Saturday, March 31, 2007

படித்ததில் பிடித்தது

மரம் சும்மா இருந்தாலும்

        காற்று விடுவதில்லை

மனம் சும்மா இருந்தாலும்

        காதல் விடுவதில்லை !


உதிர்த்தவர்: கரு.பழனியப்பன் (directors எல்லாம் வெளிநாட்டில room போட்டு ஏன் யோசிக்கறாங்கன்னு இப்பத்தான் புரியுது).

படிச்சவுடனே share பண்ணனும்னு தோணிச்சி, அதான் உடனே போஸ்ட்டிடேன்.

மக்கள்ஸ், இந்த postக்கு comment போட்டுகிட்டே இருப்பீங்களாம், நான் அதுக்குள்ள அந்த post commentsக்கு பதில் போட்டு விடுவேனாம்.

ஆங், சொல்ல மறந்துட்டேன். போன postக்கே இன்னும் நிறைய பேர் மொய் எழுதல. மறக்காம அங்கயும் எழுதிடுங்க. இதான் சாக்குன்னு இங்க மட்டும் எழுதிட்டு போக கூடாது.

(எப்படிடா பரணி.....பிண்ற. என்னவோ போடா)

Thursday, March 29, 2007

வர வர வர எல்லாமே weird

ஏற்கனவே காதல் யானை வளர்க்கும் பிரியா ஒரு தடவை tag செய்து என்னுடைய பயங்கரமான ஒரு weird பத்தி இங்கே எழுதியிருந்தாலும், இப்ப பாடும் நிலா மருதம் பாசத்தோட tag செய்திருக்காங்க. பாசத்துக்கு நான் அடிமை (மனசாட்சி: டேய் அடங்குடா, too muchஆ பேசாத). weirdக்கா பஞ்சம். So again, மருதம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு, start meejic...

1. என்னோட பேசும் போது நீங்க உங்க கையால என்ன பண்றீங்களோ, நானும் அதே செய்வேன். நீங்க சொடக்கு போட்டுகிட்டே பேசினா, நானும். நீங்க கையை கட்டிகிட்டு பேசினா, நானும். நீங்க தலை கோதிக்கிட்டே பேசினா, நானும். நீங்க சொறிஞ்சிக்கிட்டே பேசினா....but நீங்க கபால்ன்னு பாஞ்சி என்னோட கையை புடிச்சிக்கிட்டா...me the surrender.

first இது மத்தவங்களோட weirdன்னு நெனச்சேன். அப்பாலதான் புரிஞ்சிது இது நம்மளோடதுன்னு.

2. எனக்கு ஒப்பாரி பாடல்கள் பிடிக்கும் (சரி, சரி...அந்த look வேண்டாம்). sampleக்கு சொல்லனும்னா, பம்மல் k சம்மந்தத்தில் வரும் "ஏண்டி சூடாமனி"யும், விருமாண்டியில் வரும் "மாட விளக்க" பாட்டும் என்னோட fav. இந்த பாட்டயெல்லாம் rewind பண்ணி, rewind பண்ணி கேட்டப்ப என்ன கொல்ல வந்துட்டானுங்கோ என்னோட "உயிர் நண்பர்கள்".

but, என் மனதின் ஏதோ ஒரு வெற்றிடத்தை இந்த பாடல்கள் நிரப்புகின்றன.

3. "ஏண்டா பரணி, சிம்ஸும், சரத்தும் boxing போட்டிக்கிட்டே ஆடுவாங்களே அது என்ன பாட்டு."
"டேய், அது அடிக்கிற கை அனைக்குமா-டா, நட்புக்காக படத்துல வரும்".
"excuse me bharani, நேத்து java 5 traningல boxing feature பத்தி சொன்னாங்களாமே, கொஞ்சம் சொல்லு".
"Oops...sorry sir, மறந்திட்டேன்".

