Tuesday, June 26, 2007

எட்டு எட்டா பிரிச்சாச்சி

இந்த எட்டு போடுறது, ரூட்டு போடுறது(??) இதெல்லாம் நமக்கு வராதுங்க. இது தெரியாம G3 மாட்டி விட்டுடாங்க. அவங்க பாசத்துக்கு ஒரு நன்றியை சொல்லிக்கிட்டு,

சரி சமாளிப்போம்.

இந்த எட்டு matters-um என்னை பற்றித்தான். ஆனால், சரி படிச்சி தெரிஞ்ச்சிக்கங்க. Rules ,as usual, are broken as per my convenience.

(0-8): எப்படி இருந்தேன்னு எனக்கு ஞாபகம் இல்லை. வீட்ல விசாரிச்சப்ப சட்டை போட்ட குரங்கு வந்தா வேடிக்கை பார்த்துக்கிட்டு, சாப்பிடும் போது அடுத்தவங்க tiffex boxஅ பார்க்காத, uniform tieஐ கடிச்சிட்டு வந்து அடிவாங்கிக்கிட்டு, வீட்டு வாசலில் அமர்ந்து தெருவில் விளையாடும் பசங்களை வேடிக்கை பார்க்கும் ஒரு பையனாத்தான் இருந்து இருக்கேன்.

(9-16): படிப்பிற்க்காக மாமா என்ன madras கூட்டிட்டு வந்துட்டாங்க. மாமா பேர காப்பாத்த படிப்பு தவிர வேறெதுவும் செய்ததில்லை. ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன். இன்று வரை நான் பெருமையாக நினைக்கும் ஒரே விஷயம் இதுதான்.

(17-24): அடிச்சி புடிச்சி 12 முடிச்சி, medical கிடைக்காம அழுது, engineering படிச்சி, ஒரு வருஷம் அப்படி இப்படி ஓட்டி, tcs join பண்ணி, இதோ 4 வருஷம் ஓடிபோச்சி. என்னை வளர்த்து ஆளாக்கின பெரியம்மாவை இழந்தது மற்ற எதுக்குமே பெருமை பட்டுக்க முடியாம போச்சி.

(25-32): எதோ ஒரு பாவப்பட்ட ஜீவன் என்கிட்ட வாக்கப்பட போகுது. எனக்கு அவள புரிஞ்சி, அவளுக்கு என்னை புரிஞ்சி, சுத்தி உள்ளவங்க கொளுத்தி போடுறதெல்லாம் வெடிக்க விடமா போராடி, வாரத்தில பாதி நாள் satyamல 3 மணி showக்கு ரெண்டு டிக்கெட் போட்டு, foneஅ போட்டு வர சொல்லி, நானும் வேலை பார்க்காம, அவளயும் பார்க்க விடாம....ஷ்ஷ்ஷ்ஷ் ஒன்னும் சொல்றதுக்கில்லை.

(33-40): நானே ஒரு குழந்தை. இதில எனக்கு....நமக்கு இந்த twins, tripletsன்னா ரொம்ப பிடிக்கும். அப்படி எதாச்சும் நடந்து....அடடா அவங்களுக்கு கொஞ்சம் பணம் சம்பாதிக்கனும். அதை விட முக்கியம் அவங்களுக்கு homework பண்ணி குடுக்கனும். ரொம்ப முக்கியம் தாத்தா, பாட்டி கிட்ட அவங்க கதை கேட்டு வளரனும்.

(41-48): இங்க கொஞ்சம் tedious ஆகுது. officல pressure, வீட்ல pressure cookerன்னு ஏகப்பட்ட problems. எப்பவுமே smoothஆ போனா life bore அடிச்சிடும் இல்ல. so கொஞ்சம் போராட்டம். எல்லா நேரத்துலயும் support பண்ற family இருக்கறதுனால அப்படி இப்படின்னு சமாளிக்கிறேன்.

(49-56): உனக்கு தான் திறமை இல்ல. நாங்களும் அப்படியான்னு கேட்டு பசங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சி பெரிய ஆளா ஆகிட்டாங்க. அதுக்கு முன்னாடி ஆளுக்கொரு ஆளு புடிச்சிட்டாங்க. இப்ப அதிகாரம் எல்லாம் அவங்க கையில, நாம என்னத்த சொல்ல. இதுக்கு நடுவில சில உறவுகளின் இழப்புகள். சில உறவுகளின் வரவுகள்.

(57-64): இதுக்கு மேல இருந்து என்னங்க பண்ணப்போறோம்னு better half கேட்க, அதுவும் சரி தான்னு packup :)

மனசாட்சி: சேரன் படம் பார்த்துட்டு வந்த effect. நான் இல்லாத மாதிரியே எழுதியிருக்க.


முக்கியாம பகுதி: நான் மட்டும் மாட்டினா போதுமா. So நான் இவங்களை எல்லாம் மாட்டி விடுறேன்.
1. Ambi
2. Arun
4. k4k


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Sunday, June 24, 2007

சத்தம் போடாதே

Yuvan and Vasanth combo rocks again in Satham Podathey. I loved 4 of the 5 compositions, this one being my favourite. Superb lyrics by na.muthukumar and a soothing singing by Adnan Sami (தமிழ் தாண்டவம் ஆடுது Adnan Sami நாக்குல ;-)). உணவுகள் பிடிக்கல sequence simply superb.

