Tuesday, January 16, 2007

வானவில்லின் துண்டொன்று

நீ பிறந்தது
தேவலோகம் தான்

உன் பாதம் பட்ட
இடத்தில் தோன்றினார்கள்
தேவர்கள்
பிரம்மாவின் வேலை போனது

உன் உள்ளங்கை
உஷ்ணத்தில் உறங்கிவிட்டனர்
ஐயகோ திருமாலின் வேலை

உன் பார்வையில்
பற்றிக்கொண்டது
பார்த்தவரின் இதயங்கள்
சிவனின் வேலைக்கும் ஆபத்து

நீ பேசினாய்
வேதம் படிக்க ஆரம்பித்தனர்
சரஸ்வதி அச்சம் கொண்டாள்

சிரித்தாய்
செல்வங்கள் சேர்த்தனர்
கோபத்தில் கொதித்தாள் லட்சுமி

உன் சுண்டுவிரல்
தொட்டதில் வீரம் கொண்டனர்
பாவம் பார்வதி

எல்லா கடவுளுக்கும் வேலை போனது

பார்த்தார் பிரம்மன்

நாடு கடத்தபட்டாய்
பூலோகத்திற்கு

உலக தைரியமடி எனக்கு
உன்னை காதலிக்கிறேன்

நீ காதலிக்கிறாயா

பதில் சொல்லிவிடாதே

உன் உதட்டு அசைவில்
உறங்கிவிடும்

இத்தனை ஆண்டுகள்
உயிரோடிருக்கும் என்
இதயம்


பி.கு: முந்தின கவிதைக்கு(???) நீங்க கொடுத்த ஆதரவை நினைக்கும் போது கவிதை அருவி மாதிரி கொட்டுது. ஆனா அத எழுதனுன்னு நினைக்கும் போது உங்க கவலை தோய்ந்த முகங்கள் மனசில வந்து தடுக்குது. அதனால நிறுத்திக்கிறேன்.

யாருப்பா அது, தேங்கா மூடி தூக்கி போடுறது. நிறுத்திக்கிவோம். இத்தோட நிறுத்திக்கிவோம்.

Sunday, January 14, 2007

குடும்பத்திற்கு குண்டுவைப்போம்

வணக்கம் நேயர்களே. இது "உருப்படாத FM 111". நான் உங்க 'மொக்க' மோகன் and 'அறுவை' அருணா.

எற்கனவே மெகா சீரியல் பார்த்து சீரழிஞ்சி போகும் நம் தமிழ் மக்கள்ல, நல்லா இருக்கும் ஒன்னு ரெண்டு குடும்பத்துக்கும் குண்டுவைக்கும் நிகழ்ச்சிதான் இந்த 'குடும்பத்திற்கு குண்டுவைப்போம்'. வாங்க நேயர்களே நிகழ்ச்சிக்கு போவோம்.

திருமணமான தம்பதிங்க மட்டும் தான் இந்த நிகழ்ச்சிக்கு call பண்ணனும். உங்க கணவன் அல்லது மனைவியுடன் மட்டும் தான் call பண்ண வேண்டும். பக்கத்து வீட்டுக்காரன் மனைவி, எதிர்வீட்டு அம்மாவோட கணவன் கூட சேர்ந்து எல்லாம் phone பண்ணக்கூடாது. அதுக்கு 'இரவோடு இரவாக'ன்னு இன்னொரு நிகழ்ச்சி night 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும். அதுக்கு phone பண்ணுங்க.

இன்றைய நிகழ்ச்சியோட situation சொல்றோம், கவனமா கேட்டுக்கோங்க. உங்க கணவரோட அம்மா ஊர்ல இருந்து வந்து இருக்காங்க. அவங்க நெகம் வெட்டும் போது அது light-ஆ விரல்ல பட்டு ரத்தம் வந்துடிச்சி. உடனே அது நீங்க செய்த சதிதான்னு அவங்க உங்க கணவன் கிட்ட போட்டு குடுத்துடாங்க.

இப்ப உங்க ரெண்டு பேருக்கும் நடக்கிற சண்டைய நீங்க தத்ரூபமா நடிச்சி காட்டனும். அப்படி சூப்பரா நடிக்கிற தம்பதிக்கு divorce வக்கீல் fees நாங்க கொடுப்போம்.


சரி first caller கிட்ட பேசுவோமா.

MM: ஹலோ, யார் பேசறீங்க?
(no sound)
AA: ஹல்ல்ல்லோ, யார் பேசறீங்க?
K(கணவன்): நீங்க சூப்பரா இருக்கீங்க மேடம். ரொம்ப நாளா try பண்றேன்.
AA: ஹ..ஹ..ஹ...அப்படியா, நான் ஏற்கனவே committed. உங்க பேர் என்ன?
K: என் பேர் அஜித் மேடம். உங்க voice சூப்பரா இருக்கு.
AA: ஹ..ஹ..ஹ...நான் பல் தேய்கறதே இல்ல. அதான்.
MM: சரி போட்டியை ஆரம்பிப்போமா?
(no sound)
AA: நிகல்ச்சிக்கு போலாமா அஜித்.
K: 'ஆழ்வார்' படத்துக்கு போலாம் மேடம்.
AA: ஹ..ஹ..ஹ...நீங்க ரொம்ப comedy-ஆ பேசறீங்க.
MM: உங்க மனைவி இருக்காங்களா, அஜித்.
K: இருக்கா இருக்கா. மேடம் நீங்களே பேசுங்க. இந்த ஆள் எதுக்கு நடுவுல மொக்க போடுறான்.
AA: உங்களுக்கு situation தெரியும்ல, ஆரம்பிங்க.