அதே தான். எது ஞாபகத்தில் இருக்க வேண்டுமோ அத correctஆ மறந்துடுவேன். எத மறக்கனுமோ அத மறக்கவே மாட்டேன். இதனாலயே நான் interview attend பண்றதில்ல. நாலு வருஷமா ஒரே companyல இருக்கேன்னா பாருங்க :(

4. என்ன யோசிக்க வைக்கிறது ரொம்ப குஷ்டம், சே, கஷ்டம். ஒரு பத்து மணி நேரம் விட்டத்த பார்த்துக்கிட்டே, Einstein look விட்டுகிட்டு உட்கார்ந்திருப்பேன். என்னடா யோசிக்கிறேன்னு யாரச்சும் கேட்டா no answer. (மனசாட்சி: 'பையித்தியக்கார பய'னு சொல்லுவாங்க, அத சொல்ல மாட்றான் இந்த dog).

இதனாலயே என்னிடம் நீங்கள் எது பற்றி கருத்து கேட்டாலும், அதற்கு positive பதில்தான் கிடைக்கும்.

5. எல்லாரும் night கண்ணு முழிச்சி படிக்க tea குடிப்பாங்க. நான் நல்லா தூங்கறதுக்கு tea குடிப்பேன். (ஹி...ஹி...நீங்க நெனக்கறது புரியுது. but என்ன செய்ய). college daysல எல்லாரும் night 1 மணிக்கு போய் tea அடிச்சிட்டு வருவோம். வந்து எல்லாரும் சுறுசுறுப்பா book எடுப்பானுங்க. நான் அப்படியே படுத்து கொறட்ட விடுவேன் பாருங்க...எல்லாரும் ஒன்னு கூடிடுவானுங்க பொது மாத்துக்கு :)

இப்ப கூட second shift போயிட்டு 12 மணிக்கு வரும் போது, நாயர் கடையில எறங்கி ஒரு SP அடிச்சிட்டு வீட்டுக்கு போய் படுத்தா....சொர்க்கம் :)

சிரி(ங்க) மக்களே, இத இன்னும் அஞ்சி பேரு தலையில கட்டணும். எனக்கு தெரிஞ்சி நிறைய பேர் இத எழுதிட்டாங்க. இருந்தாலும் me tagging

1. Ace (அண்ணே, நீங்க இன்னும் எழுதல இல்ல)
2. Arun (எப்படி அடுத்த postக்கு matter குடுத்தேன், பார்த்தீங்களா)
3. DD (சிஸ்டர், fotoலயே கூட நீங்க எழுதலாம்)
4. Filbert (கண்டிப்பா எழுதிடுங்க, இந்த titleக்காகவாவது :-))
5. Mgnithi (உனக்கு தனியா வேற சொல்லனுமாடா)



Update: @இதுவரை_comment_போட்ட_பாச_மலர்களே....5வது weird சற்றே sentiயாக போனதால், அதற்கு பதிலாக வேறொரு wierd (நான் தான் சொன்னேல்ல...weirdக்கு பஞ்சமில்லைன்னு) போட்டிருக்கேன். அதையும் படிச்சிட்டு புதுசா comment போடுங்க. (மனசாட்சி: ஏண்டா, comment வாங்கறதுக்கு இதெல்லாம் ஒரு வழியா, உருப்படவே மாட்ட நீ...)

Wednesday, March 28, 2007

திங்கள் கிழமைகள்

நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கும் திங்கட்கிழமைக்கும் நட்பிருந்ததாக நினைவில்லை. முடிந்த ஞாயிறின் மிச்சமாகத்தான் இருந்திருக்கின்றன் பாதி திங்கள்கள். பள்ளி, கல்லூரி நாட்களில் "அய்யோடா திங்கள் வந்துவிட்டதே" என்று ஆயாசமாகத்தான் இருக்கும். வகுப்பில் அதிகம் தூங்கியது திங்கட்கிழமைகளில்தான். திங்களன்று நடந்த தேர்வுகளை சரியாக எழுதியதில்லை.

