Sunday, May 13, 2007

பாவ்னா

மு.கு : இந்த postக்கு என்ன தலைப்பு வச்சாலும் பொருத்தமா இருக்கும். அதனால எனக்கு புடிச்ச தலைப்பை வச்சிக்கிறேன் (இது அந்த வச்சிக்கிறேன் இல்ல).

1. நேற்று பிறந்த, சே, பிறந்தநாள் கொண்டாடிய பாசத்தின் பிறப்பிடம், முதல்வர் பதவியை நாட்டாமைக்கு வழங்கிய கலியுக வள்ளல், வருங்கால அமெரிக்க ஜனாதிபதி, மாம்ஸ் மு.க அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

2. நாளை புது வாழ்வு தொடங்கும் அண்ணன் அம்பி & Ms.C (அப்பாலிக்கா Mrs.C ன்னு தானே போடுவீங்க) அவர்களுக்கும் திருமண நல்வாழ்த்துக்கள்.

என்னடா மொய் வக்க பயந்துக்கிட்டு blogலயே வாழ்த்தான்னு தப்பா feel பண்ணக்கூடாது.

உங்களை எல்லாம் கொஞ்ச நாள் நிம்மதியா விடலாம்ன்னு கம்முன்னு இருந்தேன். இருந்தேனா....ம்ம்ம் கொட்டுங்கப்பா....

நீ புடுங்கற ஆணி எல்லாம் சரி இல்ல, அதனால பெங்களூரு போய் ஆணி புடுங்கறது எப்படின்னு கத்துக்கிட்டு வான்னு என்னோட டேமேஜர் சொல்லிட்டாரு. அதனால அண்ணன்(நான்தேன்) மூட்டை முடிச்சி எல்லாம் கட்டிகிட்டு பொடி நடையா கெளம்பிட்டேன்.

அதான் உங்க கண்ணாலத்துக்கு வர முடியல. G3 அவர்கள் மூலமா வாழ்த்துக்களையும், மொய்யும் அனுப்பி விடுகிறேன். தப்பா எடுத்துக்காதீங்க.

இந்த functionல நிறைய பேர meet பண்ணலாம்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன் (காய போட வேண்டியதுதானே gops அண்ணன்(???!!) கேட்டகூடாது. nurseஅ site அடிச்சிக்கிட்டு நல்ல பையனா இருக்கனும்). கடவுள் அதுக்கெல்லாம் ஒரு பெரிய ஆப்பா அடிச்சிட்டாரு. அவரு எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்.

மக்களே இன்னும் ஒரு மாசத்துக்கு நீங்க எல்லாம் நிம்மதியா இருக்கலாம். முடியும் போதெல்லாம் உங்க கடை பக்கம் வந்துட்டு போறேன்.

எல்லாரும் சந்தோஷமா இருங்க.

போறதுக்கு முன்னாடி...

என்னதான் குளுகுளுன்னு இருந்தாலும்
icecreamஅ வச்சி shave பண்ண முடியுமா.
இல்ல, வாசனையா இருக்குன்றதுனால
shaving creamஅ நக்கி நக்கி சாப்ட முடியுமா.


பேரு வச்சியே, சோறு வச்சியான்னு யாரும் பல்லுமேல வாய போட்டு கேட்டுட கூடாதுலே...அதாம்லே....ஹி..ஹி..ஹி...

Tuesday, April 24, 2007

கிறுக்கல்ஸ்

நெருங்கும் போது
முகம் திருப்பிக்கொள்ளும் தேவதை
நீ
விலகும் போது
முத்தத்தில் கொல்லும் ராட்சஷி
நீ


பிரிந்திருந்த
வெயில் நான்
மழை நீ
மேகத்தை சற்று
ஏமாற்றிவிட்டு
ஒன்றானபோதுதான் தோன்றியது
வானவில்


இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ
இருவரையும் படைத்தது
காதலெனும்
கடவுள்


உன்
உதட்டின் ரேகை
வருடியபோது
வளர ஆரம்பித்தது
என்
ஆயுள் ரேகை


வாழ்க்கை
தவம்
நீ
வரம்


P.S:
மனசாட்சி: ஏண்டா, இப்படி கவிதைங்கற பேர்ல எல்லாரையும் மண்ட காயவைக்கிற?

நான்: அதெல்லாம் ஒரு கொலை, சே, கலை. உனக்கு புரியாது.

ம: கொலையேதான். மத்தவங்களுக்கு மட்டும் புரியுதா என்ன?. எல்லாம் ரத்தகளரியோட தான திரும்பி போறாங்க.

நா: உனக்கு பொறாமை.

ம: ஆமாம். அப்புறம் இந்த காதலை விடவே மாட்டீங்களாடா. ஆளாளுக்கு அத அடிச்சி, தொவச்சி, புழிஞ்சி பாவம் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கு. அத வுட்ருங்களண்டா.

நா: முடியாது. அதெல்லாம் தமிழ் கலாச்சாரம். விட முடியாது. குழந்தை எப்படி முதல்ல அம்மான்னு சொல்லுதோ அது மாதிரி கவிதைன்னா காதல்ல தான் ஆரம்பிக்கனும். அட இதுவே கவித மாதிரி இருக்கே...ஹி..ஹி.

ம: அடங்கொக்கா மக்கா. சரி, இதுக்கெல்லாம் inspiration யாருன்னு எல்லாரும் கேட்கறாங்கல்ல, அதயாச்சும் சொல்லித்தொலையேன்.

நா: inspiration எல்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் perspiration தான். மண்ட காஞ்சி போய் இருக்கற ஒரு நாள்ல, மல்லாக்க படுத்துக்கிட்டு, ஒரு கால இன்னொரு கால் மேல தூக்குபோட்டு, பாதி கண்ணை மூடிக்கிட்டு விட்டத்த பார்த்துக்கிட்டே இருந்தா இது மாதிரி கவிதை எல்லாம் வரும். சென்னை வெயிலுக்கு fan போடாம இருந்தா இன்னும் betterஆ கூட கிடைக்கலாம்.

ம: கடவுளே, இந்த dog கிட்ட இருந்து என்ன கொண்டுபோய் முதியோர் இல்லத்துல வுட்ருங்க. இவன் கூட இருந்து நான் படுற அவஸ்த தாங்க முடியலடா சாமி.