K: ஏண்டி, எங்க அம்மா ஊர்ல இருந்து வந்தா, அவங்க விரல வெட்டிடுவியா நீ.
M(மனைவி): யோவ். நான் எங்க வெட்டினேன். அவங்கதான் நெகம் வெட்டினாங்க. அதுல சும்மா ரவோண்டு கிழிச்சிடிச்சி.
K: அது எப்படிடி தானா வெட்டும். நீ எதாச்சும் பண்ணி இருப்பா.
M: ஆமாம். நான் பூரியும் மசாலாவும் பண்ணி இருக்கேன். வந்து கொட்டிக்க.
K: தாலி கட்டின புருஷன்கிட்டயே எதுத்து பேசறியா. (பொளேர்)
M: குடிகாரா. குடிகாரா, dailyகி உங்கூட இதே ரோதனையா போச்சி. உங்க ஆத்தா வெட்டிகிட்டதுக்கு நான் என்னய்யா பண்ணுவேன்.
K: என்னடி திரும்ப திரும்ப எதுத்து பேசற. வெளிய போடி. வீட்ட விட்டு வெளிய போடி....

MM: சரி நேயர்களே. இன்னொரு குடும்பத்துக்கு குண்டு வச்சாச்சி. அந்த சந்தோஷத்த கொண்டாட இதோ ஒரு super hit பாடல்.

(அம்மாடி ஆத்தாடி....)

p.s:
நான்: தாயே, இந்த மெகா சீரியல்ல இருந்தும், phone போட்டு பாட்டு dedicate பண்ணி மக்களை கொல்ற நிகழ்ச்சியில இருந்து காப்பாத்து தாயே.
கடவுள்: மகனே, நான் 'ராஜ ராஜேஸ்வரி'யிலயும், 'வேப்பிலைக்காரி'யிலயும் busy scheduleல இருக்கேன். 2010 வரைக்கும் no dates. வேனுன்னா இப்பதிக்கு உனக்கு புடிச்ச பாட்டு சொல்லு, dedicate பண்றேன். என்னால அவ்ளோ தான் முடியும். எல்லாம் என்னோட சக்திய மீறி போயிடிச்சி மகனே.
நான்: ?*&%*&^%()%$##%

Happy Pongal

கும்புடறேனுங்கோ,

எல்லாருக்கும் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் (உனக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்ன்னு சொல்லி என்னை கலாய்க்க கூடாது, ஆமாம்).

பொங்கலுக்கு மத்தவங்களுக்கு வெண்பொங்கல் குடுங்க, சர்க்கரை பொங்கல் குடுங்க. ஆனா அல்வா குடுத்துடாதிங்க.

பொங்கல் எதிர்பார்த்து,
பரணி

Thursday, January 11, 2007

பாட்டு மச்சி பாட்டு

Cant resist from posting this. Superb melody from Yuvan (film: deepavali) with some good lyrics from Yugabharathi and an excellent singing by Vijay Yesudass. Dont miss it.



கேட்டு ரசிக்க
Kaadhal Vaithu

படித்து ரசிக்க

[பல்லவி]

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்


காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகால் அய்யோ தொலைந்தேன்


[சரணம் 1]

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை

நேரில் உன்னையே பார்த்தபின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்

அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்


[சரணம் 2]

உன்னை கண்டநாள் ஒளிவட்டம்போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி

உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி

கடலோடு பேசவைத்தாய்
கடிகாரம் வீசவைத்தாய்

மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில்கூட ரசிக்க வைத்தாய்

Wednesday, January 10, 2007

இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்

லட்சம் வார்த்தைகளில் இருந்து
எழுதிக்கொண்டு வருகிறேன்
நான்

ஒரே பார்வையில்
எரித்து விடுகிறாய்
நீ

ஆயிரம் முறை ஒத்திகைக்கு
பிறகு சொல்கிறேன்
நான்

மறந்தும் கூட யோசிக்காமல்
மறுத்து விடுகிறாய்
நீ

இரவு பகலாய் கோயில்
வாசலில் குடியிருக்கிறேன்
நான்

பார்க்காமலேயே பணம்
போட்டுவிட்டு போகிறாய்
நீ

யுகம் யுகமாய்
உன்னோடு இருக்கிறேன்
நான்

ஒரு நிமிடம் கூட
ஒட்டாமல் இருக்கிறாய்
நீ

நூறு முத்தங்களில்
சொல்லிவிடுவேன்
உனக்கான என்
காதலை

உன் ஒற்றை கண்ணீர்த்துளி
சொல்லிவிடுகிறது
எனக்கான உன்
மறுப்பை

பி.கு: இதை படித்த பிறகும் உயிரோடு இருப்பவர்கள் comment போட்டுவிட்டு செல்லுங்கள்.

