Tuesday, April 24, 2007

கிறுக்கல்ஸ்

நெருங்கும் போது
முகம் திருப்பிக்கொள்ளும் தேவதை
நீ
விலகும் போது
முத்தத்தில் கொல்லும் ராட்சஷி
நீ


பிரிந்திருந்த
வெயில் நான்
மழை நீ
மேகத்தை சற்று
ஏமாற்றிவிட்டு
ஒன்றானபோதுதான் தோன்றியது
வானவில்


இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ
இருவரையும் படைத்தது
காதலெனும்
கடவுள்


உன்
உதட்டின் ரேகை
வருடியபோது
வளர ஆரம்பித்தது
என்
ஆயுள் ரேகை


வாழ்க்கை
தவம்
நீ
வரம்


P.S:
மனசாட்சி: ஏண்டா, இப்படி கவிதைங்கற பேர்ல எல்லாரையும் மண்ட காயவைக்கிற?

நான்: அதெல்லாம் ஒரு கொலை, சே, கலை. உனக்கு புரியாது.

ம: கொலையேதான். மத்தவங்களுக்கு மட்டும் புரியுதா என்ன?. எல்லாம் ரத்தகளரியோட தான திரும்பி போறாங்க.

நா: உனக்கு பொறாமை.

ம: ஆமாம். அப்புறம் இந்த காதலை விடவே மாட்டீங்களாடா. ஆளாளுக்கு அத அடிச்சி, தொவச்சி, புழிஞ்சி பாவம் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கு. அத வுட்ருங்களண்டா.

நா: முடியாது. அதெல்லாம் தமிழ் கலாச்சாரம். விட முடியாது. குழந்தை எப்படி முதல்ல அம்மான்னு சொல்லுதோ அது மாதிரி கவிதைன்னா காதல்ல தான் ஆரம்பிக்கனும். அட இதுவே கவித மாதிரி இருக்கே...ஹி..ஹி.

ம: அடங்கொக்கா மக்கா. சரி, இதுக்கெல்லாம் inspiration யாருன்னு எல்லாரும் கேட்கறாங்கல்ல, அதயாச்சும் சொல்லித்தொலையேன்.

நா: inspiration எல்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் perspiration தான். மண்ட காஞ்சி போய் இருக்கற ஒரு நாள்ல, மல்லாக்க படுத்துக்கிட்டு, ஒரு கால இன்னொரு கால் மேல தூக்குபோட்டு, பாதி கண்ணை மூடிக்கிட்டு விட்டத்த பார்த்துக்கிட்டே இருந்தா இது மாதிரி கவிதை எல்லாம் வரும். சென்னை வெயிலுக்கு fan போடாம இருந்தா இன்னும் betterஆ கூட கிடைக்கலாம்.

ம: கடவுளே, இந்த dog கிட்ட இருந்து என்ன கொண்டுபோய் முதியோர் இல்லத்துல வுட்ருங்க. இவன் கூட இருந்து நான் படுற அவஸ்த தாங்க முடியலடா சாமி.

194 comments: