Wednesday, February 13, 2008

தினம் தினம் காதலர் தினம்

காலை வருகையில்
தொடங்குவதில்லை
நீ
சாலையில் வருகையில்
தொடங்குகிறது என்
நாட்கள்


தேநீர் கொடுப்பதில்லை
உன் புன்னகை
பருகும்போது கிடைக்கும்
அத்தனை புத்துணர்ச்சி


கணிப்பொறி மாணவன்
நான்
ஒரு கன்னிப்பொறியில்
அடைத்தவள்
நீ


உன் தரிசனத்திற்கு
மட்டுமே தரை இறங்குகிறேன்
நான்
இறங்கும் பொழுதெல்லாம்
முழு அடைப்பு அறிவிக்கிறாய்
நீ


உன்னை பார்க்காத
மதியம் மாலை
எல்லாமே
விடியாத இரவு
எனக்கு


நம்பிக்கை இல்லாதவர்கள்
கடவுள் என்கிறார்கள்
நம்பிக்கையுள்ளவர்கள்
காதல் என்கிறோம்


பி.கு: மக்கள்ஸ், எல்லாரும் நல்லா இருப்பீங்கன்னு நம்பறேன். இது சும்மா Valentine's day கொலை முயற்சி. நீங்க feel பண்ணாதீங்க. அப்பாலிக்கா எல்லாரையும் வந்து meet பண்றேன்.

அதுவரை, Happy Valentine's day :)

Corollary: காதலிக்கறவங்களுக்குதான் நாளைக்கு காதலர் தினம். நமக்கெல்லாம் daily daily valentine's day தான் :)

Tuesday, August 21, 2007

Happy Birthday Guru :)

இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் குரு வேதா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீண்ட ஆயுளும், குறைவில்லாத ஆரோக்கியமும், நிறைந்த அன்பும், நடுங்க விடாத செல்வமும், குற்றம் சொல்லாத சுற்றமும், தேவையில் துனை நிற்கும் நட்பும், குன்றாத சந்தோஷமும் என்றும் கிடைக்க அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு :)

Sunday, August 05, 2007

எனக்கு பிடித்த பாடல்

Another superb melody from Illayaraja. மொக்க படமா இருந்தா கூட அதுக்கு அட்டகாசமா பாட்டு போட அவர அடிச்சிக்க ஆளே இல்லை. ஜேசுதாஸும், சித்ராவும் கரையும்...

[பார்க்க]

சொர்க்கத்தின் வாசற்படி

சித்தாரா சூப்பர் :)

[படிக்க]

[பல்லவி]

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக்கனவுகளில்

பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக்களஞ்சியமே

சின்ன மலர்க்கொடியே
நெஞ்சில்
சிந்தும் பனித்துளியே

[சரணம் 1]

உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்
ஒன்றிரண்டு அல்லவே

ஒன்றுக்குள் ஒன்றான நீர் அலைகள்
என்றும் இரண்டல்லவே

சிற்றன்ன வாசலின் ஓவியமே
சிந்தைக்குள் ஊறிய காவியமே

எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீ ஆட தோள் கொடுப்பேன்

மோகத்தில் நான் படிக்கும்
மாணிக்கவாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம்
நீ தந்த யாசகமே


[சொர்க்கத்தின் வாசற்படி...]

[சரணம் 2]

உன்னாலே நான்கொண்ட காயங்களை
முன்னும் பின்னும் அறிவேன்

கண்ணாலே நீ செய்யும் மாயங்களை
இன்றும் என்றும் அறிவேன்

மின்சாரம் போல்எனை தாக்குகிறாய்
மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்

கண்ணே உன் கண் என்ன வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால் வீழ்த்திடுமோ

கோட்டைக்குள் நீ புகுந்து
வேட்டைகள் ஆடுகிறாய்
நான் இங்கு தோற்றுவிட்டேன்
நீ என்னை ஆளுகிறாய்


[சொர்க்கத்தின் வாசற்படி...]

P.S: எல்லோருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :)

Sunday, July 29, 2007

நீங்கள் இல்லாமல்...

எலே பரணி, என்னலே blog பக்கமெல்லாம் உன் பொறந்தநாள் திருவிழா கணக்கா இருக்குது.
அட ஆமாலே, எல்லாம் நம்ம சிநேகிதக்கார புள்ளங்கதாம்லே. அசத்திபுட்டாங்க.