யாருப்பா அது. பட்டம் மேல எல்லாம் எனக்கு ஆசையில்லை. என்னது கவிப்பேரரசு, கவிச்சக்ரவர்த்தி, கவிக்கம்பன், கவிப்புலி, கவிசிங்கம் பரணியா. போதும் போதும் இத்தோட நிறுத்திக்குவோம்.

okie...okie...நீங்க எல்லாம் ஒன்னு கூடி எனக்கு வீடு கட்றதுகுள்ள me escape :)

Sunday, January 07, 2007

காதல் collage

கவிதையாய்
வாழ முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
------------------------------------------------------------------------------
காதல்
தேவதைகளுக்கு பாஸ்மார்கையும்
தேவதாஸ்களுக்கு டாஸ்மாக்கையும்
கண்டிப்பாக தந்துவிடுகிறது
------------------------------------------------------------------------------
எனது கவிதையின்
முதல் வரி நீதான்
மொத்த கவிதையும்
ஒரே ஒரு வரிதான்
------------------------------------------------------------------------------
காதல் என்றால் என்ன?
நம் உடம்பில் இருக்கும் ஹார்மோன்கள் நம்மை உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்குகிறதே அது தான் காதல்.
------------------------------------------------------------------------------

P.S: இதையெல்லாம் நான் எழுதி இருக்கமாட்டேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். வேலையில்லாத யாரோ எழுதினத வேலையில்லாததுனால சுட்டு blog-ல போட்டது தான் என்னோட வேலை.

Wednesday, January 03, 2007

புலி பார்த்து பூனை...

"கலி முத்தி போயிடிச்சி ஆண்டவான்னு யோசிக்கிட்டே 'congrats-da bharani ambi'. "
"thanksங்கண்ணா. எல்லாம் நீங்க கொடுத்த inspirationதான். "
"என்னது நான் கொடுத்த inspirationஆ. என்னடா சொல்ற? "
ஆமாங்கண்ணா. Priyaல இருந்து எல்லாரும் உங்களை குழந்தை குழந்தைன்னு கூப்படறாங்களா. ஒரு பெரியவரை எல்லாரும் குழந்தைன்னு கூப்படுறதுனால அவருக்குள்ள ஏற்படுற ரசாயன மாற்றத்தை base பண்ணி தான்ணே இந்த கதையே எழுதினேன்.
"போடா.... உனக்கு என் மேல பொறாமை"

"நான் இடம் மாற்றம், பணி மாற்றம்ன்னு கொஞ்சம் busyஆ இருந்துட்டேன். actually நான் எழுதின செய்யுள் எல்லாம் collect பண்ணி அருணின் அட்டகாசங்கள்ன்னு ஒரு தொகுப்பு போட போறேன். அப்ப பாருங்க நான் யாருன்னு"

bala, gopal, indianangel, marutham எல்லாரும் "busyயா இருக்கோம், இந்த மாதிரி மொக்க விஷயத்துக்கெல்லாம் நேர்ல வர முடியாதுன்னு" ஒரு mail மட்டும் தட்டிடாங்க.

"நாம எப்படி பழகி இருக்கோம். என்கிட்ட கதை எழுதுவீங்கன்னு சொல்லவே இல்லையே".
"சொல்லி இருந்தா என்ன பண்ணியிருப்பீங்க dreamzz அவர்களே. "
"இந்த பக்கமே தலை வச்சி படுத்து இருக்கமாட்டேன். என்னால இதெல்லாம் தாங்க முடியாதுடா சாமி. நான் உண்டு, என் கவித உண்டுன்னு இருக்கேன். என்னை அப்படியே வுட்டுங்கப்பா"

"Congrats bharani. I know you will do it."
"filbert என்ன வச்சி comedy கீமடி எதுவும் பண்ணலயே"

"hey bharani கலக்கிட்டீங்க. நான் கூட 25 post போட்டுடேன். எனக்கு இந்த idea தோனலியே. ok. அடுத்தது அப்ப கதைதான். அதுக்கு முன்னால, இதுக்கு ஒரு treat. "
"அதுக்கென்னா குடுத்துட்டா போச்சி. உங்களுக்கு இல்லாத treat-ஆ g3"
"என்னது treat. நீங்க குடுக்க போறீங்க. அதை நான் நம்பணும். இப்படி சொல்லி சொல்லியே இது வரைக்கும் 100 treat pending. மவனே ஒன்னு நீ treat தர, இல்ல என்னோட treakகாச்சும் வந்து கட்டிட்டு போ"

"அவன் அவன் பாகம் பாகமா கஷ்டப்பட்டு கதை எழுதிக்கிட்டு இருக்கான். அவனுக்கெல்லாம் விட்டிட்டு."
"என்ன சொல்லிறீங்க gils. ஒன்னும் புரியலையே"
"இரு நான் போயி முதல்ல பார்த்த ஞாபகம் இல்லையோவ முடிக்கிறேன். அப்ப புரியும்."

