"கலி முத்தி போயிடிச்சி ஆண்டவான்னு யோசிக்கிட்டே 'congrats-da bharani ambi'. "
"thanksங்கண்ணா. எல்லாம் நீங்க கொடுத்த inspirationதான். ""என்னது நான் கொடுத்த inspirationஆ. என்னடா சொல்ற? "
ஆமாங்கண்ணா. Priyaல இருந்து எல்லாரும் உங்களை குழந்தை குழந்தைன்னு கூப்படறாங்களா. ஒரு பெரியவரை எல்லாரும் குழந்தைன்னு கூப்படுறதுனால அவருக்குள்ள ஏற்படுற ரசாயன மாற்றத்தை base பண்ணி தான்ணே இந்த கதையே எழுதினேன். "போடா.... உனக்கு என் மேல பொறாமை"
"நான் இடம் மாற்றம், பணி மாற்றம்ன்னு கொஞ்சம் busyஆ இருந்துட்டேன். actually நான் எழுதின செய்யுள் எல்லாம் collect பண்ணி
அருணின் அட்டகாசங்கள்ன்னு ஒரு தொகுப்பு போட போறேன். அப்ப பாருங்க நான் யாருன்னு"
bala,
gopal,
indianangel,
marutham எல்லாரும் "busyயா இருக்கோம், இந்த மாதிரி மொக்க விஷயத்துக்கெல்லாம் நேர்ல வர முடியாதுன்னு" ஒரு mail மட்டும் தட்டிடாங்க.
"நாம எப்படி பழகி இருக்கோம். என்கிட்ட கதை எழுதுவீங்கன்னு சொல்லவே இல்லையே".
"சொல்லி இருந்தா என்ன பண்ணியிருப்பீங்க dreamzz அவர்களே. ""இந்த பக்கமே தலை வச்சி படுத்து இருக்கமாட்டேன். என்னால இதெல்லாம் தாங்க முடியாதுடா சாமி. நான் உண்டு, என் கவித உண்டுன்னு இருக்கேன். என்னை அப்படியே வுட்டுங்கப்பா"
"Congrats bharani. I know you will do it."
"filbert என்ன வச்சி comedy கீமடி எதுவும் பண்ணலயே""hey bharani கலக்கிட்டீங்க. நான் கூட 25 post போட்டுடேன். எனக்கு இந்த idea தோனலியே. ok. அடுத்தது அப்ப கதைதான். அதுக்கு முன்னால, இதுக்கு ஒரு treat. "
"அதுக்கென்னா குடுத்துட்டா போச்சி. உங்களுக்கு இல்லாத treat-ஆ g3" "என்னது treat. நீங்க குடுக்க போறீங்க. அதை நான் நம்பணும். இப்படி சொல்லி சொல்லியே இது வரைக்கும் 100 treat pending. மவனே ஒன்னு நீ treat தர, இல்ல என்னோட treakகாச்சும் வந்து கட்டிட்டு போ"
"அவன் அவன் பாகம் பாகமா கஷ்டப்பட்டு கதை எழுதிக்கிட்டு இருக்கான். அவனுக்கெல்லாம் விட்டிட்டு."
"என்ன சொல்லிறீங்க gils. ஒன்னும் புரியலையே""இரு நான் போயி முதல்ல
பார்த்த ஞாபகம் இல்லையோவ முடிக்கிறேன். அப்ப புரியும்."
"அடப்பாவி மாப்ள, உன்னை நம்பி நிதியமைச்சரா போட்டதுக்கு, எவ்ளோடா லஞ்சம் குடுத்த? "
"என்ன மாம்ஸ், என்ன சொல்றீங்க? ""அடப்பாவி, அரசு கஜானாவை சுத்தமா தொடச்சிட்டியேடா, அடுத்த வேளை ஆட்சி எப்படிடா நடத்துறது. இப்பவே பொதுகுழுவை கூட்றேன். மாப்பு வச்சிடியேடா ஆப்பு"
"நான் ஏற்கனவே dipika இந்தியாவ விட்டு போக போறான்னு துக்கத்தில இருக்கேன். இதுல இப்படி ஒரு news சொல்லி என்னை total upset பண்ணிட்டீங்களே. இந்த semester நெலமை ரொம்ப கவலையா இருக்கு கடவுளே -
bsk ஏன் உனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது"
"கலக்குற பரணி. இந்த கதை bird watching பத்திதானே. எனக்கு குடுப்பா. tips எதாச்சும் இருந்தா use பண்ணிக்கிறேன்."
"குருவே உங்களுக்கா. why torch for sun. இதுல உள்ளது எல்லாம் நீங்க குடுத்த tips தான்.""அதான பார்த்தேன்.
kkவா கொக்கா. ஹா....ஹா.....ஹா"
"US வந்த உடனே current இல்லாம நானே shockல இருக்கேன். இதுல இன்னொரு shocking newsஆ. என்னால தாங்க முடியாதுடா சாமி.