பாசக்கார பய புள்ளகளா இருப்பாக போல, எங்க போனாலும் ஒரே வாழ்த்து பதிவா இருக்குலே.
ஆமாலே, பதிவு, போனு, இமெயிலு, கமெண்டுன்னு திக்கு முக்காட வச்சிடாங்கலே.

குடுத்துவச்சவம்லே நீ. திரும்ப என்ன பண்ண போறம்லே?
அதாம்லே எனக்கும் தெரியல. இவ்ளோ அன்புக்கு தகுதியிருக்கான்னு தெரியலலே.

கடவுள்னு ஒருத்தர் இருந்தா, அவர் எப்பவும் இவங்க கூடவே இருந்து இவங்க எல்லாரையும் பாத்துகனும்லே.

அட கிறுக்குபயலே, இதுக்கு ஏம்லே கண்ணுல தண்ணி வக்கிறே?
எலே பக்கதில யாரோ வெங்காயம் வெட்றாங்கலே....

P.S: ஊருக்கு போயிட்டேன். அதனால் தான் நன்றி நவிலல் சற்று தாமதமாகிவிட்டது. ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன்.


நீங்கள் இல்லாமல்...நான் இங்கு இல்லை...இல்லை

Tuesday, July 24, 2007

காதலும் காதல் நிமித்தமும்

1. ஒரு tagஅ ஒரு தடவை எழுதறதே ரொம்ப கஷ்டம். இப்பலாம் எல்லா tagயும் ரெண்டு தடவை எழுதறேன்.(அந்த அளவுக்கு வெட்டி இல்ல, மக்கள் அந்த அளவு பாசமா இருக்காங்க. அந்த பாசத்துக்கு நான் அடிமை).

2. குருவின் ஆணைக்கு பனிந்து(பயந்து) இந்த கவிதை tagஐ தொடருகிறேன். (குரு, வேணுன்னே வேணுன்னே தானே என்னை மாட்டி விட்டீங்க)

3. குருவின் புது விதியின் படி கவிதை கடைசியாக Dreamzzஇடம் கொடுக்கப்பட வேண்டும். (அப்பாடா நிம்மதியா இருக்கு....என்னை மட்டும் மாட்டி விட்டீங்கள்ள...நல்லா வேணும்)

4. நான் அடுத்து tag செய்வது All in All அழகுராஜா மாம்ஸ் கார்த்திக் :)

குரு நன்றே முடித்தது:

கேள்விக்கு பதில்தேடி
கோவிலின் படியேறினேன்
என் தெய்வத்தை தரிசிக்க!

இனி என் கொலை:

வரம் வேண்டி
கோவில் வந்ததுண்டு
வாழ்க்கை வேண்டி

முதல் முறை

இதயத்தின் பயன்
சுவாசிப்பது
நேசிப்பது

நேசிக்காமல்
சுவாசிக்கும்
இதயம் இருந்து
என்ன பயன்

உன்னை நேசித்தேன்

க ங ச
தெரியாது எனக்கு
கவிதை எழுத
தொடங்கியதெல்லாம்
உன் கண்களில்
படித்த பின்புதான்

கண்களில் தொடங்கி
காதல் வரை
படித்துவிட்டேன்

தேர்வு இன்று

முடிவு பற்றி
அக்கறையில்லை
முயற்சிதான் முக்கியம்
வெளியே சொன்னாலும்
உள்ளுக்குள் அதிரும்
இதயம்

ஊரையே எழுப்புதடி

காதல் மேல்
நம்பிக்கை வைத்து
வந்துவிட்டேன்

என் வழி தேடி
உன் விழி தேடி

ஏனெனில்

நல்லன எல்லாம் தரும்
அவளின் கடைக்கண்களும்!

Tuesday, July 17, 2007

Thinking blogger awards 2007



Update: மக்களே, எல்லாரையும் பற்றி எல்லாரும் comments sectionல பேசி இருக்காங்க. எல்லாரும் miss பண்ணாம படிங்க. ஒரு postஆ போட வேண்டிய விஷயங்கள் எல்லாம் commentsல். நன்றி ஹை :)

வழங்குவது பரணி.