எந்த புதிய வேலையையும் ஆரம்பிக்க திங்கள் வரை தள்ளிப்போடுபவன் நான். கோச்சிங் சேர வேண்டுமா, வாக்கிங் போக வேண்டுமா, புது பாடம் படிக்க வேண்டுமா, இன்னும் ஏன், ஒரு பெண்ணிடம் புதிதாக பேச வேண்டுமா...திங்களில் தான் ஆரம்பம். இப்படி நான் பார்த்து பார்த்து திங்களில் ஆரம்பிக்கும் வேலைகள் பெரும்பாலும் புதனுக்கு மேல் தொடர்ந்ததில்லை. அதனாலேயே திங்கள் பிடிக்காது எனக்கு.

நட்பு இழந்த திங்கள், பரீட்சைக்கு பயந்து அழுத திங்கள், மிகவும் எதிர்ப்பார்த்து மருத்துவம் கிடைக்காத திங்கள், விளையாட்டாய் பேசிய பேச்சொன்று விபரீதத்தில் முடிந்த திங்கள், விபரம் தெரிந்து அம்மாவிடம் அழுத திங்கள் என்று வாழ்வு முழுவதும் மறக்க முடியாத திங்கள்கள் நிறைய.

ட்யூஷன் தோழிக்கு அல்ஜீப்ரா சொல்லிக்கொடுக்க காத்திருந்த திங்கள், நண்பர்களுடன் விடிய விடிய கதை பேசியபடியே விடிந்த திங்கள், வெள்ளி இரவு முழுதும் பேசிய பின்னும், குறைந்த எதோ ஒன்றை பேச காத்திருந்த திங்கள் என்று ஐஸ்கீரிம் தலை செரிப்பழ திங்கள்களும் உண்டு.

ஞாயிறுக்கு பிறகு ஏன் செவ்வாய் வரக்கூடாது என்பது எனது நீண்ட நாள் கனவு.

பாருங்கள், திங்கள் பற்றிய பதிவை செவ்வாய்கிழமை போடும் அளவு திங்களை வெறுப்பவன் நான்.

Thursday, March 22, 2007

cocktail

ஒரு தத்துவம்

எல்லா வெளிச்சமும் இருளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன! (இது மாதிரி எல்லாம் தத்துவம் சுட்டு எவ்ளோ நாளாச்சி கடவுளே)

ஒரு வசனம்

காதலன்(இவர் கவிதை எழுதரவராம்): உனக்கு என்னை பிடிக்குமா, என் கவிதையை பிடிக்குமா?
(பயங்கர புத்திசாலித்தனமா கேள்வி கேட்கிறாராம், அண்ணாத்த)

காதலி: எனக்கு கவிஞனை பிடிக்கும் !
(அண்ணி வச்சாங்க சூப்பர் ஆப்பு)

ஒரு பாட்டு

ஆண்: நீ தாய்மொழி பேசிடும்போது
அந்த ஆங்கிலம் தேம்புது பாரு
அய்யயோ எனக்கு
பாவமா இருக்கு

பெண்: நீ என்னிடம் பேசிடும்போது
மொத்த பெண்ணினம் ஏங்குது பாரு
அய்யயோ எனக்கு
பயமா இருக்கு

ஒரு சினிக்கூ

நீரின் தோளில்
கை போடும்
ஒரு
சின்னத் தீயின்
கதை...