பொற்கொடி உனக்கு என்ன போதாத நேரமா, where is my ரங்கமனி, இந்த சின்னபொண்ண காப்பாதுங்க"
"what is this bharani. again you have written in tamil. நாலு line தமிழ்ல படிக்கவே ரொம்ப கஷ்டப்படுறேன். இதுல full book-a. OMG
Prithz. மத்தவங்க எல்லாம் ரொம்ப புகழ்றத பார்த்தா, அவ்ளோ கஷ்டபட்டு இத அவசியம் படிக்கனுமா என்ன?"
"if you are not studing this book, you are missing something.""hey bharani, வழக்கம் போல கலக்கிட்டீங்க. "
"என்ன இருந்தாலும் priya, உங்க கண்ணாளனே மாதிரி வராதுங்க. எல்லாம் அந்த inspiration தான். "
"நான் கூட கண்ணாளனே தான் final list-ல இருக்குன்னு கேள்வி பட்டேன். ஆனா அதுக்குள்ள ஏதோ orkuttu, சாரி உள்குத்து நடந்து இருக்கு. தலைவர் சொன்ன மாதிரி நீங்கதான் ஏதாச்சும் பண்ணுனீங்களோ. "
"நீங்க வேற, அசின் double act பண்றாங்கன்னு எல்லா பணத்தையும் தசாவதாரதுக்கு sponser பண்ண சொன்னதே தலைவர்தாங்க. இதெல்லாம் அரசரகசியம். பொது கூட்டத்தில பேசுவோம். அப்பொழுது உண்மைகள் வெளிவரும் என்பதை இந்த நேரத்திலே சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். ""எப்படியோ மாமாவும் மாப்ளயும் சேர்ந்து கண்ணாளனேவ காணாம பண்ணிட்டீங்க. நல்லா இருங்க. "
"ஹாய்டா, கலக்கிட்ட. கதை எல்லாம் எழுதற. எப்படிடா. "
"அது தெரியாமதான் நானே முழுச்சிகிட்டு இருக்கேன்
ரம்யா."
இது கூடவா தெரியல. என்னோட friend ஆயிட்டல்ல அதான்.
"அப்ப நீயும் என்ன மாதிரி super-அ கதை எழுதுவியா. ""ஆமாம். ஆனா நான் எழுதற கதைய எல்லாரும் படிப்பாங்க. ஹி...ஹி"
SKM மேடம் அப்படியே எட்டி பார்க்கறாங்க. "இந்த பய மட்டும் அடங்கவே மாட்டேங்கறானே. நாட்ல யார் யாரயோ encounter-ல போடுறாங்க. இவன் blog எழுதறேன்ற பேர்ல எல்லாரையும் கொல்றானே அதுக்கெல்லாம் encounter இல்லாயா"ன்னு யோசிக்கிட்டே silent-ஆ போயிடராங்க.
திடீர்ன்னு ஒரு trunk call...
"வாழ்த்துக்கள் நண்பா. யார் என்ன சொன்னலும் நான் இருக்கேன் உன்னோட supportக்கு. நீ கலக்கு.
"thanks sasi. இப்பதான் கொஞ்சம் தையிரியமா இருக்கு. இந்த நேரத்தில நீ பழநில இருக்கியே. "
"இதோ இப்ப கிளம்பி வரேன். "
"சாகித்ய அகாதெமிய என்ன சைதாப்பேட்டை figures-ஆ நடத்தறாங்க. "
"ஏன் நாட்டாமை இப்படி ஒரு சந்தேகம். ""இல்ல உனக்கு எல்லாம் குடுக்கறாங்களே அதான். PTI பசங்க nite அடிச்ச சரக்கு தெளியாம எதாச்சும் உளறியிருப்பாங்க. நீ இதையெல்லாம் பெருசா எடுக்காத. நாட்டாமை நான் இருக்கும் போது வேற யாருடா wrong தீர்ப்பு சொன்னது. தோ வரேன். "
"டமால்"ன்னு ஒரு சத்தம். திடீர்ன்னு கண் முழிச்சி பேய் முழி முழிக்கிறான் பரணி. பார்த்தா
"என்ன பரணி, தமிழ் வகுப்புல அதுவும் என்னோட வகுப்புலயே தூங்கறியா. படவா. "
"இல்லீங்க வேதா மேடம். ஒரு சூப்பர் கனவு." "வகுப்புல தூங்கறதே தப்பு. இதுல கனவு வேறயா. என்னப்பா அது. "
"நான் எழுதின கதைக்கு சாகித்ய அகாதெமி award குடுத்து இருக்காங்க. " "அடப்பாவி.
நாளைக்கு வகுப்புக்கு வரும்போது அ-னா, ஆ-வன்னா 10 தடவை imposition எழுதிட்டு வா."
பி.கு: இதில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் கற்பனை அல்ல. ஆனால் அவர்களின் கருத்துகள் எல்லாம் சுத்தமான 100% அக்மார்க் கற்பனை. ஹி....ஹி....ஹி