Tuesday, April 24, 2007

கிறுக்கல்ஸ்

நெருங்கும் போது
முகம் திருப்பிக்கொள்ளும் தேவதை
நீ
விலகும் போது
முத்தத்தில் கொல்லும் ராட்சஷி
நீ


பிரிந்திருந்த
வெயில் நான்
மழை நீ
மேகத்தை சற்று
ஏமாற்றிவிட்டு
ஒன்றானபோதுதான் தோன்றியது
வானவில்


இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ
இருவரையும் படைத்தது
காதலெனும்
கடவுள்


உன்
உதட்டின் ரேகை
வருடியபோது
வளர ஆரம்பித்தது
என்
ஆயுள் ரேகை


வாழ்க்கை
தவம்
நீ
வரம்


P.S:
மனசாட்சி: ஏண்டா, இப்படி கவிதைங்கற பேர்ல எல்லாரையும் மண்ட காயவைக்கிற?

நான்: அதெல்லாம் ஒரு கொலை, சே, கலை. உனக்கு புரியாது.

ம: கொலையேதான். மத்தவங்களுக்கு மட்டும் புரியுதா என்ன?. எல்லாம் ரத்தகளரியோட தான திரும்பி போறாங்க.

நா: உனக்கு பொறாமை.

ம: ஆமாம். அப்புறம் இந்த காதலை விடவே மாட்டீங்களாடா. ஆளாளுக்கு அத அடிச்சி, தொவச்சி, புழிஞ்சி பாவம் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கு. அத வுட்ருங்களண்டா.

நா: முடியாது. அதெல்லாம் தமிழ் கலாச்சாரம். விட முடியாது. குழந்தை எப்படி முதல்ல அம்மான்னு சொல்லுதோ அது மாதிரி கவிதைன்னா காதல்ல தான் ஆரம்பிக்கனும். அட இதுவே கவித மாதிரி இருக்கே...ஹி..ஹி.

ம: அடங்கொக்கா மக்கா. சரி, இதுக்கெல்லாம் inspiration யாருன்னு எல்லாரும் கேட்கறாங்கல்ல, அதயாச்சும் சொல்லித்தொலையேன்.

நா: inspiration எல்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் perspiration தான். மண்ட காஞ்சி போய் இருக்கற ஒரு நாள்ல, மல்லாக்க படுத்துக்கிட்டு, ஒரு கால இன்னொரு கால் மேல தூக்குபோட்டு, பாதி கண்ணை மூடிக்கிட்டு விட்டத்த பார்த்துக்கிட்டே இருந்தா இது மாதிரி கவிதை எல்லாம் வரும். சென்னை வெயிலுக்கு fan போடாம இருந்தா இன்னும் betterஆ கூட கிடைக்கலாம்.

ம: கடவுளே, இந்த dog கிட்ட இருந்து என்ன கொண்டுபோய் முதியோர் இல்லத்துல வுட்ருங்க. இவன் கூட இருந்து நான் படுற அவஸ்த தாங்க முடியலடா சாமி.

Saturday, April 21, 2007

தாத்தாவும் நானும்

என்னடா இது?
இதான் தாத்தா laptop.
அப்படின்னா?
lapனா மடி, topனா மேல. மடி மேல வச்சிக்கிற computer.
அட போக்கத்தவனே. அந்த காலத்துல என் மடி மேல உன் பாட்டிய உட்கார வச்சிப்பேன். இப்ப என்னடான்னா எதோ பொட்டிய வச்சிக்கிறானுங்க.
------------

என்னடா பன்றா?
blog அடிக்கறேன் தாத்தா.
ப்ளாக்கா அப்படின்னா?
அத எப்படி சொல்றது....ம்ம்ம்
ஏண்டா, கருப்ப தான இங்கிலீஸ்ல ப்ளாக்கும்பீங்க. அத சொல்லறதுக்கென்ன கொசக்கெட்டவனே.
-----------