"அடப்பாவி மாப்ள, உன்னை நம்பி நிதியமைச்சரா போட்டதுக்கு, எவ்ளோடா லஞ்சம் குடுத்த? "
"என்ன மாம்ஸ், என்ன சொல்றீங்க? "
"அடப்பாவி, அரசு கஜானாவை சுத்தமா தொடச்சிட்டியேடா, அடுத்த வேளை ஆட்சி எப்படிடா நடத்துறது. இப்பவே பொதுகுழுவை கூட்றேன். மாப்பு வச்சிடியேடா ஆப்பு"

"நான் ஏற்கனவே dipika இந்தியாவ விட்டு போக போறான்னு துக்கத்தில இருக்கேன். இதுல இப்படி ஒரு news சொல்லி என்னை total upset பண்ணிட்டீங்களே. இந்த semester நெலமை ரொம்ப கவலையா இருக்கு கடவுளே - bsk ஏன் உனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது"

"கலக்குற பரணி. இந்த கதை bird watching பத்திதானே. எனக்கு குடுப்பா. tips எதாச்சும் இருந்தா use பண்ணிக்கிறேன்."
"குருவே உங்களுக்கா. why torch for sun. இதுல உள்ளது எல்லாம் நீங்க குடுத்த tips தான்."
"அதான பார்த்தேன். kkவா கொக்கா. ஹா....ஹா.....ஹா"


"US வந்த உடனே current இல்லாம நானே shockல இருக்கேன். இதுல இன்னொரு shocking newsஆ. என்னால தாங்க முடியாதுடா சாமி. பொற்கொடி உனக்கு என்ன போதாத நேரமா, where is my ரங்கமனி, இந்த சின்னபொண்ண காப்பாதுங்க"

"what is this bharani. again you have written in tamil. நாலு line தமிழ்ல படிக்கவே ரொம்ப கஷ்டப்படுறேன். இதுல full book-a. OMG Prithz. மத்தவங்க எல்லாம் ரொம்ப புகழ்றத பார்த்தா, அவ்ளோ கஷ்டபட்டு இத அவசியம் படிக்கனுமா என்ன?"
"if you are not studing this book, you are missing something."

"hey bharani, வழக்கம் போல கலக்கிட்டீங்க. "
"என்ன இருந்தாலும் priya, உங்க கண்ணாளனே மாதிரி வராதுங்க. எல்லாம் அந்த inspiration தான். "
"நான் கூட கண்ணாளனே தான் final list-ல இருக்குன்னு கேள்வி பட்டேன். ஆனா அதுக்குள்ள ஏதோ orkuttu, சாரி உள்குத்து நடந்து இருக்கு. தலைவர் சொன்ன மாதிரி நீங்கதான் ஏதாச்சும் பண்ணுனீங்களோ. "
"நீங்க வேற, அசின் double act பண்றாங்கன்னு எல்லா பணத்தையும் தசாவதாரதுக்கு sponser பண்ண சொன்னதே தலைவர்தாங்க. இதெல்லாம் அரசரகசியம். பொது கூட்டத்தில பேசுவோம். அப்பொழுது உண்மைகள் வெளிவரும் என்பதை இந்த நேரத்திலே சொல்ல கடமை பட்டு
இருக்கிறேன். "
"எப்படியோ மாமாவும் மாப்ளயும் சேர்ந்து கண்ணாளனேவ காணாம பண்ணிட்டீங்க. நல்லா இருங்க. "

"ஹாய்டா, கலக்கிட்ட. கதை எல்லாம் எழுதற. எப்படிடா. "
"அது தெரியாமதான் நானே முழுச்சிகிட்டு இருக்கேன் ரம்யா."
இது கூடவா தெரியல. என்னோட friend ஆயிட்டல்ல அதான்.
"அப்ப நீயும் என்ன மாதிரி super-அ கதை எழுதுவியா. "
"ஆமாம். ஆனா நான் எழுதற கதைய எல்லாரும் படிப்பாங்க. ஹி...ஹி"

SKM மேடம் அப்படியே எட்டி பார்க்கறாங்க. "இந்த பய மட்டும் அடங்கவே மாட்டேங்கறானே. நாட்ல யார் யாரயோ encounter-ல போடுறாங்க. இவன் blog எழுதறேன்ற பேர்ல எல்லாரையும் கொல்றானே அதுக்கெல்லாம் encounter இல்லாயா"ன்னு யோசிக்கிட்டே silent-ஆ போயிடராங்க.

திடீர்ன்னு ஒரு trunk call...

"வாழ்த்துக்கள் நண்பா. யார் என்ன சொன்னலும் நான் இருக்கேன் உன்னோட supportக்கு. நீ கலக்கு.
"thanks sasi. இப்பதான் கொஞ்சம் தையிரியமா இருக்கு. இந்த நேரத்தில நீ பழநில இருக்கியே. "
"இதோ இப்ப கிளம்பி வரேன். "

"சாகித்ய அகாதெமிய என்ன சைதாப்பேட்டை figures-ஆ நடத்தறாங்க. "
"ஏன் நாட்டாமை இப்படி ஒரு சந்தேகம். "
"இல்ல உனக்கு எல்லாம் குடுக்கறாங்களே அதான். PTI பசங்க nite அடிச்ச சரக்கு தெளியாம எதாச்சும் உளறியிருப்பாங்க. நீ இதையெல்லாம் பெருசா எடுக்காத. நாட்டாமை நான் இருக்கும் போது வேற யாருடா wrong தீர்ப்பு சொன்னது. தோ வரேன். "

"டமால்"ன்னு ஒரு சத்தம். திடீர்ன்னு கண் முழிச்சி பேய் முழி முழிக்கிறான் பரணி. பார்த்தா

"என்ன பரணி, தமிழ் வகுப்புல அதுவும் என்னோட வகுப்புலயே தூங்கறியா. படவா. "
"இல்லீங்க வேதா மேடம். ஒரு சூப்பர் கனவு."
"வகுப்புல தூங்கறதே தப்பு. இதுல கனவு வேறயா. என்னப்பா அது. "
"நான் எழுதின கதைக்கு சாகித்ய அகாதெமி award குடுத்து இருக்காங்க. "
"அடப்பாவி.
நாளைக்கு வகுப்புக்கு வரும்போது அ-னா, ஆ-வன்னா 10 தடவை imposition எழுதிட்டு வா."