Saturday, April 21, 2007

தாத்தாவும் நானும்

என்னடா இது?
இதான் தாத்தா laptop.
அப்படின்னா?
lapனா மடி, topனா மேல. மடி மேல வச்சிக்கிற computer.
அட போக்கத்தவனே. அந்த காலத்துல என் மடி மேல உன் பாட்டிய உட்கார வச்சிப்பேன். இப்ப என்னடான்னா எதோ பொட்டிய வச்சிக்கிறானுங்க.
------------

என்னடா பன்றா?
blog அடிக்கறேன் தாத்தா.
ப்ளாக்கா அப்படின்னா?
அத எப்படி சொல்றது....ம்ம்ம்
ஏண்டா, கருப்ப தான இங்கிலீஸ்ல ப்ளாக்கும்பீங்க. அத சொல்லறதுக்கென்ன கொசக்கெட்டவனே.
-----------

டேய், உன்ன பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்கு.
தாத்தா...அவன் பையன்.
அடப்பாவி, முடி வளத்து சட பிண்ணி இருக்கான். கடுக்கன் போட்ருக்கான். பின்னாடி இருந்து பார்த்தா பொட்டபுள்ள மாதிரியே இருக்கான்.
அதான் தாத்தா இப்ப fashion.
என்னடா அவன் முடி பச்ச கலர்ல செம்பட்ட பாஞ்சிருக்கு?
தாத்தா...அது செம்பட்ட இல்ல. சாயம் பூசி இருக்கான். அதுவும் fashion.
ஏண்டா, உங்க பேஸன்ல, சோத்த வாயில தான போட்டுக்கறீங்க. இல்ல வேற எங்கயாச்சுமா.
------------

உன் பொண்டாட்டி எங்கடா?
அவ office போயிருக்கா. அவளுக்கு ராத்திரி shift தாத்தா.
நீ காலையில போயிடுவியா?
ஆமாம் தாத்தா.
அப்புறம் எதுக்குடா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.
-----------

போன மாசம் உங்க பெரிய தாத்தன் சாவுக்கு ஏன் வரல நீ.
எங்க தாத்தா, எங்க ரெண்டு பேருக்குமே officeல பயங்கர வேலை. வர முடியாத நெலம.
ஓ. சாயந்தரம் உன் பொண்டாட்டி அபியோட அம்மா செத்துட்டான்னு அழுதா. யாருடா அது அபி?
தாத்தா....அது கோலங்கள்ன்னு ஒரு TV நாடகத்துல வர பொண்ணு.
தாத்தன் சாவக்கூட டிவி பொட்டியில காட்டியிருந்தா அழுதிருப்பீங்களோ.
-----------

எவ்ளோடா சம்பாத்திக்கிற?
மாசம் 50,000 தாத்தா.
ராத்திரியில நல்லா தூங்குறியா?
எங்க தாத்தா. நல்லா தூங்கி வருஷ கணக்காகுது.
உன் வயசுல எனக்கு சம்பளம் 50 ரூவா தாண்டா. நான் கட்டய சாச்சா பொணம்தான். கோழி கூவுரவரைக்கும் என்ன நடந்தாலும் தெரியாது.
-----------

எப்படா புள்ள பெத்துக்க போறீங்க?
எங்க தாத்தா. முதல்ல ஒரு வீடு வாங்கனும். அப்புறம் ஒரு car வாங்கனும். அப்பறம் தான் குழந்தய பத்தி எல்லாம் யோசிக்கனும்.
சரி தான். நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டா உன் புள்ளய வீடும் காரும் தான பாத்துக்கனும்.
----------

சரிடா, நான் ஊருக்கு கெளம்பறேன்.
சரிங்க தாத்தா. போயிட்டு போன் பண்ணுங்க.
டேய் ஒன்னு சொல்றேன் மனசுல வச்சிக்க.

இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா.

Tuesday, April 17, 2007

பாட்டு மச்சி பாட்டு

வித்யாசாகர் ரொம்ப பெரிய music directorஆ இல்லாதப்ப போட்ட பாட்டு இது(படம்: பிரியம்). எல்லா பாட்டுமே superஆ இருக்கற இந்த படத்துல எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது. Again, வைரமுத்து rocks :)

[எல்லா பாடலும் கேட்க]
பிரியம்

[இந்த பாடல் மட்டும் கேட்க]
ஆதாம் ஏவாள்

[படித்துகொண்டே ரசிக்க]

[பல்லவி]
ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு...எந்த நெருப்பு


கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு
கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு
அந்த நெருப்பு...அந்த நெருப்ப்பூ


எந்த நெருப்பு...எந்த நெருப்ப்பூ

உள்ளத்தில் உறவை வார்க்கும் நெருப்பு
உன்னையும் என்னையும் ஈர்க்கும் நெருப்பு
அந்த நெருப்பு...காதல் நெருப்பு


[சரணம் 1]

காதல் என்பது காற்றை போல
காலங்கள் தேசம் பார்ப்பதில்லை


காதல் என்பது தீயை போல
எதிலும் பற்றும் கேள்வியில்லை


காதல் என்பது வெள்ளம் போல
கரைகளை வெள்ளம் கேட்பதில்லை


காதல் என்பது ஒட்டகம் போல
பாலைவனத்திலும் வேர்ப்பதில்லை


இதயம் காதல் கொண்டுவிட்டால்
இமயம் கூட தவிடுபொடி


காதல் கட்டளை இட்டுவிட்டால்
வானம் வந்து வணங்குமடி


ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
long live love

அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
long live love

[ஆதாம் ஏவாள்...]

[சரணம் 2]

காதல் என்பது பூவனம் அல்ல
போர்க்களம் என்றால் என்ன செய்வாய்


மாலை விடுத்து காதல் கையில்
வாளை எடுத்தால் என்ன செய்வாய்


மாலை ஏந்தி வந்தாலும், ஒரு
வாளை ஏந்தி வந்தாலும்
இரண்டையும் ஒன்றாய் பாவிப்பேன், நான்
எதையும் எதிர்த்து சாதிப்பேன்.


அயிரை மீன்கள் துணிந்துவிட்டால்
அட்லாண்டிக்கடல் பெரிதல்ல


சிட்டுகுருவிகள் நினைத்துவிட்டால்
சீன பெருஞ்சுவர் தடையல்ல


ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
i love you
அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
i love you

[ஆதாம் ஏவாள்...]

