதம் கொண்டே
மனித கூட்டம் வளர்ந்தது

மனது என்ற ஆயுதம் கொண்டு
தன்னை தானே வதைத்தது

P.S: Vattaram padathukaaga Vairamuthu ezhudhiyulla paathu idhu. Bharadwaj avar gemini-yila pota "Pennoruthi" paata konjam slow-a potu indha patta mudichitaru.

Nice song to listen....especially when you feel bored in office.

To listen to this song click here. On the loaded page click on the link "Idhu Kadhal Kadhal". A player page will get displayed. This will detect the player settings.... Ada pavingala...Code-a vida document adigam adika vachathoda effect-a paarunga :(

Monday, October 09, 2006

100வது பதிவு

பரணியின் 100வது பதிவிற்க்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். நான் பாவ்னா. பரணியின் புது P.A

100வது பதிவிற்க்காக பரணியிடம் ஒரு சிறிய பேட்டி. பேட்டி காண்பது நானும், அவரது மனசாட்சியும்

Ready. Start. Camera. Action

பரணி: நான் உங்களுக்கு மறைக்கிறேனா?

பாவ்னா: என்ன உளர்றீங்க?

ப: இல்லமா, camera-ல நான் உனக்கு மறைக்கிறேனானு கேட்டேன். ஹி..ஹி..ஹி

மனசாட்சி: டேய் டேய், வழியாதடா. இந்தா வாயை தொடச்சிக்க

பா: இந்த blog-அ ஏன் ஆரம்பிச்சீங்க?


ப: நல்ல கேள்வி. இது மாதிரி அறிவுபூர்வமா கேள்வி கேட்கறதுனாலதான் நான் உன்னை P.A வா select செஞ்சேன். ஹி..ஹி..ஹி.

நான் இந்த blog-அ ஏன் ஆரம்பிச்சேன்னா அது என்னோட சின்ன வயசு ஆசை.

பா: ஆஆஆஆ

ம: டேய் டேய், எத்தனை பேருடா கெளம்பி இருக்கீங்க. சின்ன வயசுல குச்சி முட்டாயிக்கு ஆசபட்டேன். குருவி ரொட்டிக்கி ஆசபட்டேன்னு சொல்லு. அத வுட்டுட்டு blog-க்கு ஆசபட்டேன், bill gates பொண்ணுக்கு ஆசபட்டேன்னு சொன்ன கொலவுழும் மவனே.
college third semester C lab-la mouse புடிக்க தெரியாம பக்கத்தில இருக்கவரன் எப்படி புடிக்கிறான்னு பார்த்த மறந்துட்டியாடா??

பாப்பா பாரு பயந்து போயிடிச்சி. நீ அடுத்தத கேளும்மா.

பா: இந்த blog-oda purpose என்ன?

ப: ஒரு சிந்தனை சிற்பியோடா சிந்தனைகளை ஒரு சின்ன மூளைக்குள்ள அடைச்சி வைக்க எனக்கு விருப்பம் இல்லை.

ம: என்னது சிந்தனை சிற்பியா, அப்ப "ரகசியமானது காதல்" பாட்டு போட்டது நீதானா?

ப: டேய், நீ too much-ஆ பேசுற.
ம: நீ என்ன too much-ஆ பேசவக்கிற.

பா: ஆரம்பிச்சி ஒரு அஞ்சாறு மாசம், யாருமே படிக்காம blog-அ ஓட்டினீங்களாமே.

ப: அப்படின்னு யார் சொன்னது. ஒரு blog நடத்தறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?. எவ்ளோ blog படிக்கனும், எவ்ளோ comments படிக்கனும், நாட்டாமை blog-la comments படிக்கறதுக்கே எவ்ளோ நேரம் ஆகும் தெரியுமா, எவ்ளோ comments போடனும், first comment போட்டா மறக்காம புளியோதரையும், சுண்டலும் கேட்கனும், அப்படி கேக்களன்னா பிரியா அவங்களே சாப்ட்டுடறாங்க.....இவ்ளோ கஷடத்துக்கு நடுவுல நம்ம blog-ல post போடனும். ஒரு post , ஒரு post போட்டுபாரு அந்த கஷ்டம் தெரியும்.

ம: கடைசி வரைக்கும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையேடா....