பி.கு: இதில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் கற்பனை அல்ல. ஆனால் அவர்களின் கருத்துகள் எல்லாம் சுத்தமான 100% அக்மார்க் கற்பனை. ஹி....ஹி....ஹி

Monday, January 01, 2007

Happy New Year

என் இனிய blog மக்களே,

Wishing you all a Very Happy & Prosperous New Year.

புது வருஷம். புது pickupகள், புது dropகள், புது getupகள், புது setupகள், புது நண்பர்கள், புது எதிரிகள், புது வரவுகள், புது செலவுகள் எல்லாம் உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டதாகவும், உங்கள் budgetக்கு உட்பட்டதாகவும் இருக்க என்னோட வாழ்த்துக்கள்.

singleஆ இருக்கறவங்க mingleஆக பாருங்க. team memberஆ இருக்கறவங்க project leadஆக பாருங்க. leadஆ இருக்கறவங்க CEO ஆக பாருங்க. இந்த companyல இருக்கறவங்க அந்த company போக பாருங்க. அந்த நாட்டுல இருக்கறவங்க இந்த நாட்டுக்கு போக பாருங்க. வேலை இல்லாம வெட்டியா இருக்கறவங்க நல்ல பணக்கார மாமனாரா பாருங்க.

நம்ம தலைவர் சொன்ன மாதிரி கணவு காணுங்க. கணவுல என்ன சின்ன கணவு, பெரிய கணவு.

உங்களுடைய ஆசைகள், கணவுகள், விருப்பங்கள், வேண்டுதல்கள் அனைத்தையும் இன்றே, இப்பொழுதே நிறைவேற்றிட அந்த ஆண்டவனுக்கு ஒரு urgent amendment போடுகிறேன்.

பவ்யமுடன், (பாவனாவுடன்னு தப்பு தப்பா படிக்க கூடாது)
பரணி

பி.கு: இது ஒரு post dated post. So Jan 1st அன்றுதான் அமலுக்கு வரும் :)

Monday, December 04, 2006

இதனால் சகலமானவர்களுக்கும் ...

I am taking a short non-commercial break from blogging.

Correct. Correct. நீங்க கேட்கறது கேட்குது.

இதனால,

மக்களோட வாழ்க்கை தரம் உயரப்போறதில்லை. ரேஷன் கடையில அரிசி, சர்க்கரை எல்லாம் சரியா கிடைக்க போறதில்லை. தேவையான நேரத்தில் தேவையான அளவு மழை பெய்ய போறதில்லை. வீட்டுக்கு ஒரு கலர் டிவி கொடுக்கறவங்க அதுக்கு பதிலா வீட்டில் ஒருத்தருக்கு வேலை தரப்போறதில்லை. முல்லை பெரியார் விவகாரத்தில் முடிவு கிடைக்கபோறதில்லை. அட atleast சிம்புவும் அவங்க அப்பனும் நம்மள கொல்லாம விடப்போறாங்களா. அதுவும் இல்லை.

ஆனா,

நீங்க எல்லாரும் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம். உங்களை மொக்க போட ஒரு ஆள் கம்மியா இருக்கும். உலக அமைதி கிடைக்கும்.

ஏன் இந்த டகால்டி?

எந்த ஒரு வேலைக்கும் ஒரு சின்ன break தேவைதானே. இல்லையென்றால் அந்த வேலை செய்வதில் உள்ள சந்தோஷம் போய் அது ஒரு சடங்காக மாறிவிடும். அதற்காகவும், personal மற்றும் career வேலைகள் சில பல pending இருப்பதாலும், அதை எல்லாம் முடித்து கொண்டு திரும்பலாம் என்பதற்காகவும் எடுத்த முடிவுதான் இது.


இதுதான் சாக்குன்னு நம்மள யாரும் மறந்துடாதீங்கப்பா. கொஞ்ச நாள் கழித்து திரும்பி வரும்பொழுதோ அல்லது உங்கள் வலைப்பக்கம் வரும்பொழுதோ "யாருடா நீ"-ன்னு கேட்டுடாதிங்க. நமக்கு சின்ன heart. அது இடியெல்லாம் தாங்காது.


வாழ்க்கை என்பது
வட்டப்பாதை
மீண்டும் சந்திப்போம்

Sunday, December 03, 2006

சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்



ஒரு ஆயிரம் கோடிகள்
யுத்தங்கள் சந்திக்க துணிவும் இருக்குதே
உன் பார்வைகள் மோதிட
காயங்கள் கண்டிட இதயம் நொறுங்குதே

courtesy: indiaglitz

Thursday, November 30, 2006

பாட்டு மச்சி பாட்டு

Another superb song (Poo poovaai from bala) from Yuvan. This song is not as much popular as other songs(en kannai thirudikol penne, theendi theendi) in this movie, but extremely superb melody. As usual excellent singing by Unnimenon, supported by some fantastic lyrics.