P.S: ஒன்னும் சொல்றதுக்கில்லை. எதோ உங்களால முடிஞ்சத.... :-)

Friday, April 13, 2007

அழகு ஆறு

எனக்கு பிடித்த அழகுகளில் ஆறு எழுதச்சொல்லி மாம்ஸ் அன்புக்கட்டளை போட்டிருந்தார். பாவனாவ பத்தி எழுதுன்னு அவர் directஆவே சொல்லி இருக்கலாம். சந்தோஷ பட்டிருப்பேன். இருந்தாலும் அன்புக்கு நான் அடிமை. So start meejic...

1. அம்மா: அது எப்படி உலகத்தில் எல்லா அம்மாக்களும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் ஊட்டி விடும் உணவு மட்டும் எப்படி எப்பொழுதும் sema tasteஆ இருக்கு.

2. அழகு: தமிழில் அழகு என்ற சொல் அழகாக இருப்பதால் அதை அழகானவற்றை குறிக்க பயன்படுத்துகிறோமா, இல்லை, அழகானவற்றை குறிக்க பயன்படுத்துவதால் அந்த சொல் அழகாக இருக்கிறதா.

3. தமிழ் பெண்கள்: சின்ன வயதில் இருந்தே site அடிச்சே வளர்ந்ததாலோ என்னவோ, அவ்வப்பொழுது மலையாள கரையோரம் ஒதுங்குவது மாதிரி தெரிந்தாலும், தமிழ் பெண்களின் அழகிற்கு நான் அடிமை.

4. பாடல்: ராஜபார்வையில் வரும் 'அழகே அழகு' (inspite of its popularity being suppressed by அந்தி மழை) and பாட்ஷாவில் வரும் 'நீ நடந்தால்'. அழகு என்றவுடன் என் நினைவிற்கு வருபவை.

5. மழலை நடை: மயில் அழகு, மான் அழகு என்பார் தத்தி தத்தி வரும் மழலை நடை அழகு பார்க்காதோர்.

6. நீ(ங்கள்): உலகத்தின் அழகு எல்லாம் ஒன்றே ஒன்று, உன் கண்ணாடி பார்த்துவிடு புரிந்து போகும்.

Me tagging

1. K4karthik
2. Raji
3. Ramya
4. Sachin Gops
5. SKM
6. Veda

Sunday, April 08, 2007

நீயும்.....நீயாகிய நானும்

நீ சூரியன்
நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெரிப்பவள்
நீ

நீ
போடும் கோலத்தில்
சிறைப்பட்ட
புள்ளி நான்
விட்டு விலகவும்
மனமில்லை
வெளியே வரவும்
வழியில்லை

என்
காதல் கடிதங்களில்
முதல் வரி நான்
முகவரி நீ


கொக்கிடம் தப்பி
தூண்டிலில் மாட்டிய மீன்
நான்
காதலிலெல்லாம் தப்பித்து
உன் கண்களில்
மாட்டிக்கொண்டேன்


எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்
உன்னை காதலித்து
காதலாகி போனேன்


P.S: கவிதைக்கு (???) comment போடுற மாதிரி ஒரு கஷ்டமான வேலை இருக்குமான்னு தெரியல. கண்டிப்பா 'நல்லா இருக்கு'ன்னு தான் சொல்லனும். நல்லா இல்லனு சொல்லிட்டு இந்த இடத்தை விட்டு போயிட முடியுமா என்ன. auto, lorry ஏன் இப்பலாம் சொந்தமா flight செஞ்சி வீட்டுக்கு வரும். எல்லாருமே நல்லா இருக்குன்னு சொன்னா அதுல எதாச்சும் உள்குத்து, orkutu இருக்கான்னு தெரியாது.

நிஜமாக 'நல்லா இருந்து' எல்லாரும் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னதுக்கு அப்புறம் நாமலும் போய் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னா அந்த 'நல்லா இருக்கு'க்கு effect இருக்குமா (இது பற்றி குரு கிட்டக்கூட கேட்டேன்). நாம படிக்காமலயே 'நல்லா இருக்கு'ன்னு சொன்னதா நெனச்சிடுவாங்களோ.

எவ்ளோ கஷ்டமப்பா!

இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுலயும் நீங்க எல்லாம் பொறுமையா comment போட்டுட்டு போறீங்க பாருங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

ரொம்ப நன்றி ஹை !

Friday, April 06, 2007

மறந்து போன மனிதநேயம்

scene 1:

காலையில டீ குடிக்க போனேன்.

டீ கடையில ஒரு சின்ன பையன். படிச்சி இருந்தா அவன் ஐந்தாவது படிக்கனும். அங்க வேலை பார்க்கிறான். திடீர்னு டீ மாஸ்டர் mobileக்கு ஒரு call வருது. அந்த பையன் வீட்ல இருந்து பேசறாங்க. அந்த பையன் வாங்கி

"ஆங், சொல்லுமா" என்கிற போது அவன் குரல் உடைகிறது. அங்க பேசுற அவனோட அம்மா மனசு எப்படி இருந்து இருக்கும்.

"சீக்கிரம் பேசிட்டு, இந்த டீயை எடுத்துட்டு போ". இது மாஸ்டர்.

scene 2:

office முடிஞ்சி bus-ல வரேன். ரோட்டோரத்தில ஒரு சின்ன பையன் அவனை விட ரெண்டு மடங்கு எடையுள்ள புத்தக மூட்டைய தூக்கிட்டு தள்ளாடி தள்ளாடி நடந்து போறான். இவனும் ஐந்தாவதுதான் படிக்கனும். அந்த பக்கம் வரும் motoristகிட்ட எல்லாம் கைய காட்டி lift கேட்கிறான்.

யாரும் நிறுத்தல. ஆனாலும் அவன் முகத்தில கவலை இல்ல. ஒவ்வொரு தடவை lift மறுக்கப்படும் போதும் சிரிச்சிக்கிட்டே தள்ளாடி நடக்கிறான். நான் பார்த்த வரைக்கும் ஒரு 10 பேர்கிட்ட கேட்டான்

ஒருத்தர் கூட தரலை. ஏன் நிறுத்த கூட try பண்ணல.