பா: எப்ப உங்களுக்கு comments வர ஆரம்பிச்சித்து

ப: நான் படுற கஷ்ட்த்த பார்த்துட்டு நண்பர் பாலா, முதல் comment போட்டு ஆரம்பிச்சி வச்சார். அந்த நல்ல நேரம், அதுக்கு அப்புறம் Karthik mams, country tortoise Syam, Filbert, karuthu kandamami Subha, MS, தெரிந்தும் தெரியாத Vaishav, தோழி சசி எல்லாருடைய நட்பும் கெடச்சது.

இப்ப அந்த வட்டம் பெரிதாகி, தோழர்கள் ambi, dreamzz, golmaal Gopal, Prasanna, deepikadiyaan Karthik தோழிகள் g3, பொற்கொடி, Prithz, Priya, Pavithra, Marutham, Oliveoyl ன்னு போயிட்டிருக்கு. அவர்கள் அனைவருக்கும் என் நன்றியை சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

ம: இவங்க எல்லாம் போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணியிருக்காங்கடா....இல்லாட்டி இப்படி ஒரு சோதனை அவங்களுக்கு வருமா...

பா: எவ்ளோ குப்பயா எழுதினாலும், எல்லாரும் நல்லா இருக்குன்னு comment போடுறாங்களே, காசு கீசு குடுத்து comment போட சொல்றீங்களோ?

ம: ஹா ஹா ஹா. நல்ல கேள்வி. இது மாதிரி அறிவுபூர்வமா கேள்வி கேட்கற்துனாலதான் அவன் உன்னை P.A வா select செஞ்சியிருக்கான்.

ப: பாவம் புள்ளனு அவங்களா பாத்து நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போறாங்கம்மா . அன்பும்மா அன்பு !!!

பா: கடைசியா மக்களுக்கு எதாச்சும் சொல்ல விரும்பறீங்களா?

ப: இந்த வலைப்பதிவை படித்த, படிக்கும், படிக்க போகும் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள் பல.

ம: போட்டாண்டா ஒரு senti...இதனால தாண்டா நீ உயிரோட இருக்கே.

Friday, October 06, 2006

java.lang.reflect

என்னைப்பற்றி என்ன weird-a எழுதுவது என்று தெரியவில்லை. பல நேரங்களில் நான் செய்வது எல்லாமே weird-ஆகத்தான் இருக்கும்.

சரி கொஞ்சம் refine பண்ணி எழுதனும்மா, என்னை tag செய்த priya எழுதினத அப்படியே அபேஸ் பண்ணணும். சரி weirdக்கா பஞ்சம், மீதி இருக்கறதில ஒன்னு, ரெண்டு எழுதுன்னு மனசாட்சி சொல்லுது. அதனால ஒன்னே ஒன்னு.

எப்போதும் அமைதியாக இருப்பது (அ) கையாலாகாத்தனம்

scene 1:
பரணி, இந்த book-a நான் எடுத்துட்டு போறேன்.
நான் பாதி படிச்சிகிட்டு இருக்கேன்.
பரவாயில்லை நான் படிச்சிட்டு தரேன்
????

scene 2:
இந்த seat என்னோடது
எங்க ஒன் பேர் எழுதிவச்சி இருக்கியா என்ன?
நான் kerchief போட்ருக்கேன்
இதான உன்னோட kerchief-u, இந்தா வச்சிக்க
????

scene 3:
பரணி, வாடா beach-ku போலாம். bore அடிக்குது
இல்லடா, வீட்ல் எங்கயோ கடைக்கு போனுன்னு சொன்னாங்க.
நீ போய் என்ன பண்ண போறா. பசங்க எல்லாம் வராங்க, நாங்க வந்து pickup பண்ணிக்கறோம். ready-a இரு.
????

scene 4:
டேய் வரியா beach-ku போலாம். bore அடிக்குது
இல்லடா பரணி. வீட்ல் எங்கயோ கடைக்கு போனுன்னு சொன்னாங்க. என்னால இன்னைக்கு வர முடியாதுடா
ok. பரவாயில்லடா ?????

scene 5:
bharani, you need to work in this java project
i have been working in this technology for around 2 years, i dont want to change to java now. i want to continue in this technology only.
why are you talking so stupid. You should not confine yourself into technologies. you should be a consultant. you should not depened on technologies.
But....
No but. You are working on this project. I need the project plan by end of this week,
????

scene 6:
bharani, you are going to offshore this month end.
but i came here just 2 months back, and you ppl told me its long term.
so what, we have committed to client. you need to go back.
but....
client is more important than any personal reasons...you are going....plan accordingly
????