கேட்டு ரசிக்க
http://www.musicplug.in/songs.php?movieid=817

படித்து ரசிக்க

பல்லவி

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்
எங்கள் வீட்டு புதுக்கவிதை

தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை
இவள் எங்கள் கைக்குழந்தை

புல்வெளியினில் நீ போனால்
வெண் பனித்துளி கால் கீறும்

நம் இதயங்கள் நான்கோடும்
இருப்பதெல்லாம் ஓர் துடிப்பே

சரணம் 1

எங்கள் இல்லத்திலே இவள் நாடகம்தான்
இங்கு தேவையில்லை தொலைக்காட்சி


எங்கள் உள்ளத்திலே தினம் பூமழைதான்
நாங்கள் செல்லவதில்லை மலர்க்காட்சி

மழை வந்தால் அதில் நனைவோம்
அன்னை துவட்டும் சுகமும் கிடைக்க

வெயில் வந்தால் அதில் அலைவோம்
தந்தை அதட்டும் இனிமை ரசிக்க


கால் கொண்ட ரோஜா
துள்ளி துள்ளி வந்து
தூனுக்கு பின்னால் நின்று
சிரிக்கிறதே

[பூ பூவாய்..]

சரணம் 2

தாய் கட்டுகின்ற நூல் சேலையிலே
யார் போர்வை என்று அடம் பிடித்தோம்

மொட்டை மாடியிலே ஒரு தட்டினிலே
நெய் சோறு வைத்து உயிர் ருசித்தோம்

ஒரே ஒரே மின்விசிறி
அதன் அடியில் தூங்கி கிடப்போம்

இன்னும் இன்னும் தந்தை தோளில்
சிறு குழந்தையாக இருப்போம்

பூமியில் சொர்க்கம்
உள்ளதென்று சொன்னால்
வேறெங்கும் இல்லை அது
எங்கள் இல்லமே


[பூ பூவாய்..]

Tuesday, November 28, 2006

அடுத்தது என்ன

அடுத்தது என்ன-னு யோசிக்க தேவையில்லாம Tag எழுத சொன்ன தோழி பிரியா அவர்களுக்கு thanks சொல்லிக்கொண்டு.......start music....

பிடிச்ச வாசனைகள் மூணு...

1. புதுசா ஒரு book வாங்கி பிரிச்சி முகரும் போது வரும் paper வாசனை. (கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுதோ இல்லையோ paper வாசனை கண்டிப்பா தெரியும்னு நினைக்கிறேன்)

2. biscuit factory-ya cross பண்றப்ப வரும் வாசனை. (எந்த biscuit-லயும் அந்த வாசனை வருவதேயில்லையே ஏன்)

3. Eucalyptus மரத்தில இருந்து வரும் வாசனை

பிடிக்காத வாசனைகள் மூணு...

1. சிகரெட்

2. அதை பற்ற வக்க கொளுத்தும் தீக்குச்சி

3. பற்ற வைப்பவர் பேசும் போது வரும் கப்பு

பார்த்த(பார்த்து கொண்டிருக்கும்) வேலைகள் மூணு...

1. site அடிப்பது

2. ஜொள்ளுவது (first-க்கும் second-க்கும் difference இருக்கு)

3. முதல் இரண்டும் செய்தது போக நேரம் இருந்தால் வாங்குற சம்பளத்துக்கு office computer-ஐ முறைப்பது

மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தூண்டும் படங்கள் மூணு...

1. இதயத்தை திருடாதே (பயங்கர normal movie....but i love to see it again and again)

2. காதல் கவிதை (காதல் கோட்டை மாதிரி ஒரு மொக்க படத்த எடுத்த அகத்தியனோட கொஞ்சம் super படம்)

3. All feel good movies

மறக்க முடியாத நினைவுகள் மூணு...

மறக்க நினைக்கிற எல்லா நினைவுகளுமே மறக்க முடியாத நினைவுகள் தான்.(எப்படிடா பரணி உன்னால மட்டும்......)

பார்க்க விரும்பும் வேலை மூணு...

ஊரு பக்கம் போயி விவசாயம் பார்க்கனும்....அதான் நான் பார்க்க விரும்பும் ஒரே வேலை

செய்ய விரும்பும் செயல்கள் மூணு...

1. daily ஒரு friend வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு வரனும்

2. எதை பற்றியும் யோசிக்காமல் தூங்கனும்

3. office போகாம வீட்ல இருந்தே work பண்ணனும்

சாப்பிட விரும்பும் உணவு மூணு...

பாசமா யாராச்சும் சமைத்து போட்டா மூணு என்ன முன்னூறு உணவு சாப்பிடுவான் பரணி

இப்போ இருக்க விரும்பும் இடங்கள் மூணு...

1. சொந்தமாக ஒரு வீடு வாங்கி அதில் ஒரு நாளாவது இருக்கனும்

2. சந்தோஷமா இருக்கும் போது நிறைய பேர் இருக்கும் இடம்

3. சோகமா இருக்கும் போது தனியா இருக்கும் இடம்

என்னை அழ வைக்கும் விஷயங்கள் மூணு...

தொட்டதுக்கெல்லாம் அழும் படு பயங்கரமான sensitive ஜீவராசி நான்.

P.S: இத இன்னும் மூணு பேருக்கு tag பண்ணி வாங்கி கட்டிக்க எனக்கு விருப்பமில்லை. So Ensaaaay மக்களே !!!!

Monday, November 20, 2006

blog-ல் மரம் வளர்க்கும் திட்டம்

ஆத்தா ஆடு வளர்த்துச்சி, கோழி வளர்த்துச்சி அப்படின்னு சொன்ன காலம் போயி, எங்கப்பன் blog-ல மரம் வளர்த்தான்னு என் பொண்ணோ, பையனோ சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த வேதா அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த திட்டத்தை யார் ஆரம்பிச்சாங்கன்னு தெரியாது. ஆனா ஆரம்பிச்சவங்க உயிரோட இருந்து இதை படிச்சாங்கன்ன கண்டிப்பா தூக்கு மாட்டிப்பாங்க. என்ன பன்றது, விதி வலியது.

இதுக்கு rules எல்லாம் இருக்காம். நாம boys. so break the rules. To read the rules click here

//வேதா எழுதினதுக்கு முன்னாடி.....

The Unusual Endings
“It was rather strange”, he muttered to himself as he pondered on what had been happening for the past three days, while walking out of the arrogant Italian, Vencelli Darpkink’s 19th century office, which was home not only to its proprietor but also to pugent odours and queer looking sapiens from time to time.Meera Dias, was the name. They had first met when things were quite off note. “Lagos wasn’t a place for summer spots”, he had warned her. What he heard now was troubling him even more. Congo was not something he had suggested either."Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard... //

இது வேதா அவங்க எழுதினது (இந்த பதிவோட ஒரே உருப்படியான விஷயம்)


மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...

ட்ரிங்,ட்ரிங்

'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'

ட்ரிங்,ட்ரிங்

'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'

ட்ரிங்,ட்ரிங்

'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'

இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.

'ஹலோ யாரு?'

'நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்

'அட யாருன்னு சொல்லித்தொலைங்க'

'மீரா பேசுறேன்'

'எந்த மீரா?'

'என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?'

'என்னது? யாருங்க இது?'

'உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.

அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

இனி நாம எழுதவது (கதை எழுதுவதை காதலிப்பவர்கள் இதை படிக்காமல் இருப்பது நல்லது, ஏன்னா இந்த கதை(???) அவங்க ஜீரனத்துக்கு ஆகாது)

சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

நழுவின தொலைப்பேசி, கட்டிலில் இருந்து உருண்டு வந்து கீழே குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்த சுந்தரின் தலையில் "நச்" என்று அடித்தது.

எரிச்சலுடன் கண்விழித்த சுந்தர், தொலைப்பேசியை எடுத்து, "telephone 'அடிக்கிது'ன்னு சொன்னியே அது இந்த அடியத்தானா" என்றான்.

திகிலில் இருந்த சூர்யா, "டேய் phone-ல மீரா-டா" என்றான்.

"யாரு மீரா ஜாஸ்மினா, அவங்களுக்கும் s.j surya-வுக்கும் காதலாமே. நிச்சயதார்தம் கூட நடந்திடுச்சாமே, என்ன கொடுமடா, உலகம் அழிய போறது உண்மை தான் போல."

"டேய் அந்த மீரா இல்லடா"

"பின்ன, P.C Sriram-வோட மீராவா"

"என்ன கொலைக்காரன் ஆக்காத. என் கதையில வராளே அந்த மீரா"

"சர்தான். நேத்து nite-ஏ சொன்னேன் உன்கிட்ட, raw-வா அடிக்காத, உனக்கு தாங்காதுன்னு. இப்ப பாரு இன்னும் தெளியல".

"சனியனே, நான் தெளிவா தாண்டா இருக்கேன். line-ல இருக்கா நீயே பேசு".

சுந்தர் receiver-அ வாங்கி mouthpiece-ஐ காதுல கொடுத்து "அலோ" என்றான் வடிவேலு style-ல்.

டென்ஷனான சூர்யா, "நீ தெளிவா receiver-அ புடி" என்று மாற்றிக்கொடுத்தான்.

சுந்தர் மீண்டும் "அலோ" என்றான்.அந்த பக்கம் இருந்து சத்தம் ஏதும் இல்லை.

ஓரு பாடல் மட்டும் மெல்ல கசிந்து வந்தது.

"ரா ரா....."

P.S: யப்பா சாமி, டங்கு டணால் ஆகிபோச்சி.

இத இப்படியே விட மனசில்லை. அதனால நம்ம சென்னை தோஸ்துகள் சசி (certifiation எல்லாம் முடிச்சிட்டு வந்து ஜாலியா எழுதுங்க) , g3 (ஹி..ஹி...office-ல இருக்கும் போது எழுதுங்க) , பொற்கொடி(நீங்க பயங்கர busy-ன்னு தெரியும், இருந்தாலும் ஒரு ரெண்டு வருஷம் கழிச்சாச்சும் எழுதுங்க) மூனு பேரும் தொடர்ந்து வளர்ப்பாங்க.

