ஆத்தா ஆடு வளர்த்துச்சி, கோழி வளர்த்துச்சி அப்படின்னு சொன்ன காலம் போயி, எங்கப்பன் blog-ல மரம் வளர்த்தான்னு என் பொண்ணோ, பையனோ சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த
வேதா அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த திட்டத்தை யார் ஆரம்பிச்சாங்கன்னு தெரியாது. ஆனா ஆரம்பிச்சவங்க உயிரோட இருந்து இதை படிச்சாங்கன்ன கண்டிப்பா தூக்கு மாட்டிப்பாங்க. என்ன பன்றது,
விதி வலியது.
இதுக்கு rules எல்லாம் இருக்காம். நாம boys. so break the rules. To read the rules click
here//வேதா எழுதினதுக்கு முன்னாடி.....
The Unusual Endings
“It was rather strange”, he muttered to himself as he pondered on what had been happening for the past three days, while walking out of the arrogant Italian, Vencelli Darpkink’s 19th century office, which was home not only to its proprietor but also to pugent odours and queer looking sapiens from time to time.Meera Dias, was the name. They had first met when things were quite off note. “Lagos wasn’t a place for summer spots”, he had warned her. What he heard now was troubling him even more. Congo was not something he had suggested either."Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard... //
இது வேதா அவங்க எழுதினது (இந்த பதிவோட ஒரே உருப்படியான விஷயம்)
மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...
ட்ரிங்,ட்ரிங்
'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'
ட்ரிங்,ட்ரிங்
'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'
ட்ரிங்,ட்ரிங்
'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'
இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.
'ஹலோ யாரு?'
'நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்
'அட யாருன்னு சொல்லித்தொலைங்க'
'மீரா பேசுறேன்'
'எந்த மீரா?'
'என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?'
'என்னது? யாருங்க இது?'
'உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.
அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...
இனி நாம எழுதவது (கதை எழுதுவதை காதலிப்பவர்கள் இதை படிக்காமல் இருப்பது நல்லது, ஏன்னா இந்த கதை(???) அவங்க ஜீரனத்துக்கு ஆகாது)
சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...
நழுவின தொலைப்பேசி, கட்டிலில் இருந்து உருண்டு வந்து கீழே குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்த சுந்தரின் தலையில் "நச்" என்று அடித்தது.
எரிச்சலுடன் கண்விழித்த சுந்தர், தொலைப்பேசியை எடுத்து, "telephone 'அடிக்கிது'ன்னு சொன்னியே அது இந்த அடியத்தானா" என்றான்.
திகிலில் இருந்த சூர்யா, "டேய் phone-ல மீரா-டா" என்றான்.
"யாரு மீரா ஜாஸ்மினா, அவங்களுக்கும் s.j surya-வுக்கும் காதலாமே. நிச்சயதார்தம் கூட நடந்திடுச்சாமே, என்ன கொடுமடா, உலகம் அழிய போறது உண்மை தான் போல."
"டேய் அந்த மீரா இல்லடா"
"பின்ன, P.C Sriram-வோட மீராவா"
"என்ன கொலைக்காரன் ஆக்காத. என் கதையில வராளே அந்த மீரா"
"சர்தான். நேத்து nite-ஏ சொன்னேன் உன்கிட்ட, raw-வா அடிக்காத, உனக்கு தாங்காதுன்னு. இப்ப பாரு இன்னும் தெளியல".
"சனியனே, நான் தெளிவா தாண்டா இருக்கேன். line-ல இருக்கா நீயே பேசு".
சுந்தர் receiver-அ வாங்கி mouthpiece-ஐ காதுல கொடுத்து "அலோ" என்றான் வடிவேலு style-ல்.
டென்ஷனான சூர்யா, "நீ தெளிவா receiver-அ புடி" என்று மாற்றிக்கொடுத்தான்.
சுந்தர் மீண்டும் "அலோ" என்றான்.அந்த பக்கம் இருந்து சத்தம் ஏதும் இல்லை.
ஓரு பாடல் மட்டும் மெல்ல கசிந்து வந்தது.
"ரா ரா....."
P.S: யப்பா சாமி, டங்கு டணால் ஆகிபோச்சி.
இத இப்படியே விட மனசில்லை. அதனால நம்ம சென்னை தோஸ்துகள் சசி (certifiation எல்லாம் முடிச்சிட்டு வந்து ஜாலியா எழுதுங்க) , g3 (ஹி..ஹி...office-ல இருக்கும் போது எழுதுங்க) , பொற்கொடி(நீங்க பயங்கர busy-ன்னு தெரியும், இருந்தாலும் ஒரு ரெண்டு வருஷம் கழிச்சாச்சும் எழுதுங்க) மூனு பேரும் தொடர்ந்து வளர்ப்பாங்க.