மக்களே, நல்ல தெளிவா புரிஞ்சி இருக்குமே.

ரவுத்திரம் பழகு-ன்னு பாரதி சொன்னதோட அர்த்தம் நல்லா தெரிஞ்சி இருந்தாலும், நடைமுறை வாழ்க்கையில் அதை நான் பயன் படுத்துவதே இல்லை.

இது வரமா......சாபமா.....????

Wednesday, October 04, 2006

கனவுகள் பெரிய கனவுகள்

நான் கனவு காண்பதே கொடுமையான விஷயம் தான். இதில் கொடுமையான கனவுக்கு எங்கே போவது karthik mams.

என்னோட கனவுகள் பற்றி எப்பவோ இங்கே எழுதியிருக்கேன். அதில் இருக்கும் விஷயங்கள் இன்னும் உண்மை.

என்னோட கனவுகள் இரண்டு வகை. பயமுறுத்தும் கனவுகள். பரவசமூட்டும் கனவுகள்.

பயமுறுத்தும் கனவுகள் எல்லாம் vadivelu comedy வகை. எப்பொழுதும் நான் அடி வாங்குவதிலேயே முடியும். பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், நண்பர்கள், எதிரிகள் என்று எல்லோரும் கூட்டமாக வந்து என்னை குமுறு குமுறு என்று குமுறிவிட்டு சந்தோஷமாக போவார்கள். எதற்க்கு வந்தார்கள், ஏன் குமுறினார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது, எனக்கும் புரியாது. அடி தாங்க முடியாமல் நான் திடுக்கிட்டு விழித்து அப்பாடா உயிரோட தான் இருக்கோம் என்று ஆசுவாச படுத்திக்கொள்ளும் போதுதான் முடியும்.

So எவ்ளோ சீக்கிரம் விழிக்கிறேனோ, அவ்ளோ அடி மிச்சம்.

கனவு முடிந்ததே என்று இருக்கும்.

பரவசமூட்டும் கனவுகள் எல்லாம் fazil movie climax வகை. எப்பொழுதும் சோக scena-laye முடியும். நான் பேச விரும்பி பேசாமலேயே இருக்கும் பெண்களின் நட்பில் தான் இந்த கனவுகள் ஆரம்பிக்கும். நட்பு நடந்து நடந்து காதலாகி, காதல் கைமா ஆகும்போது தான் முடியும். எப்பொழுதுமே எதோ சூழ்நிலை காரணமாக இருவரும் பிரிந்து விடுவோம். ஏன் பிரிகிறோம் என்று அவர்களுக்கும் தெரியாது, எனக்கும் புரியாது. வலி தாங்க முடியாமல் விழித்து அய்யோ என்றிருக்கும் போதுதான் முடியும்.

So எவ்ளோ நேரம் விழிக்காமல் இருக்கேனோ அவ்ளோ காதல் மிச்சம்.

கனவாகவே முடிந்ததே என்று இருக்கும்.

Tuesday, October 03, 2006

பாட்டு மச்சி பாட்டு

A.R Rahman endha experiments-um pannama sema simple-a potta paathu idhu. Came out as an superb song...simply best.

பாட்டு கேட்க ஆசை படுவர்களுக்காக


Powered by Castpost

பாட்டு கேட்கும் போது lyrics படிக்க ஆசை படும் என்னை போன்றவர்களுக்காக

பல்லவி

பெ: செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ

பெ: விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

ஆ: கண்னான உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ

ஆ: கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ

சரணம் 1

ஆ: பொன்னுடல் தன்னை என் கையில் ஏந்த என்னடி யோசிக்கிறாய்

பெ: மொத்ததில் காதலின் எடை என்னயாகும் இப்படி சோதிக்கிறாய்

ஆ: நிலவை படைத்து முடித்த கையில் அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்

பெ: என்னை படைத்து முடித்த கையில் அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்

[செவ்வானம்...]

சரணம் 2

பெ: செண்பகப்பூவின் மடல்களை திறந்து தென்றல் தேடுவதென்ன

ஆ: தென்றல் செய்த வேலையை சொல்லி என்னை பார்ப்பதென்ன

பெ: பார்வையின் ஜாடை புரியாமல் நீ பாட்டு பாடி ஆவதென்ன

ஆ: பல்லவி சரணம் முடிந்தவுடன் நாம் பங்குபெறும் காட்சியென்ன

[செவ்வானம்...]