Thursday, November 16, 2006

சில உளறல்களும் சில புலம்பல்களும்

நொடி நேர வானவில்லிற்கெல்லாம்
நேரம் ஒதுக்குவதில்லை
நான் நிலா ரசிகன்

நீ
என் இரவின் கனவில்
வந்த பகலில்
கண்ட கனவு

உன்னை
எப்பொழுதும் முதன்முதலாய்
பார்த்து கொண்டிருக்கிறேன்

வருகிறாய் தான்
என் சிறகை நனைக்க
மழையாகவும்
என் கூட்டை கலைக்க
புயலாகவும்

வேண்டும் வேண்டாம்
என்பதில்
முடிகிறது வாழ்க்கை

Courtesy: Vikatan

P.S: "ஏண்டா டேய், உனக்கு சொந்தமாவே எழுத தெரியாதா. எப்ப பாரு அங்க படிச்சது, இங்க கேட்டது, அவங்க பாடினது, இவங்க எழுதினதுன்னு சொல்லிறியே தவிர நீ எதாச்சும் சொந்தமா எழுதினியான்னு" நீங்க பாசமா கேட்கறது எனக்கு கேட்குது.

ஆனா என்ன பன்ன....முடியல...முடியல....எவ்ளோ நாள் தான் நானும் எழுத தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது....

உங்க கதை, கவிதைகளை படித்து ரசிப்பதோடும், உங்க வாழ்க்கையில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளை படித்து அதனோடு என்னோட வாழ்க்கையை இனைத்து பார்த்து கொள்வதோடும், உங்க லொல்லையும் ரவுசையும் படித்து சிரிப்பதோடும், உங்க பதிவில் வரும் "நல்ல" படங்களை பார்த்து ஜொள்ளுவதோடும், உங்க சமூக கோபங்களுக்கு என் ஆதரவை தெரிவிப்பதோடும், உங்களுடைய எல்லா கருத்துக்களுக்கும் ஒரு 'ஓ' போடுவதோடும் முடிந்து விடுகிறது இந்த வலைப்பதிவின் பிறவிப்பயன்.

இதற்கு மேல் நான் ஏதாவது செய்தால் அது கண்டிப்பாக ஒரு உலக சாதனைக்கான முயற்சிதான்.

Tuesday, November 14, 2006

Happy Birthday

திடீர்ன்னு ஆஜராகி என் மானத்தை கப்பலேத்துவதற்காகவே comment போடுகிற தோழி திவ்யாவிற்கு இன்று பிறந்தநாள்.

Helping tendency, standing by friends in their tough time marks her attitude. US-la இருக்கும் போது அப்ப அப்ப நல்ல சாப்பாடு எடுத்துத்து வந்து கொடுத்து புண்ணியம் தேடிக்கிட்டவங்க.

Divyah, Wishing you a very very Happy Birthday(நீங்க ஆசைபடுற மாதிரியே ஒரு நல்ல பையன் உங்களுக்கு வாக்கப்பட என்னோட ஸ்பெஷல் வாழ்த்துக்கள்).

மக்களே நீங்களும் வாழ்த்திட்டு போங்க.

Sunday, November 12, 2006

சென்னையில் ஒரு 'பயங்கர' மழைக்காலம்






கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டுபிடிச்சோம்
சென்னை-ன்னு ஒரு தீவு


Pictures Courtesy: The Hindu
Hykoo Courtesy: Raasathesingu

Friday, November 10, 2006

50 hours extended travel = Eiffel Tower dharisanam

This is what happened.

My flight from Atlanta to Paris got delayed. So i missed the connecting flight from Paris to Chennai. They gave me ticket for Paris to Mumbai on the next day flight. France transit visa was rejected by french police, first time. So airport-laye thevudu kaathen. Then at the end of the day, we asked for visa again and it got approved (Oru friend kaikuzhandayoda irundhaanga...avanga punniyam). Went to hotel at around 6. Enquired about Eiffel tower. Oru 40 minutes agaunu sonnaga. Udane pudi cab. Vaazhkayila idhai parka ellam namba kasu selavupanniya poga porom. Never.

Appa sutta padangalil konjam...

Naan ponenu neenga nambanum illa :)

Namma Eiffel

Avar kattina tower...avar-na avar mattum illenga....niraya per serndhudhaan katinaanga :)

P.S: Vaazhga delta airlines-oda service. Ippadi flight ellam delay panradhula evlo nalladhu nadakuthu...

Thursday, November 09, 2006

Bharani's Fact Book

நம்
தமிழ் பெண்கள் வைக்கும்
ஒற்றை விபூதி தீற்றலின்
அழகிற்கு
ஈடில்லையாம்
ஆயிரம் அமெரிக்க பெண்களின்
அழகு

P.S: Onnung Keezha onnu irukarathunaala idhai pudhu kavidhai-nu neenga nenacha aduku naan porupileengo. Its a straight forward jo...che fact :)

Wednesday, November 08, 2006

Vandhutaanya Vandhutaan

Idly
Ketti Chutney
Kumudam
Vikatan
Saidapettai
Chidambaram
Radio Mirchi...Idhu sema hot-u machi...
Nayar, oru 1/2 special...
2.50 silrai irundha vandiyila yeru...
Auto...auto....
Meteruku mela 10 rooba agumba....
Dei kasumaalam, uttanda sollitu vanthutiya....

Sorgam

Friday, October 27, 2006

நான் என்ன சொல்ல வரேன்னா

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள
சொர்க்கம் இருக்கு

அட சின்ன சின்ன அன்பில்தானே
ஜீவன் இன்னும் இருக்கு


Going Home. Catch You All From The Livelier Chennai :)