[பல்லவி]

இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ

இந்த இன்பமான இம்சையில ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ

காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றது
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றது


உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது
காதலின் போதைக்கு அளவு இல்ல

நண்பர்கள் பிடிக்கல நாய்க்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவு இல்ல


[சரணம் 1]

காதல், காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்தபின்னே கையில் மிஞ்சும் நூல்கன்டா


காதல் காய்ச்சலுக்கு காதல் மட்டும்தான் மருந்தா
எட்டி உதைக்க எந்தன் உள்ளம் என்ன கால்பந்தா

கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி
உன் கையில் கல் இன்று ஏனடி ஏனடி


உதடுவரை ஓர் வார்த்தை வந்ததடி
உனைக்கண்டு ஏய் அது தொண்டையில் தினறுதடி


[உணவுகள்...]

[சரணம் 2]

நண்பா, என் காதல் என்ன ஆகும் என்றேனே
வாசல் கோலம் அது பார்த்து நடக்க சொன்னானே

காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றாளே


சொல்லாத ஆசைகள் ஏனடி ஏனடி
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏனடி ஏனடி

நஞ்சென்றால் ஏய் ஒருமுறை கொல்லுமடி
நினைவுகளோ ஹேய் பலமுறை கொல்லுதடி

[உணவுகள்...]

கொசுறு:

பேசுகிறேன்... பாட்டுல வர lines இது. எனக்கு ரொம்ப பிடிச்சது.

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

Wednesday, June 20, 2007

இன்றைய மொக்கை

மண்டைய காப்பாத்த helmet போடலாம்
helmetஅ காப்பாத்த மண்டைய போட முடியுமா (யோசிங்க)


courtesy: அரசு (தமிழக அரசு இல்ல)

தினம் தினம் பாட்டு கேட்கிறோம்
அந்த பாட்டுக்கு ஒரு தினம் இருக்கா (மண்டைய பிச்சிக்கங்க)


courtesy: BIG FM

தலையில 'N''I' தடவலாம்,
A-Z தடவ முடியுமா ('N''I' தடவி பாருங்க. பிச்சிக்கிட்ட முடி வளரும்)


தீவாளிக்கு dress pothys-லயும் எடுக்கலாம், chennai silks-லயும் எடுக்கலாம்
ஆனா பக்கத்து வீட்டு கொடியில இருந்து எடுத்தா, freeஆ எடுக்கலாம் (இன்னா idea-பா)


coutesy: Radio One

அட சிரிங்கப்பா :)

Sunday, June 17, 2007

இனி ஒரு tag செய்வோம்

நம்ம நாடு சுதந்திரம் வாங்கி 50 வருஷத்துக்கு மேல ஆச்சி (மனோரமா இல்ல....அண்ணன் அம்பி கண்டுக்க கூடாது). இன்னும் நாம ஒரு tag ஆரம்பிக்கலயே அப்படின்ற வருத்தம் எனக்கு சின்ன வயசில இருந்தே இருக்கு (No...No...No violence.... please....எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம்...அடிக்க எல்லாம் வர கூடாது....ஆமாம்)

என்ன tag ஆரம்பிக்கலாம்னு மண்டைய போட்டு பிச்சிக்கலாம்னு தான் நெனச்சேன். மண்டையில இருக்கற முடி நிலவரம் கொஞ்சம் கலவரம் கொடுக்க....சொரி....சே....சரி...ஏறகனவே blogல மரம் வளர்க்கிற ideaவ use பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

முதல்ல condition. ஒன்னே ஒன்னுதான்.

1 (a). ஒரே ஒரு ஆளத்தான் tag பண்ணனும். கண்டிப்பா ஒரு ஆள tag பண்ணனும் (வார்த்தை இன்னாமா வெளயாடுதுடா பரணி)

1 (b). tag படிச்ச 2 (அ) 3 நாளுக்குள்ளே tagged person post போட்டுடனும் (என்னா ஒரு வில்லத்தனம்)

okies. இப்ப கதைக்கு($#^%&%) போலாம். குரு, மாம்ஸ், Priya எல்லாரும் மன்னிச்சிக்கங்க. விதி வலியது.

-------

கதை நடக்கிறது (அது எப்படி நடக்கும்னு எல்லாம் வெறுப்பேத்த கூடாது) june போனா july வரும் இந்த காலம் இல்ல. March போனா september வரும் அந்தக் கால கல்லூரி காலம்.

துப்பாக்கி இல்லாமலே சுட்டுக்கிட்டு இருந்தது சென்னை சூரியன் (wow...wow...wow). வசதி இருக்கறவங்க cooling glass போட்டுக்கிட்டு இருந்தாங்க. வசதி இல்லாதவங்க coolingஆ ஒரு glass மோர் அடிச்சிக்கிட்டு இருந்தாங்க(அடடா.... அடடா....).