Supported by Marutham (Thanks for the tag, Marutham. But இந்த tagஅ நான் கொஞ்சம் customize பண்ணிட்டேன். Sorry for that :-)

1. All in All: கதை, கவிதை, கட்டுரை, பயணக்கட்டுரை, சினிபிட்ஸ் எல்லாத்த பத்தியும் எழுதும் மாம்ஸ் மு.க. அவர் அளவுக்கு எழுதறதுக்கு 10,15 assistants போட்டா கூட நடக்காது.

2. கவிப்பேரரசி: குரு வேதா அவர்களின் கவிதைக்கு நான் அடிமை. எல்லா விஷயத்த பற்றியும் இவங்களால கவிதைல சொல்ல முடியும். அவங்க தமிழ் ஆற்றலுக்கு நான் எப்பவும் சிஷ்யன்.

3. (காதல்)கதைச்செல்வி: கதை, அதிலும் காதல் கதை எழுதறதுக்கு பிரியாவை அடிச்சிக்க இன்னொருத்தர் புதுசா பொறந்துதான் வரனும்.

4. Comedy Kings: அம்பி, அருண், ஷ்யாம் இவங்க அளவுக்கு comedyயா எழுத யாரும் இருக்கர மாதிரி எனக்கு தெரியல ('இத விட கம்மியான காசுக்கு washing machine வேனுன்னா நான் தான் உங்க வீட்டுக்கு தொவச்சி போடனும்'...இந்த dialog ஒரு sample தான்). இவங்க மூனு பேரும் ஒன்னுகூடினா சுத்தி இருக்கறவங்க கண்ணில் நீர் (சிரிச்சி...சிரிச்சி). (பி.கு: அண்ணன்s நான் உங்களை வச்சி எதுவும் comedy பண்ணல. நம்புங்க :)

5. குட்டிப்பொண்ணு: ரம்யா. blog உலக செல்லப்பொண்ணு. இவங்க போடுற postaவிட commentsதான் famous. commentsல ஆப்பு வைப்பதில் specialist. smithaன்னு ஒரு 2 வயசு குழந்தைய நான் கூப்பிட, அது வாராம போக, அதுக்கு 'smithaa paathu adicha kannu, ava kudutha unnaku bun-u'ன்னு இவங்க போட்ட commentஅ படிச்சி ஊரெல்லாம் என்ன பார்த்து கை கொட்டி சிரிச்சத....இப்ப நெனச்சாலும்....பாசக்கார பொண்ணு.

6. பாடும் நிலா: மருதம். blog உலக பாட்டுக்குயில். தியேட்டர் போய் படம் பார்க்காத இவங்க பாட்டு எல்லா தியேட்டர்லயும் ஒருநாள் கேட்க போகுது. "நின்னை சரனைடைந்தேன்" என்னோட fav. பாட்டு மட்டும் இல்லீங்க, dancer, superஆ glass painting பண்ணுவாங்க, பயங்கர padips...எல்லாத்த விட superஆ bulb வாங்குவாங்க :)

7. வாழ்த்து Specialist: G3. எல்லாரோட birthday, blogger meet, marriage இப்படி எந்த நாள் ஆனாலும் அவங்கள வாழ்த்தி, functionஅ அப்படியே தத்ரூபமா retelecast பண்ணுவதில் இவங்களுக்கு இணை இவங்க தான். 3000 comments வாங்கி கின்னஸ் bookல இடம் பிடித்து இருப்பதுதான் இவங்களோட latest சாதனை.

8. பாட்டுக்குயில்கள்: kittu maama and maami. made for each other. அவங்க duets எல்லாம் கேட்க குடுத்து வச்சி இருக்கனும். 'சகலகலாவல்லவனே'ன்னு இவங்க maamsஅ பார்த்து பாடுறதும், 'உருகுதே மருகுதே' அவர் மாமியை பார்த்து பாடுறதும் செம romantic.

9. விஜய T.R: Gops. post-o, comments-o எங்க போனாலும் T.R மாதிரி நாலு கவிதை(???) போட்டு கலாய்ப்பதில் மண்ணன். அதே மாதிரி எல்லாத்த பற்றியும் எழுதுவான். கருப்பு கண்ணாடி, ஜன்னல், slam book இப்படி எத பத்தி வேனாலும் எழுதறதுல இவனும் ஒரு allrounder.