டேய், உன்ன பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்கு.
தாத்தா...அவன் பையன்.
அடப்பாவி, முடி வளத்து சட பிண்ணி இருக்கான். கடுக்கன் போட்ருக்கான். பின்னாடி இருந்து பார்த்தா பொட்டபுள்ள மாதிரியே இருக்கான்.
அதான் தாத்தா இப்ப fashion.
என்னடா அவன் முடி பச்ச கலர்ல செம்பட்ட பாஞ்சிருக்கு?
தாத்தா...அது செம்பட்ட இல்ல. சாயம் பூசி இருக்கான். அதுவும் fashion.
ஏண்டா, உங்க பேஸன்ல, சோத்த வாயில தான போட்டுக்கறீங்க. இல்ல வேற எங்கயாச்சுமா.
------------

உன் பொண்டாட்டி எங்கடா?
அவ office போயிருக்கா. அவளுக்கு ராத்திரி shift தாத்தா.
நீ காலையில போயிடுவியா?
ஆமாம் தாத்தா.
அப்புறம் எதுக்குடா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.
-----------

போன மாசம் உங்க பெரிய தாத்தன் சாவுக்கு ஏன் வரல நீ.
எங்க தாத்தா, எங்க ரெண்டு பேருக்குமே officeல பயங்கர வேலை. வர முடியாத நெலம.
ஓ. சாயந்தரம் உன் பொண்டாட்டி அபியோட அம்மா செத்துட்டான்னு அழுதா. யாருடா அது அபி?
தாத்தா....அது கோலங்கள்ன்னு ஒரு TV நாடகத்துல வர பொண்ணு.
தாத்தன் சாவக்கூட டிவி பொட்டியில காட்டியிருந்தா அழுதிருப்பீங்களோ.
-----------

எவ்ளோடா சம்பாத்திக்கிற?
மாசம் 50,000 தாத்தா.
ராத்திரியில நல்லா தூங்குறியா?
எங்க தாத்தா. நல்லா தூங்கி வருஷ கணக்காகுது.
உன் வயசுல எனக்கு சம்பளம் 50 ரூவா தாண்டா. நான் கட்டய சாச்சா பொணம்தான். கோழி கூவுரவரைக்கும் என்ன நடந்தாலும் தெரியாது.
-----------

எப்படா புள்ள பெத்துக்க போறீங்க?
எங்க தாத்தா. முதல்ல ஒரு வீடு வாங்கனும். அப்புறம் ஒரு car வாங்கனும். அப்பறம் தான் குழந்தய பத்தி எல்லாம் யோசிக்கனும்.
சரி தான். நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டா உன் புள்ளய வீடும் காரும் தான பாத்துக்கனும்.
----------

சரிடா, நான் ஊருக்கு கெளம்பறேன்.
சரிங்க தாத்தா. போயிட்டு போன் பண்ணுங்க.
டேய் ஒன்னு சொல்றேன் மனசுல வச்சிக்க.

இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா.

Tuesday, April 17, 2007

பாட்டு மச்சி பாட்டு

வித்யாசாகர் ரொம்ப பெரிய music directorஆ இல்லாதப்ப போட்ட பாட்டு இது(படம்: பிரியம்). எல்லா பாட்டுமே superஆ இருக்கற இந்த படத்துல எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது. Again, வைரமுத்து rocks :)

[எல்லா பாடலும் கேட்க]
பிரியம்

[இந்த பாடல் மட்டும் கேட்க]
ஆதாம் ஏவாள்

[படித்துகொண்டே ரசிக்க]

[பல்லவி]
ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு...எந்த நெருப்பு


கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு
கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு
அந்த நெருப்பு...அந்த நெருப்ப்பூ


எந்த நெருப்பு...எந்த நெருப்ப்பூ

உள்ளத்தில் உறவை வார்க்கும் நெருப்பு
உன்னையும் என்னையும் ஈர்க்கும் நெருப்பு
அந்த நெருப்பு...காதல் நெருப்பு


[சரணம் 1]

காதல் என்பது காற்றை போல
காலங்கள் தேசம் பார்ப்பதில்லை


காதல் என்பது தீயை போல
எதிலும் பற்றும் கேள்வியில்லை


காதல் என்பது வெள்ளம் போல
கரைகளை வெள்ளம் கேட்பதில்லை


காதல் என்பது ஒட்டகம் போல
பாலைவனத்திலும் வேர்ப்பதில்லை


இதயம் காதல் கொண்டுவிட்டால்
இமயம் கூட தவிடுபொடி


காதல் கட்டளை இட்டுவிட்டால்
வானம் வந்து வணங்குமடி


ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
long live love

அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
long live love

[ஆதாம் ஏவாள்...]