-------------

ரெண்டு பேர் வெட்டிக்கிட்டு சாகும் போது எனக்கு வருத்தம் ஏற்படுவதில்லை. ஆனா இது மாதிரி நிகழ்வுகள் என்னை உலுக்கிடுது.

காசு மட்டுமே துரத்துர மனிதர்களின் இதயம் கூட concrete கல் தான் போல.

Thursday, April 05, 2007

இன்றைய பாட்டு

நிறைய நாள், நாம எழுந்திருக்கும் போதே ஏதாச்சும் ஒரு பாட்டோட எழுந்திருப்போம். அன்னைக்கு full-a அந்த பாட்ட humm பண்ணிக்கிட்டே இருப்போம். பக்கத்துல இருக்கறவங்க "லூசாப்பா நீ" look விடுவாங்க. அதை எல்லாம் தொடச்சி எரிஞ்சிட்டு பாடும்வோம் பாருங்க...அங்க நிக்கிது அந்த பாட்டு.

அப்படி ஒரு பாட்டுதான் இது. ஏன் இந்த பாட்டுன்னு தெரியல(ஒருவேளை SKM madam blog-la படிச்ச positiveவோட தாக்கமா இருக்குமோ) .

அப்பு படத்தில எல்லாமே நல்ல பாடல்கள் தான், but my fav is this one. நமக்கு எப்பவும் தத்துவத்தை wholesale-ல் sponser செய்யும் வைரமுத்து தான் இந்த பாட்டையும் எழுதி இருக்கார்.

[கேளுங்க]

வாடா...வா

[படிங்க]

[பல்லவி]

அம்பது ரூபா தான்
அம்பது ரூபா தான்
நண்பா, என் தேவை எல்லாம் நாளுக்கொரு
அம்பது ரூபா தான்

வாடா வா...நீ...வாடா வா
வாடா வா...நீ...வாடா வா

ஆசை இல்லை, அவஸ்த்தை இல்லையே
நீ...வாடா வா
ஆஸ்தி இல்லை, அச்சம் இல்லையே
நீ...வாடா வா


உன் ஒரு நாளை
உன் ஒரு வாழ்வாய்
கொண்டாடு...வா

பாதத்துக்கு செருப்பிருந்தா பாதை எல்லாம் மெத்தைதான்
போதுமென்ற மனம் இருந்தா பூமி எல்லாம் சொர்க்கம்தான்


[அம்பது ரூபா தான்...]

[சரணம் 1]

வயிறு என்னும் பள்ளத்துக்குள்ள வாழ்க்கையை தொலச்சோம்
வாழ்க்கையை தொலச்சோம்
வயித்தவிட்டு இதயம் என்னும் வீட்டுக்கு வருவோம்
வீட்டுக்கு வருவோம்

தேய்பிறையால் தான் பௌனர்மிக்கு பெருமை
துன்பத்துக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை


புத்தி உள்ள ஆளுக்கு தொட்டதெல்லாம் தூளப்பா
பறவைக்கு வானத்தில் மேடுபள்ளம் ஏதப்பா

லட்சியம் ஏதுமில்லை அன்னனைக்கு வாழப்பாரப்பா

[அம்பது ரூபா தான்...]

[சரணம் 2]

குழந்தைகளாய் இருக்கையிலே கொள்ளை ஆசை இல்லையே
கொள்ளை ஆசை இல்லையே
குழந்தை மனம் தொலைந்தனால் வந்ததிந்த தொல்லையே
வந்ததிந்த தொல்லையே

நரகத்தில இன்பம் காணும் குழந்தையின் வயசு
சொர்க்கத்திலும் துன்பம் காணும் மனிதனின் மனசு


பூமி எல்லாம் கடலென்றால், நீ மீனாகத்தான் வாழனும்
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால், நீ புல்லாங்குழல் ஆகனும்

[அம்பது ரூபா தான்...]


p.s: இதுக்கெல்லாம் என்னடா comment போடுறதுன்னு கேடகறீங்களா. பாட்ட பத்தி, பாடினவங்கள பத்தி, இந்த படத்தில மட்டும் அழகா இருந்த தேவயானி பத்தி, எங்க இருந்துதான் சுடுறாறுன்னு தெரியாம் வஸந்த் படத்துக்கு மட்டும் சூப்பரா சுடுற தேவா பத்தி, ரொம்ப தைரியமா ரெண்டு heroine (அட, பிரசாந்த் தான் இன்னொரு heroineன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய போகுதா என்ன) வச்சி படம் எடுத்த வஸந்த் பத்தி, உங்களுக்கு இந்த பாட்டு ஏன் பிடிக்(கும்/காது) பத்தி, அட, எதுவுமே தோனலனா இப்படி எல்லாம் blog உலகத்துக்கு சேவை செய்யற என்ன பத்தி(???). இப்படி எத பத்தியாச்சும் comment போட்டுட்டு போங்கப்பா :-)

Saturday, March 31, 2007

படித்ததில் பிடித்தது

மரம் சும்மா இருந்தாலும்

        காற்று விடுவதில்லை

மனம் சும்மா இருந்தாலும்

        காதல் விடுவதில்லை !


உதிர்த்தவர்: கரு.பழனியப்பன் (directors எல்லாம் வெளிநாட்டில room போட்டு ஏன் யோசிக்கறாங்கன்னு இப்பத்தான் புரியுது).

படிச்சவுடனே share பண்ணனும்னு தோணிச்சி, அதான் உடனே போஸ்ட்டிடேன்.

மக்கள்ஸ், இந்த postக்கு comment போட்டுகிட்டே இருப்பீங்களாம், நான் அதுக்குள்ள அந்த post commentsக்கு பதில் போட்டு விடுவேனாம்.

ஆங், சொல்ல மறந்துட்டேன். போன postக்கே இன்னும் நிறைய பேர் மொய் எழுதல. மறக்காம அங்கயும் எழுதிடுங்க. இதான் சாக்குன்னு இங்க மட்டும் எழுதிட்டு போக கூடாது.

(எப்படிடா பரணி.....பிண்ற. என்னவோ போடா)

Thursday, March 29, 2007

வர வர வர எல்லாமே weird

ஏற்கனவே காதல் யானை வளர்க்கும் பிரியா ஒரு தடவை tag செய்து என்னுடைய பயங்கரமான ஒரு weird பத்தி இங்கே எழுதியிருந்தாலும், இப்ப பாடும் நிலா மருதம் பாசத்தோட tag செய்திருக்காங்க. பாசத்துக்கு நான் அடிமை (மனசாட்சி: டேய் அடங்குடா, too muchஆ பேசாத). weirdக்கா பஞ்சம். So again, மருதம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு, start meejic...