உன்மையான கல்வி வகுப்புக்கு வெளியேதான் கிடைக்கும்னு யாரோ சொன்னத correctஆ தப்பா புரிஞ்சிக்கிட்ட ஒரு இளைஞர் கூட்டம் அந்த கல்லூரிக்கு எதிரில் உள்ள குட்டி(அந்த குட்டி இல்ல) சுவத்துல உட்கார்ந்து இருந்துச்சி (college பசங்களையும் குட்டி சுவத்தயும் பிரிச்ச பாவம் நமக்கெதுக்கு). அதுல கார்த்திக்கும்(மாம்ஸ் நீங்க இல்ல) இருந்தான்( heroக்கு கார்த்திக்னு பேர் வைக்கிற படம்தான் இப்பலாம் box office hit) .

a for ambika, b for bhuvanaன்னு வெளியவே attendance எடுத்திக்கிட்டு இருந்தாங்க பசங்க. s for sandhya.....

"டேய் கார்த்தி உன் ஆளு சந்தியா வராடா"

"மச்சான், அவ எனக்கு கெடப்பாளாடா"...இது கார்த்திக்.

"கெடைக்க மாட்டாடா மச்சான்"

"ஏன்டா".

"ஏன்னா அவளுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிஞ்சிடிச்சி"

------

இத first continue பண்ணப்போறது காதல் யானை வளர்த்த blog உலக அனுராதா ரமணன், சிவசங்கரி Priya அவர்கள் (ஆமாம், இந்த மொக்கைக்கு அப்புறம் இப்படி யாராச்சும் எழுதினாதான் படம் கொஞ்சமாச்சும் ஓடும்னு நீங்க நினைக்கிறது கேக்குது).

so மக்களே சந்தோஷமா இருங்க. எல்லாரும் இந்த கதையை எழுதனுங்கறது என்னோட சின்ன வயசு கனவு. அத நிறைவேத்திடுங்க. எல்லாரும் சேர்ந்து அடிக்க வரதுக்கு முன்னாடி நான் jute :)

Monday, June 11, 2007

சாதா to special சாதா

பரிசுகளை பஞ்சிமுட்டாய் மாதிரி வாங்கும் என் குரு வேதா அவர்களுக்கு வாழ்த்துக்களையும், இன்று பிறந்தநாள் கொண்டாடிய தோழி பத்மபிரியா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு start meejic....

முன்குறிப்பு: over scene உடம்புக்கு ஆகாது.

முன்குறிப்புக்கு பின்குறிப்பு: சந்தோஷத்த பகிரிந்துக்கிட்டா ரெட்டிப்பாயிடும். துக்கத்தை பகிர்ந்துக்கிட்டா பாதியாயிடும்.

முன்குறிப்புக்கு பின்குறிப்புக்கு பின்குறிப்பு: இது மாதிரி மொக்க போட்டா உன் மண்டை காலியாயிடும்.

சரி matterக்கு வரேன். சாதாவா (சதாவோட இல்ல) பெங்களூரு போன என்ன special சாதா ஆக்கிட்டானுங்க. நான் இப்ப SAP certified development consultant for Exchange Infrastructure and Integration Process (யப்பா....இப்பவே கண்ண கட்டுதே). சென்னையில வெயில் மண்டைய பொலக்கும் போதே தெரியும்டா நாட்டுல இப்படி எதாச்சும் கெட்டது நடந்து இருக்கும்ன்னு யாரும் feel பண்ணக்கூடாது.

இனிமேல உங்களுக்கு யாருக்காவது ஜலதோஷம்னா என்கிட்ட வாங்க. vicksங்கறத சுத்தி சுத்தி எழுதி தருவேன். அத நீங்க அப்படியே சாப்டலாம்.

blog உலகமே தூங்குது. comment வரவே மாட்டேங்குது. comment போடவே ஒரே சோம்பலா இருக்குன்னு Priya feel பண்றாங்க.

blog union வரதுக்கு முன்னாடி நம்மளோட ஒரே சந்திப்பு இடம் இந்த blogதான். இப்ப எல்லாரும் mailயே பேசிக்கறதுனால comment போடவே தோனமாட்டேங்குது. ஒரே மக்கள ரெண்டு வேறு இடங்களில் சந்திப்பதில உள்ள problem இது. comment குறையறதுனால நமக்கு blog எழுதற ஆர்வமும் கொறஞ்சிடுது. இப்படியே போனா எல்லாரும் blog எழுதறத கண்டிப்பா நிறுத்திடுவோம். இப்பவே நிறைய பேரோட blogs வெறிச்சோடி கெடக்குது.

நாம எல்லாம் எப்படி சந்திச்சோமோ அந்த இடம் அப்படியே மறஞ்சி போயிடும். atleast அது நடக்காம பார்த்துக்க try பண்ணுவோம்.

நம்மால முடிஞ்ச அளவுக்கு எழுதுவோம். என்ன எழுதினாலும் comment போடுவோம்.

நான்: அப்பாடா எப்படியாவது மக்கள உசுப்பேத்தி comment வாங்கிடனும்.

நீங்க: நீ முதல்ல போன post commentக்கு replyய போடு.