[சரணம் 2]

காதல் என்பது பூவனம் அல்ல
போர்க்களம் என்றால் என்ன செய்வாய்


மாலை விடுத்து காதல் கையில்
வாளை எடுத்தால் என்ன செய்வாய்


மாலை ஏந்தி வந்தாலும், ஒரு
வாளை ஏந்தி வந்தாலும்
இரண்டையும் ஒன்றாய் பாவிப்பேன், நான்
எதையும் எதிர்த்து சாதிப்பேன்.


அயிரை மீன்கள் துணிந்துவிட்டால்
அட்லாண்டிக்கடல் பெரிதல்ல


சிட்டுகுருவிகள் நினைத்துவிட்டால்
சீன பெருஞ்சுவர் தடையல்ல


ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
i love you
அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
i love you

[ஆதாம் ஏவாள்...]

P.S: ஒன்னும் சொல்றதுக்கில்லை. எதோ உங்களால முடிஞ்சத.... :-)

Friday, April 13, 2007

அழகு ஆறு

எனக்கு பிடித்த அழகுகளில் ஆறு எழுதச்சொல்லி மாம்ஸ் அன்புக்கட்டளை போட்டிருந்தார். பாவனாவ பத்தி எழுதுன்னு அவர் directஆவே சொல்லி இருக்கலாம். சந்தோஷ பட்டிருப்பேன். இருந்தாலும் அன்புக்கு நான் அடிமை. So start meejic...

1. அம்மா: அது எப்படி உலகத்தில் எல்லா அம்மாக்களும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் ஊட்டி விடும் உணவு மட்டும் எப்படி எப்பொழுதும் sema tasteஆ இருக்கு.

2. அழகு: தமிழில் அழகு என்ற சொல் அழகாக இருப்பதால் அதை அழகானவற்றை குறிக்க பயன்படுத்துகிறோமா, இல்லை, அழகானவற்றை குறிக்க பயன்படுத்துவதால் அந்த சொல் அழகாக இருக்கிறதா.

3. தமிழ் பெண்கள்: சின்ன வயதில் இருந்தே site அடிச்சே வளர்ந்ததாலோ என்னவோ, அவ்வப்பொழுது மலையாள கரையோரம் ஒதுங்குவது மாதிரி தெரிந்தாலும், தமிழ் பெண்களின் அழகிற்கு நான் அடிமை.

4. பாடல்: ராஜபார்வையில் வரும் 'அழகே அழகு' (inspite of its popularity being suppressed by அந்தி மழை) and பாட்ஷாவில் வரும் 'நீ நடந்தால்'. அழகு என்றவுடன் என் நினைவிற்கு வருபவை.

5. மழலை நடை: மயில் அழகு, மான் அழகு என்பார் தத்தி தத்தி வரும் மழலை நடை அழகு பார்க்காதோர்.

6. நீ(ங்கள்): உலகத்தின் அழகு எல்லாம் ஒன்றே ஒன்று, உன் கண்ணாடி பார்த்துவிடு புரிந்து போகும்.

Me tagging

1. K4karthik
2. Raji
3. Ramya
4. Sachin Gops
5. SKM
6. Veda

Sunday, April 08, 2007

நீயும்.....நீயாகிய நானும்

நீ சூரியன்
நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெரிப்பவள்
நீ

நீ
போடும் கோலத்தில்
சிறைப்பட்ட
புள்ளி நான்
விட்டு விலகவும்
மனமில்லை
வெளியே வரவும்
வழியில்லை

என்
காதல் கடிதங்களில்
முதல் வரி நான்
முகவரி நீ


கொக்கிடம் தப்பி
தூண்டிலில் மாட்டிய மீன்
நான்
காதலிலெல்லாம் தப்பித்து
உன் கண்களில்
மாட்டிக்கொண்டேன்


எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்
உன்னை காதலித்து
காதலாகி போனேன்


P.S: கவிதைக்கு (???) comment போடுற மாதிரி ஒரு கஷ்டமான வேலை இருக்குமான்னு தெரியல. கண்டிப்பா 'நல்லா இருக்கு'ன்னு தான் சொல்லனும். நல்லா இல்லனு சொல்லிட்டு இந்த இடத்தை விட்டு போயிட முடியுமா என்ன. auto, lorry ஏன் இப்பலாம் சொந்தமா flight செஞ்சி வீட்டுக்கு வரும். எல்லாருமே நல்லா இருக்குன்னு சொன்னா அதுல எதாச்சும் உள்குத்து, orkutu இருக்கான்னு தெரியாது.

நிஜமாக 'நல்லா இருந்து' எல்லாரும் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னதுக்கு அப்புறம் நாமலும் போய் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னா அந்த 'நல்லா இருக்கு'க்கு effect இருக்குமா (இது பற்றி குரு கிட்டக்கூட கேட்டேன்). நாம படிக்காமலயே 'நல்லா இருக்கு'ன்னு சொன்னதா நெனச்சிடுவாங்களோ.

எவ்ளோ கஷ்டமப்பா!

இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுலயும் நீங்க எல்லாம் பொறுமையா comment போட்டுட்டு போறீங்க பாருங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

ரொம்ப நன்றி ஹை !

Friday, April 06, 2007

மறந்து போன மனிதநேயம்

scene 1:

காலையில டீ குடிக்க போனேன்.

டீ கடையில ஒரு சின்ன பையன். படிச்சி இருந்தா அவன் ஐந்தாவது படிக்கனும். அங்க வேலை பார்க்கிறான். திடீர்னு டீ மாஸ்டர் mobileக்கு ஒரு call வருது. அந்த பையன் வீட்ல இருந்து பேசறாங்க. அந்த பையன் வாங்கி

"ஆங், சொல்லுமா" என்கிற போது அவன் குரல் உடைகிறது. அங்க பேசுற அவனோட அம்மா மனசு எப்படி இருந்து இருக்கும்.

"சீக்கிரம் பேசிட்டு, இந்த டீயை எடுத்துட்டு போ". இது மாஸ்டர்.

scene 2:

office முடிஞ்சி bus-ல வரேன். ரோட்டோரத்தில ஒரு சின்ன பையன் அவனை விட ரெண்டு மடங்கு எடையுள்ள புத்தக மூட்டைய தூக்கிட்டு தள்ளாடி தள்ளாடி நடந்து போறான். இவனும் ஐந்தாவதுதான் படிக்கனும். அந்த பக்கம் வரும் motoristகிட்ட எல்லாம் கைய காட்டி lift கேட்கிறான்.

யாரும் நிறுத்தல. ஆனாலும் அவன் முகத்தில கவலை இல்ல. ஒவ்வொரு தடவை lift மறுக்கப்படும் போதும் சிரிச்சிக்கிட்டே தள்ளாடி நடக்கிறான். நான் பார்த்த வரைக்கும் ஒரு 10 பேர்கிட்ட கேட்டான்

ஒருத்தர் கூட தரலை. ஏன் நிறுத்த கூட try பண்ணல.

-------------

ரெண்டு பேர் வெட்டிக்கிட்டு சாகும் போது எனக்கு வருத்தம் ஏற்படுவதில்லை. ஆனா இது மாதிரி நிகழ்வுகள் என்னை உலுக்கிடுது.

காசு மட்டுமே துரத்துர மனிதர்களின் இதயம் கூட concrete கல் தான் போல.

Thursday, April 05, 2007

இன்றைய பாட்டு

நிறைய நாள், நாம எழுந்திருக்கும் போதே ஏதாச்சும் ஒரு பாட்டோட எழுந்திருப்போம். அன்னைக்கு full-a அந்த பாட்ட humm பண்ணிக்கிட்டே இருப்போம். பக்கத்துல இருக்கறவங்க "லூசாப்பா நீ" look விடுவாங்க. அதை எல்லாம் தொடச்சி எரிஞ்சிட்டு பாடும்வோம் பாருங்க...அங்க நிக்கிது அந்த பாட்டு.