1. என்னோட பேசும் போது நீங்க உங்க கையால என்ன பண்றீங்களோ, நானும் அதே செய்வேன். நீங்க சொடக்கு போட்டுகிட்டே பேசினா, நானும். நீங்க கையை கட்டிகிட்டு பேசினா, நானும். நீங்க தலை கோதிக்கிட்டே பேசினா, நானும். நீங்க சொறிஞ்சிக்கிட்டே பேசினா....but நீங்க கபால்ன்னு பாஞ்சி என்னோட கையை புடிச்சிக்கிட்டா...me the surrender.

first இது மத்தவங்களோட weirdன்னு நெனச்சேன். அப்பாலதான் புரிஞ்சிது இது நம்மளோடதுன்னு.

2. எனக்கு ஒப்பாரி பாடல்கள் பிடிக்கும் (சரி, சரி...அந்த look வேண்டாம்). sampleக்கு சொல்லனும்னா, பம்மல் k சம்மந்தத்தில் வரும் "ஏண்டி சூடாமனி"யும், விருமாண்டியில் வரும் "மாட விளக்க" பாட்டும் என்னோட fav. இந்த பாட்டயெல்லாம் rewind பண்ணி, rewind பண்ணி கேட்டப்ப என்ன கொல்ல வந்துட்டானுங்கோ என்னோட "உயிர் நண்பர்கள்".

but, என் மனதின் ஏதோ ஒரு வெற்றிடத்தை இந்த பாடல்கள் நிரப்புகின்றன.

3. "ஏண்டா பரணி, சிம்ஸும், சரத்தும் boxing போட்டிக்கிட்டே ஆடுவாங்களே அது என்ன பாட்டு."
"டேய், அது அடிக்கிற கை அனைக்குமா-டா, நட்புக்காக படத்துல வரும்".
"excuse me bharani, நேத்து java 5 traningல boxing feature பத்தி சொன்னாங்களாமே, கொஞ்சம் சொல்லு".
"Oops...sorry sir, மறந்திட்டேன்".

அதே தான். எது ஞாபகத்தில் இருக்க வேண்டுமோ அத correctஆ மறந்துடுவேன். எத மறக்கனுமோ அத மறக்கவே மாட்டேன். இதனாலயே நான் interview attend பண்றதில்ல. நாலு வருஷமா ஒரே companyல இருக்கேன்னா பாருங்க :(

4. என்ன யோசிக்க வைக்கிறது ரொம்ப குஷ்டம், சே, கஷ்டம். ஒரு பத்து மணி நேரம் விட்டத்த பார்த்துக்கிட்டே, Einstein look விட்டுகிட்டு உட்கார்ந்திருப்பேன். என்னடா யோசிக்கிறேன்னு யாரச்சும் கேட்டா no answer. (மனசாட்சி: 'பையித்தியக்கார பய'னு சொல்லுவாங்க, அத சொல்ல மாட்றான் இந்த dog).

இதனாலயே என்னிடம் நீங்கள் எது பற்றி கருத்து கேட்டாலும், அதற்கு positive பதில்தான் கிடைக்கும்.

5. எல்லாரும் night கண்ணு முழிச்சி படிக்க tea குடிப்பாங்க. நான் நல்லா தூங்கறதுக்கு tea குடிப்பேன். (ஹி...ஹி...நீங்க நெனக்கறது புரியுது. but என்ன செய்ய). college daysல எல்லாரும் night 1 மணிக்கு போய் tea அடிச்சிட்டு வருவோம். வந்து எல்லாரும் சுறுசுறுப்பா book எடுப்பானுங்க. நான் அப்படியே படுத்து கொறட்ட விடுவேன் பாருங்க...எல்லாரும் ஒன்னு கூடிடுவானுங்க பொது மாத்துக்கு :)

இப்ப கூட second shift போயிட்டு 12 மணிக்கு வரும் போது, நாயர் கடையில எறங்கி ஒரு SP அடிச்சிட்டு வீட்டுக்கு போய் படுத்தா....சொர்க்கம் :)

சிரி(ங்க) மக்களே, இத இன்னும் அஞ்சி பேரு தலையில கட்டணும். எனக்கு தெரிஞ்சி நிறைய பேர் இத எழுதிட்டாங்க. இருந்தாலும் me tagging

1. Ace (அண்ணே, நீங்க இன்னும் எழுதல இல்ல)
2. Arun (எப்படி அடுத்த postக்கு matter குடுத்தேன், பார்த்தீங்களா)
3. DD (சிஸ்டர், fotoலயே கூட நீங்க எழுதலாம்)
4. Filbert (கண்டிப்பா எழுதிடுங்க, இந்த titleக்காகவாவது :-))
5. Mgnithi (உனக்கு தனியா வேற சொல்லனுமாடா)



Update: @இதுவரை_comment_போட்ட_பாச_மலர்களே....5வது weird சற்றே sentiயாக போனதால், அதற்கு பதிலாக வேறொரு wierd (நான் தான் சொன்னேல்ல...weirdக்கு பஞ்சமில்லைன்னு) போட்டிருக்கேன். அதையும் படிச்சிட்டு புதுசா comment போடுங்க. (மனசாட்சி: ஏண்டா, comment வாங்கறதுக்கு இதெல்லாம் ஒரு வழியா, உருப்படவே மாட்ட நீ...)

Wednesday, March 28, 2007

திங்கள் கிழமைகள்

நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கும் திங்கட்கிழமைக்கும் நட்பிருந்ததாக நினைவில்லை. முடிந்த ஞாயிறின் மிச்சமாகத்தான் இருந்திருக்கின்றன் பாதி திங்கள்கள். பள்ளி, கல்லூரி நாட்களில் "அய்யோடா திங்கள் வந்துவிட்டதே" என்று ஆயாசமாகத்தான் இருக்கும். வகுப்பில் அதிகம் தூங்கியது திங்கட்கிழமைகளில்தான். திங்களன்று நடந்த தேர்வுகளை சரியாக எழுதியதில்லை.