காதல்

பி.கு: மக்களே, உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கும் (இந்த matter எல்லாம் நான் படித்தது and கேட்டது) இது எதுவுமே என்னோடது இல்லனு...அதுக்காக comment போடாம போயிடாதீங்க...இவற்றின் sourceஐ கூட நீங்க commenta போடாலாம்...எப்படி எல்லாம் idea தரேன் பாருங்க comment போட :)

Friday, March 16, 2007

கிறுக்கல்ஸ்

வழி வழியாய்
தேவதைகளுக்கெல்லாம்
ஒரே வேலைதான்
விழி வழியாய்
இதயம் திருடுவது


விண் நோக்கி போவதெல்லாம்
மண் நோக்கி திரும்புவது
ஈர்ப்பு விதி என்றால்
உன்
கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி


உன்
விரல் பிடித்து
நடக்க
காத்திருக்கிறேன் நான்
உன்
நிழல் பிடித்து
நடக்கிறது என்
இதயம்


ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்
நான் பார்க்கிறேன்
நீ முறைக்கிறாய்


உன் கண்
பார்க்கும் பொழுது
நீ மண்
பார்க்கிறாய்
நீ மண்
பார்க்கும் பொழுது
வெட்கத்தில் சிவக்கும்
மண்
செம்மண் ஆகிறது


உன்னை காதலிக்காமல்
இருப்பது நரகம்
உன்னை காதலித்து
இறப்பது சொர்க்கம்


காதல் எனும்
கண்ணாம்மூச்சி
விளையாட்டில்
என் கண்ணை
கட்டிவிட்டு காணாமல்
போனவள்
நீ


மாதா
பிதா
குரு
காதல்



பி.கு: உங்களை எல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு. என்ன பண்ண. போன ஜென்மத்துல ஏதோ பயங்கர பாவம் பண்ணியிருக்கீய. வந்ததுதான் வந்துட்டீக, commentitu போங்க:)

Saturday, March 10, 2007

தீவாளி தத்துவங்கள்

"சுனாமி வருன்னு தெரிஞ்சே சுண்டல் விக்க வந்துருக்கானுங்கோ"

"இவனுங்களுக்கு விதி video games ஆடுது மாமு"

"பில்லு அடிச்சா செவுலு அவுலாயிடும், ஈரல் கீறலாயிடும்"

"சொந்த காசுல சூனியம் வச்சிக்காத மாமு"


இன்னாடா இவன் காக்கா வலி வந்தவன் கணக்கா கூவிகினு இருக்கானேனு மெர்சலாயிட்டீங்களா, காக்கா வலி இல்ல நைனா, தீவாளி.

தீவாளி, தீவாளின்னு ஒரு தலவலி பட்துலதான் இந்த பில்டப்பு டயலாக்கு எல்லாம். heroக்குதான் இத்தா தாண்டி பில்டப்பும். ஆனா காசு குட்த்து பாக்க வந்த நம்மல பாத்து கூவுற மாரியே இர்க்குபா. அத்தும் அந்த நாலம் டயலாக்கு நம்க்குதான்.

போன எட்துல பொங்கலு, சே, தீவாளி குட்த்துடானுங்கோ.

இன்னாத்துக்கு இந்த பட்துக்கு தீவாளினு name வச்சானுங்கோ. டைரக்குடக்கரு பொற்கொடி post பாத்து conceptஅ கபால் பண்ணிட்டாரு போல...ஹி...ஹி

சீக்காளி மாரி இருக்ர பட்துல சோக்காளி கணக்கா இருக்ர ஒரே matter, நம்ம டாவுதான். இன்னா அழ்கு, இன்னா அழ்கு. ஆன்னு பாக்கசொல்ல ஈ ஒன்னு வாயாண்ட போயிடிச்சிபா...அக்..கும்


ஏழு வண்ணங்களின் நிறமா நீ
விண்மீண் தாவரத்தின் விதையா நீ
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ
என்ன நீ...என்ன நீ


பி.கு: கபிலன் நம்ம டாவுக்குன்னே ஷோக்கா எழுதிகின பாட்ல வர்ர lines இது நைனா. இன்னாமா எழுதறாங்கோ. எல்லாம் மொக ராசி.

ஏண்டா கசுமாலம், நீ ஜொள்றதுக்கு ஒரு போஸ்டா. நீ சரக்கு அடிக்க நாங்க ஊறுகாயான்னு கோச்சிகாம comment வாரி குட்த்துட்டு போங்க சாமிங்களா :)