10. Comedy Queens: Porkodi, MyFriend. பொண்ணுங்க இந்த அளவுக்கு comicஆ எழுதுவாங்கலான்னு நான் ஆச்சரிய படுறது இவங்கள பார்த்துதான். அதிலும் கொடி பண்ற ரவுசுக்கு அளவே இல்ல. ரங்கமணி எப்படி சமாளிக்கறாரோ :)

11. தத்துவஞானி: dreamzz. எப்ப எப்படிபட்ட post போடுவார்னே தெரியாது. 'தேவதை ஊர்வலம்' ஒரு நாள் light weighted கவிதை போட்ட மறுநாள் 'சாதிகள் இல்லையடி பாப்பா'ன்னு heavy duty post போடுவாரு. இவர் எழுதற நிறைய விஷயத்த புரிஞ்சிக்கற அளவுக்கு எனக்கு வயசு பத்தாது :)

12. Bold Comment Bro: k4k. 25அ 25 தடவை, 500அ 500 தடவைன்னு boldல comment போட்டு அலற வைப்பதில் கில்லாடி. இவரோட comedyக்கும் நான் ரசிகன். அண்ணிக்கிட்ட அப்பளக்கட்டையால வாங்கின அடியை எல்லாம் மறைத்து சமாளிச்சி சிரிக்கும் leher :)

13. Science Student: Raji. படம் போட்டு பாகம் குறிப்பதில், சே, கவிதை போடுவதில் பயங்கர பெரியவங்க.

14. இங்கிலீஷ்க்காரங்க: KK & Prithz. இவங்க post எல்லாம் படிச்சி பாதி நேரம் stomach burn தான். எப்படி englishல இவ்ளோ interestingஆ post போட முடியும் யோசிச்சே பாதி நாள் no sleep. அதிலயும் englishல comedy பண்ற kkக்கு ஒரு சலாம்.

P.S: இந்த tag actually எப்படி இருக்கனும்னு தெரிஞ்ச்சிக்க இங்க படிங்க. நான் கொஞ்சம்(????) மாத்திட்டேன். இதில் நான் குறிப்பிட்டுள்ள எல்லாரும் அவங்களுக்கு புடிச்சவங்களுக்கு இந்த awards குடுக்காலாம்.

post கொஞ்சம்(????) பெருசா போயிடிச்சி. பாத்து போட்டு குடுங்க. இந்த postக்கு நீங்க comment போடுறதுக்குள்ள் போன postக்கு நான் reply போட்டுடறேன். அடிக்க வராதீங்க pls...

Monday, July 16, 2007

Random Thoughts

ஒன்னுமே புரியல உலகத்துல
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது.

கடவுளே, நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாத்து
எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.

உங்கள் நண்பர்களிடம் அன்பு கொள்ளுங்கள்,
அன்பை ஆயுதமாக்கி கொல்லாதீர்கள்.

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதை கடையில் தேனீர் குடிப்பேன்.

சாலையில் நானாக போனதும் இல்லை
சமயத்தில் நானாக ஆனதும் இல்லை.

உன்னை காதலிக்க காரணம் எல்லாம் தேவையில்லை
அப்படி தேவையென்றால் அது காதலாகவே இருக்கட்டும்.

புது உலக அதிசயம்ன்னு யாரோ ஒரு dog சொன்னத நம்பி மாஞ்சி மாஞ்சி ஓட்டு போட்ட நாம எல்லாம் புத்திசாலிங்க. மாத்தி மாத்தி dmkக்கும் admkக்கும் ஓட்டு போடுறவங்க கேனையனுங்க.

இன்னைக்கு busல வந்த மஞ்ச சுரிதார் சூப்பரப்பு. என்ன projectனு நாளைக்கு விசாரிக்கனும்.

என்னைக்குதான் உருப்படியா ஒரு post போடப்போறேனோ.

P.S: ஒரு 5 நிமிடம் என்ன மனசில ஓடுதுன்னு observe பண்ணினப்ப வந்த matters இதெல்லாம். இன்னும் நிறைய தோனிச்சி. some are not suitable to write. refined matters மட்டும் இங்க. மனசு ஒரு dustbinனு சும்மாவா சொன்னாங்க :(