எந்த புதிய வேலையையும் ஆரம்பிக்க திங்கள் வரை தள்ளிப்போடுபவன் நான். கோச்சிங் சேர வேண்டுமா, வாக்கிங் போக வேண்டுமா, புது பாடம் படிக்க வேண்டுமா, இன்னும் ஏன், ஒரு பெண்ணிடம் புதிதாக பேச வேண்டுமா...திங்களில் தான் ஆரம்பம். இப்படி நான் பார்த்து பார்த்து திங்களில் ஆரம்பிக்கும் வேலைகள் பெரும்பாலும் புதனுக்கு மேல் தொடர்ந்ததில்லை. அதனாலேயே திங்கள் பிடிக்காது எனக்கு.

நட்பு இழந்த திங்கள், பரீட்சைக்கு பயந்து அழுத திங்கள், மிகவும் எதிர்ப்பார்த்து மருத்துவம் கிடைக்காத திங்கள், விளையாட்டாய் பேசிய பேச்சொன்று விபரீதத்தில் முடிந்த திங்கள், விபரம் தெரிந்து அம்மாவிடம் அழுத திங்கள் என்று வாழ்வு முழுவதும் மறக்க முடியாத திங்கள்கள் நிறைய.

ட்யூஷன் தோழிக்கு அல்ஜீப்ரா சொல்லிக்கொடுக்க காத்திருந்த திங்கள், நண்பர்களுடன் விடிய விடிய கதை பேசியபடியே விடிந்த திங்கள், வெள்ளி இரவு முழுதும் பேசிய பின்னும், குறைந்த எதோ ஒன்றை பேச காத்திருந்த திங்கள் என்று ஐஸ்கீரிம் தலை செரிப்பழ திங்கள்களும் உண்டு.

ஞாயிறுக்கு பிறகு ஏன் செவ்வாய் வரக்கூடாது என்பது எனது நீண்ட நாள் கனவு.

பாருங்கள், திங்கள் பற்றிய பதிவை செவ்வாய்கிழமை போடும் அளவு திங்களை வெறுப்பவன் நான்.

Thursday, March 22, 2007

cocktail

ஒரு தத்துவம்

எல்லா வெளிச்சமும் இருளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன! (இது மாதிரி எல்லாம் தத்துவம் சுட்டு எவ்ளோ நாளாச்சி கடவுளே)

ஒரு வசனம்

காதலன்(இவர் கவிதை எழுதரவராம்): உனக்கு என்னை பிடிக்குமா, என் கவிதையை பிடிக்குமா?
(பயங்கர புத்திசாலித்தனமா கேள்வி கேட்கிறாராம், அண்ணாத்த)

காதலி: எனக்கு கவிஞனை பிடிக்கும் !
(அண்ணி வச்சாங்க சூப்பர் ஆப்பு)

ஒரு பாட்டு

ஆண்: நீ தாய்மொழி பேசிடும்போது
அந்த ஆங்கிலம் தேம்புது பாரு
அய்யயோ எனக்கு
பாவமா இருக்கு

பெண்: நீ என்னிடம் பேசிடும்போது
மொத்த பெண்ணினம் ஏங்குது பாரு
அய்யயோ எனக்கு
பயமா இருக்கு

ஒரு சினிக்கூ

நீரின் தோளில்
கை போடும்
ஒரு
சின்னத் தீயின்
கதை...

காதல்

பி.கு: மக்களே, உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கும் (இந்த matter எல்லாம் நான் படித்தது and கேட்டது) இது எதுவுமே என்னோடது இல்லனு...அதுக்காக comment போடாம போயிடாதீங்க...இவற்றின் sourceஐ கூட நீங்க commenta போடாலாம்...எப்படி எல்லாம் idea தரேன் பாருங்க comment போட :)

Friday, March 16, 2007

கிறுக்கல்ஸ்

வழி வழியாய்
தேவதைகளுக்கெல்லாம்
ஒரே வேலைதான்
விழி வழியாய்
இதயம் திருடுவது


விண் நோக்கி போவதெல்லாம்
மண் நோக்கி திரும்புவது
ஈர்ப்பு விதி என்றால்
உன்
கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி


உன்
விரல் பிடித்து
நடக்க
காத்திருக்கிறேன் நான்
உன்
நிழல் பிடித்து
நடக்கிறது என்
இதயம்


ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்
நான் பார்க்கிறேன்
நீ முறைக்கிறாய்


உன் கண்
பார்க்கும் பொழுது
நீ மண்
பார்க்கிறாய்
நீ மண்
பார்க்கும் பொழுது
வெட்கத்தில் சிவக்கும்
மண்
செம்மண் ஆகிறது


உன்னை காதலிக்காமல்
இருப்பது நரகம்
உன்னை காதலித்து
இறப்பது சொர்க்கம்


காதல் எனும்
கண்ணாம்மூச்சி
விளையாட்டில்
என் கண்ணை
கட்டிவிட்டு காணாமல்
போனவள்
நீ


மாதா
பிதா
குரு
காதல்



பி.கு: உங்களை எல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு. என்ன பண்ண. போன ஜென்மத்துல ஏதோ பயங்கர பாவம் பண்ணியிருக்கீய. வந்ததுதான் வந்துட்டீக, commentitu போங்க:)

Saturday, March 10, 2007

தீவாளி தத்துவங்கள்

"சுனாமி வருன்னு தெரிஞ்சே சுண்டல் விக்க வந்துருக்கானுங்கோ"

"இவனுங்களுக்கு விதி video games ஆடுது மாமு"

"பில்லு அடிச்சா செவுலு அவுலாயிடும், ஈரல் கீறலாயிடும்"

"சொந்த காசுல சூனியம் வச்சிக்காத மாமு"


இன்னாடா இவன் காக்கா வலி வந்தவன் கணக்கா கூவிகினு இருக்கானேனு மெர்சலாயிட்டீங்களா, காக்கா வலி இல்ல நைனா, தீவாளி.

தீவாளி, தீவாளின்னு ஒரு தலவலி பட்துலதான் இந்த பில்டப்பு டயலாக்கு எல்லாம். heroக்குதான் இத்தா தாண்டி பில்டப்பும். ஆனா காசு குட்த்து பாக்க வந்த நம்மல பாத்து கூவுற மாரியே இர்க்குபா. அத்தும் அந்த நாலம் டயலாக்கு நம்க்குதான்.

