அவனும் அவளும் பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். அவள் கணிணித்தாரகை. அவன் தாவரவியல் மாணவன். அவனுக்கு அவள் மேல் ஒரு ஈர்ப்பு. அவளுக்கும் அப்படித்தான். ஆனால் பள்ளி முடியும் வரை இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை.
பள்ளி முடிந்து, ஒரு நுழைவ்த்தேர்வில் இருவரும் சந்தித்தப்பொழுது பேச ஆரம்பித்தனர். அதன் பிற்கு ஒரு வருடம் ஓயவேயில்லை அந்த பேச்சு. எல்லாமே தொலைபேசியில் தான். எவ்வளவோ விஷயங்களை பற்றி பேசினாலும், ஒரு தடவை கூட அவனுக்கு அவள்மேல் இருக்கும் விருப்பம் பற்றியோ, அவளுக்கு அவன்மேல் இருக்கும் விருப்பம் பற்றியோ பேசியதேயில்லை.
ஒரு நாள் அவள்,
"உங்கிட்ட mailid இருக்கா"
"இல்லை".
"சரி. நான் உனக்கு ஒன்னு createபன்னித்தரேன்".
அவனுக்கு இணையம் பற்றியோ, மிண்ணஞ்சல் பற்றியோ எதுவுமே தெரியாது. அவள் உருவாக்கி கொடுத்த மிண்ணஞ்சலை பார்க்க விருப்பம். தன் வீட்டில் உள்ள ஒருவரிடம் கேட்கிறான்.
"நான் உனக்கு சொல்லித்தரேன்" என்று அவர் அழைத்து போகிறார்.
"உனக்கு mailid இருக்கா?"
அவன் பெருமையுடன் அவள் உருவாக்கி கொடுத்த மிண்ணஞ்சல் முகவரியை தருகிறான்.
"password என்ன".
அவனும் அப்பாவியாக அவரிடம் பாஸ்வோர்டை தந்துவிடுகிறான்.
"டேய் உனக்கு ஏதோ mail வந்திருக்குடா", என்று சொல்லிக்கொண்டே அதை திற்ந்து விடுகிறார்.
அது அவள் அவனுக்கு எழுதிய முதல் காதல் கடிதம்.
ம். கடைசி கடிதமும் கூட.
7 comments:
ஏன் அது கடைசி கடிதம் என விளக்கவும்......
whatever you assume is the reason for it.
Ayyo paavam :-(. Frienda kootitu poyrkalaam,veetla irukaravangala help ketadhuku badhila
Vidhi Yarai vithuchi sollunga...
BTW thats a real story..
by any menas its ur story..
-sudharsan
Eppadida Sudharsan Kandupudicha..Gr8da..Athan Friendship
y boss... nalla aarambichunga... ipdi paniteenga.. pavam antha payyan.. (athu neengala???)
Post a Comment