அப்படி ஒரு பாட்டுதான் இது. ஏன் இந்த பாட்டுன்னு தெரியல(ஒருவேளை SKM madam blog-la படிச்ச positiveவோட தாக்கமா இருக்குமோ) .

அப்பு படத்தில எல்லாமே நல்ல பாடல்கள் தான், but my fav is this one. நமக்கு எப்பவும் தத்துவத்தை wholesale-ல் sponser செய்யும் வைரமுத்து தான் இந்த பாட்டையும் எழுதி இருக்கார்.

[கேளுங்க]

வாடா...வா

[படிங்க]

[பல்லவி]

அம்பது ரூபா தான்
அம்பது ரூபா தான்
நண்பா, என் தேவை எல்லாம் நாளுக்கொரு
அம்பது ரூபா தான்

வாடா வா...நீ...வாடா வா
வாடா வா...நீ...வாடா வா

ஆசை இல்லை, அவஸ்த்தை இல்லையே
நீ...வாடா வா
ஆஸ்தி இல்லை, அச்சம் இல்லையே
நீ...வாடா வா


உன் ஒரு நாளை
உன் ஒரு வாழ்வாய்
கொண்டாடு...வா

பாதத்துக்கு செருப்பிருந்தா பாதை எல்லாம் மெத்தைதான்
போதுமென்ற மனம் இருந்தா பூமி எல்லாம் சொர்க்கம்தான்


[அம்பது ரூபா தான்...]

[சரணம் 1]

வயிறு என்னும் பள்ளத்துக்குள்ள வாழ்க்கையை தொலச்சோம்
வாழ்க்கையை தொலச்சோம்
வயித்தவிட்டு இதயம் என்னும் வீட்டுக்கு வருவோம்
வீட்டுக்கு வருவோம்

தேய்பிறையால் தான் பௌனர்மிக்கு பெருமை
துன்பத்துக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை


புத்தி உள்ள ஆளுக்கு தொட்டதெல்லாம் தூளப்பா
பறவைக்கு வானத்தில் மேடுபள்ளம் ஏதப்பா

லட்சியம் ஏதுமில்லை அன்னனைக்கு வாழப்பாரப்பா

[அம்பது ரூபா தான்...]

[சரணம் 2]

குழந்தைகளாய் இருக்கையிலே கொள்ளை ஆசை இல்லையே
கொள்ளை ஆசை இல்லையே
குழந்தை மனம் தொலைந்தனால் வந்ததிந்த தொல்லையே
வந்ததிந்த தொல்லையே

நரகத்தில இன்பம் காணும் குழந்தையின் வயசு
சொர்க்கத்திலும் துன்பம் காணும் மனிதனின் மனசு


பூமி எல்லாம் கடலென்றால், நீ மீனாகத்தான் வாழனும்
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால், நீ புல்லாங்குழல் ஆகனும்

[அம்பது ரூபா தான்...]


p.s: இதுக்கெல்லாம் என்னடா comment போடுறதுன்னு கேடகறீங்களா. பாட்ட பத்தி, பாடினவங்கள பத்தி, இந்த படத்தில மட்டும் அழகா இருந்த தேவயானி பத்தி, எங்க இருந்துதான் சுடுறாறுன்னு தெரியாம் வஸந்த் படத்துக்கு மட்டும் சூப்பரா சுடுற தேவா பத்தி, ரொம்ப தைரியமா ரெண்டு heroine (அட, பிரசாந்த் தான் இன்னொரு heroineன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய போகுதா என்ன) வச்சி படம் எடுத்த வஸந்த் பத்தி, உங்களுக்கு இந்த பாட்டு ஏன் பிடிக்(கும்/காது) பத்தி, அட, எதுவுமே தோனலனா இப்படி எல்லாம் blog உலகத்துக்கு சேவை செய்யற என்ன பத்தி(???). இப்படி எத பத்தியாச்சும் comment போட்டுட்டு போங்கப்பா :-)