போன எட்துல பொங்கலு, சே, தீவாளி குட்த்துடானுங்கோ.

இன்னாத்துக்கு இந்த பட்துக்கு தீவாளினு name வச்சானுங்கோ. டைரக்குடக்கரு பொற்கொடி post பாத்து conceptஅ கபால் பண்ணிட்டாரு போல...ஹி...ஹி

சீக்காளி மாரி இருக்ர பட்துல சோக்காளி கணக்கா இருக்ர ஒரே matter, நம்ம டாவுதான். இன்னா அழ்கு, இன்னா அழ்கு. ஆன்னு பாக்கசொல்ல ஈ ஒன்னு வாயாண்ட போயிடிச்சிபா...அக்..கும்


ஏழு வண்ணங்களின் நிறமா நீ
விண்மீண் தாவரத்தின் விதையா நீ
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ
என்ன நீ...என்ன நீ


பி.கு: கபிலன் நம்ம டாவுக்குன்னே ஷோக்கா எழுதிகின பாட்ல வர்ர lines இது நைனா. இன்னாமா எழுதறாங்கோ. எல்லாம் மொக ராசி.

ஏண்டா கசுமாலம், நீ ஜொள்றதுக்கு ஒரு போஸ்டா. நீ சரக்கு அடிக்க நாங்க ஊறுகாயான்னு கோச்சிகாம comment வாரி குட்த்துட்டு போங்க சாமிங்களா :)

Wednesday, February 28, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை - தொடர்ச்சி

*** நம் துணை முதல்வர் தொடரும் உளறுதல் என் உள்ளத்தின் வேலை(தொடர்ச்சி) படிக்க கிளிக்கவும் ***


இரும்பில் இதயம்
எனக்கு
காந்த விழிகள்
உனக்கு

கண்ணன் வாயில்
உலகம் பார்த்த யசோதைக்கு
தெரியாது
உன் கண்ணை பார்த்தால்
கண்ணனே தெரிவான்
என்று

உன்னை பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும்
என்றில்லை எனக்கு
உன் பார்வை படும்
இடத்தில் இருக்க வேண்டும்
அவ்வளவு தான்

உன்
eye pass
செய்ததால் வந்த
heart attackற்கு
இப்பொழுது
bypass
செய்கிறார்கள்

விழும் பொழுதெல்லாம்
எழ வேண்டும் என்றவனுக்கு
விவரம் தெரியாது
உன் விழிகளில்
விழுந்தால் எழவே
முடியாதென்பது

நாம் சதுரங்கம் ஆடுகையில்
மட்டும்
என் சேனைகள் எல்லாம்
எனக்கெதிரே

நீ பல்லாங்குழி
ஆடுகையில்
பள்ளங்கள் என்
உள்ளத்தில்

நடந்ததை எல்லாம்
நண்பனிடம் கூறினால்
'எல்லாம் விதி' என்கிறான்

இப்பொழுது புரிந்ததடி
விதி என்பது
உன்
விழியின் இன்னொரு
பெயர்!

P.S: நான்காவது. மிச்சம் மீதி இருப்பவர்கள் comment போட்டுட்டு போங்க. மாம்ஸ், உங்க தலைப்பை உங்கள் அனுமதி இல்லாமல் சுட்டுட்டேன். excuse for that. அப்பால நான் உத்தரவு வாங்கிக்கறேன் :)


Update: இந்த relay கவிதையை (???) நம் கட்சியின் கொ.ப.செயும், துணை முதல்வருமான வேதா அவர்கள் தொடர்ந்து எழுதுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன் (கரகோஷம்...)அமைதி, அமைதி. அடுத்து நம் கட்சியின் சிங்கங்கள் அனைவரும் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்..... ஹி...ஹி....

Sunday, February 25, 2007

மொழி


வாழ்வின் அழகை, அதன் positivityயை, அதில் இழையோடும் மென்சோகத்தை,அதன் மேல் படர்ந்திருக்கும் மெல்லிய நகைச்சுவையை அப்படியே சொல்லும் தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி நம் மனசோடு பேசும் படம் தான் மொழி. Hats Off to RadhaMohan and Prakashraj.

இந்த post படத்துக்கான review அல்ல. உங்களை பார்க்க தூண்டும் ஒரு முயற்சி :)

Jo is deaf and dumb.
பிரகாஷ்ராஜ்: அர்ச்சனா, இசைன்னா உனக்கு என்ன?
ஜோ சைகை பாஷையில் சொல்றாங்க. ஸ்வர்னமால்யா அதை வார்த்தையில சொல்றாங்க....
ஜோ: இசைங்கறது எனக்கு ஒரு மொழி மாதிரி. எனக்கு ஹிந்தி தெரியாது. சைனீஸ் தெரியாது. அது மாதிரி இசையும் தெரியாது. ஆனா எனக்கு தெரிஞ்ச மொழி ஒன்னு உங்க யாருக்குமே தெரியாது.
எல்லாரும் ஜோவையே அது என்னன்னு பார்க்க....
ஜோ: அது மௌனம்

ஜோ, பிருத்திராஜோட காதலை accept பண்ணிக்கவே மாட்றாங்க. She has her own insecurity. climaxக்கு முன்னாடி ஒரு scene.

பிருத்திவிராஜ்: வாழ்க்கையில சில விஷயங்களை கேள்வி கேட்காம நம்பித்தான் ஆகனும். நாம பண்ற தப்ப உணர்ந்து திருத்திக்கலன்னா, பின்னாடி அத சரி செய்யறதுக்கான ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காமலே போயிடலாம்.

இசை எப்படி இருக்குன்னு ஜோ கேட்க, பிருத்திவிராஜ் அவங்க கையை speakerல வச்சி explain பண்ற மாதிரி ஒரு பயங்கர emotional scene வரும். THE ultimate scene of the movie.

தமிழ் சினிமா உயிரோடு இருப்பதற்கு மொழி மாதிரி படங்கள் தான் காரணம்.இந்த மாதிரி படங்கள் தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதற்காகவாவது எல்லோரும் பார்க்கனும்.

