இந்த எட்டு போடுறது, ரூட்டு போடுறது(??) இதெல்லாம் நமக்கு வராதுங்க. இது தெரியாம G3 மாட்டி விட்டுடாங்க. அவங்க பாசத்துக்கு ஒரு நன்றியை சொல்லிக்கிட்டு,
சரி சமாளிப்போம்.
இந்த எட்டு matters-um என்னை பற்றித்தான். ஆனால், சரி படிச்சி தெரிஞ்ச்சிக்கங்க. Rules ,as usual, are broken as per my convenience.
(0-8): எப்படி இருந்தேன்னு எனக்கு ஞாபகம் இல்லை. வீட்ல விசாரிச்சப்ப சட்டை போட்ட குரங்கு வந்தா வேடிக்கை பார்த்துக்கிட்டு, சாப்பிடும் போது அடுத்தவங்க tiffex boxஅ பார்க்காத, uniform tieஐ கடிச்சிட்டு வந்து அடிவாங்கிக்கிட்டு, வீட்டு வாசலில் அமர்ந்து தெருவில் விளையாடும் பசங்களை வேடிக்கை பார்க்கும் ஒரு பையனாத்தான் இருந்து இருக்கேன்.
(9-16): படிப்பிற்க்காக மாமா என்ன madras கூட்டிட்டு வந்துட்டாங்க. மாமா பேர காப்பாத்த படிப்பு தவிர வேறெதுவும் செய்ததில்லை. ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன். இன்று வரை நான் பெருமையாக நினைக்கும் ஒரே விஷயம் இதுதான்.
(17-24): அடிச்சி புடிச்சி 12 முடிச்சி, medical கிடைக்காம அழுது, engineering படிச்சி, ஒரு வருஷம் அப்படி இப்படி ஓட்டி, tcs join பண்ணி, இதோ 4 வருஷம் ஓடிபோச்சி. என்னை வளர்த்து ஆளாக்கின பெரியம்மாவை இழந்தது மற்ற எதுக்குமே பெருமை பட்டுக்க முடியாம போச்சி.
(25-32): எதோ ஒரு பாவப்பட்ட ஜீவன் என்கிட்ட வாக்கப்பட போகுது. எனக்கு அவள புரிஞ்சி, அவளுக்கு என்னை புரிஞ்சி, சுத்தி உள்ளவங்க கொளுத்தி போடுறதெல்லாம் வெடிக்க விடமா போராடி, வாரத்தில பாதி நாள் satyamல 3 மணி showக்கு ரெண்டு டிக்கெட் போட்டு, foneஅ போட்டு வர சொல்லி, நானும் வேலை பார்க்காம, அவளயும் பார்க்க விடாம....ஷ்ஷ்ஷ்ஷ் ஒன்னும் சொல்றதுக்கில்லை.
(33-40): நானே ஒரு குழந்தை. இதில எனக்கு....நமக்கு இந்த twins, tripletsன்னா ரொம்ப பிடிக்கும். அப்படி எதாச்சும் நடந்து....அடடா அவங்களுக்கு கொஞ்சம் பணம் சம்பாதிக்கனும். அதை விட முக்கியம் அவங்களுக்கு homework பண்ணி குடுக்கனும். ரொம்ப முக்கியம் தாத்தா, பாட்டி கிட்ட அவங்க கதை கேட்டு வளரனும்.
(41-48): இங்க கொஞ்சம் tedious ஆகுது. officல pressure, வீட்ல pressure cookerன்னு ஏகப்பட்ட problems. எப்பவுமே smoothஆ போனா life bore அடிச்சிடும் இல்ல. so கொஞ்சம் போராட்டம். எல்லா நேரத்துலயும் support பண்ற family இருக்கறதுனால அப்படி இப்படின்னு சமாளிக்கிறேன்.
(49-56): உனக்கு தான் திறமை இல்ல. நாங்களும் அப்படியான்னு கேட்டு பசங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சி பெரிய ஆளா ஆகிட்டாங்க. அதுக்கு முன்னாடி ஆளுக்கொரு ஆளு புடிச்சிட்டாங்க. இப்ப அதிகாரம் எல்லாம் அவங்க கையில, நாம என்னத்த சொல்ல. இதுக்கு நடுவில சில உறவுகளின் இழப்புகள். சில உறவுகளின் வரவுகள்.
(57-64): இதுக்கு மேல இருந்து என்னங்க பண்ணப்போறோம்னு better half கேட்க, அதுவும் சரி தான்னு packup :)
மனசாட்சி: சேரன் படம் பார்த்துட்டு வந்த effect. நான் இல்லாத மாதிரியே எழுதியிருக்க.

முக்கியாம பகுதி: நான் மட்டும் மாட்டினா போதுமா. So நான் இவங்களை எல்லாம் மாட்டி விடுறேன்.
1. Ambi
2. Arun
3. Dreamzz
4. k4k
5. Maams
6. Kittu
7. Sumathi
8. Senthil
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்