மொழி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த படத்தை விரும்பாதவர்கள் மட்டமான தமிழ் சினிமாவிற்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

Friday, February 23, 2007

கேட்கலாம், படிக்கலாம் (exam எல்லாம் கிடையாது)

விரும்புகிறேன் படத்தில் வரும் ஒரு அழகான பாடல் இது. தேவா எங்க இருந்து காப்பி அடிச்சாரோ, ஆனா சூப்பரா அடிச்சி இருப்பார். வழக்கம் போல் வைரமுத்து அசத்த, உன்னிமேனன் குரலில்...

கேட்டு ரசிக்க

http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5610/

1. மேலே உள்ள லின்கை கிளிக்கவும்.
2. விரியும் பக்கத்தில் "துடுக் துடுக்" என்று ஆங்கிலத்தில் இருக்கும் லின்கை மீண்டும் கிளிக்கவும் .

படித்து ரசிக்க

[பல்லவிக்கு முன்] (பல் வலிக்கு முன் இல்லீங்கோ)

கடைக்கண் பார்வைதனை கண்ணியர்தாம் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்
(இந்த portion மட்டும் பாவேந்தருடையது)

[பல்லவி]

ஒத்த பார்வை பார்த்தா
ஒடம்புல சக்தி ஏறுதாத்தா

பார்வை பட்ட இடத்தில்
புதுசா ரத்தம் ஊறுதாத்தா


முன்னால வந்தாயே
தன்னால ஜெயிச்சிபுட்டேன்

மின்னலாய் போனாயே
இதயத்தை தொலச்சிபுட்டேன்

[சரணம் 1]

வா வா என்று நான் கேட்ட போதும்
வந்தேன் என்று நீ தாவவில்லை

வானம் தாண்ட சிறகுள்ள போதும்
நானம் தாண்டி வெளியேரவில்லை


ஆகையினால் அடி
விரும்புகிறேன்

அரும்பு மலரும் வசந்த காலம்
ஆசை மலரும் கார் காலம்

அன்பு மலரும் ஆறு காலம்
ஒரு கண்ணில் இரு கண்ணில்

உலவ கண்டதால்
விரும்புகிறேன்

[முன்னால வந்தாயே...]

[சரண்ம் 2]

அசர வைக்கும் உயரமும் நீ இல்லை
அதிர்ச்சி தரும் குள்ளமும் நீ இல்லை
வசதிப்பட்ட உசரம்

என்பதனால் அடி ரதியே
விரும்புகிறேன்

கிளைகள் வேறு இருவருக்கும்
கூடுகள் வேறு இருவருக்கும்
பறக்கும் திசைமட்டும்

ஒன்றாய் இருப்பதானாலே
விரும்புகிறேன்


[முன்னால வந்தாயே...]

[சரணம் 3]

பெண்களை கண்டு மனம் துடித்ததில்லையே
காதல் வருமென்று நினைத்ததில்லையே
உன்னை கண்டதும்

என் கருத்து மாறியதால்
விரும்புகிறேன்

[ஒத்த பார்வை...]

பி.கு: வர வர ரொம்ப வறட்சியா போச்சி...அய்யயோ...projectல பொண்ணுங்க இல்லாதத சொல்லலிங்கோ...post போட matter எதுவும் கெடைக்காதத சொன்னேன்.....நீங்க அடிக்க வரதுக்குள்ள escappppuuuu :)

Thursday, February 15, 2007

Fw: Indian Grasshoppers

OLD VERSION

The ant works hard in the withering heat all summer long building his house and laying up supplies for the winter. The grasshopper thinks the ant's a fool and laughs & dances & plays the summer away. Come winter,the ant is warm and well fed. The grasshopper has no food or shelter so he dies out in the cold.

MODERN VERSION

The ant works hard in the withering heat all summer long, building his house and laying up supplies forthe winter. The grasshopper thinks the ant's a fooland laughs & dances & plays the summer away. Come winter, the shivering grasshopper calls a press conference and demands to know why the ant should be allowed to be warm and well fed while others are cold and starving.

NDTV, BBC, CNN show up to provide pictures of the shivering grasshopper next to a video of the ant in his comfortable home with a table filled with food.

The World is stunned by the sharp contrast. How can this be that this poor grasshopper is allowed to suffer so?

Arundhati Roy stages a demonstration in front of the ant's house.

Megha Patkar goes on a fast along with other grasshoppers demanding that grasshoppers be relocated to warmer climates during winter.

Amnesty International and Koffi Annan criticize the Indian Government for not upholding the fundamental rights of the grasshopper.

The Internet is flooded with online petitions seeking support to the grasshopper (many promising Heaven and Everlasting Peace for prompt support as against the wrath of God for non-compliance).

Opposition MP's stage a walkout.

Left parties call for "Bharat Bandh" in West Bengal and Kerala demanding a Judicial inquiry.

CPM in Kerala immediately passes a law preventing Ants from working hard in the heat so as to bring about equality of poverty among ants and grasshoppers.

Lalu Prasad allocates one free coach to Grasshoppers on all Indian Railway Trains, aptly named as the'Grasshopper Rath'.

Finally, the Judicial Committee drafts the Prevention of Terrorism against Grasshoppers Act [POTAGA]", with effect from the beginning of the winter.

Arjun Singh makes Special Reservation for Grasshopper in educational Institutions & in Govt Services.

The ant is fined for failing to comply with POTAGA and, having nothing left to pay his retroactive taxes,his home is confiscated by the Government and handedover to the grasshopper in a ceremony covered by NDTV.

Arundhati Roy calls it "a triumph of justice".

Lalu calls it 'Socialistic Justice'.

CPM calls it the 'revolutionary resurgence of thedowntrodden'

Koffi Annan invites the grasshopper to address the UN General Assembly.

Many years later...

The ant has since migrated to the US and set up a multi billion dollar company in silicon valley.

100s of grasshoppers still die of starvation despite reservation somewhere in India...

As a result of loosing a lot of hard working ants and feeding the grasshoppers, India is still a developing country...


Courtesy: Forward mail from a friend

Feb 14 - End Of The Day

Over hype குடுத்து ஓடாத தமிழ் படம் மாதிரியே முடிந்தது இன்றைய தினம். Period.

Wednesday, February 14, 2007

Feb 14 - Start Of The Day

காதலிப்பதும் காதலிக்கப்படுவதையும் விட அழகிய நிகழ்வுகள் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை பராபரமே.

ஆதலினால் காதல் செய்வீர் !